திரு.றஞ்சனதாஸ் அவர்களின் பிரிவுத் துயரில் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமும்
கனடா வாழ் வல்வை மக்களும் பங்கு கொள்கிறோம்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2014 (சனிக்கிழமை)
திரு.றஞ்சனதாஸ் காத்தாமுத்து அவர்களின் பிரிவுத் துயரில் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமும் கனடா வாழ் வல்வை மக்களும் பங்கு கொள்கிறோம்.
அன்னபூரணியின் அமரிக்க பயணத்தின் 75ம் ஆண்டு நினைவு நிகழ்வில்
திரு.றஞ்சனதாஸ் அவர்கள், தந்தை வழியில் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலின் நிர்வாகத்தின் செயலாளராக இருந்து பணியாற்றியதுடன், அண்ணன் வழியில் பல கப்பல் ஏறி பொறியியலாளராக உயர்ந்து, பின் நாட்களில் வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவராக இருந்து வல்வை வளம்பெற பணியாற்றி உள்ளார். அவரின் ஆத்மா சாந்தி அடைய நெடியம்பதியானை வேண்டியும் அவரின் மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கும் வல்வை வரலாற்று ஆவணக்காப்பகமும், கனடா வாழ் வல்வை மக்கள் சார்பிலும் ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.
கனடா வாழ் வல்வை மக்கள்
வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்
Images of Valvai
15- 02- 2014.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.