நெடுந்தீவில் சிதைந்த நிலையில் காணப்படும் வெடியரசன் கோட்டை குறித்த சா்ச்சைகளை அண்மைக்காலத்தில் ஊடகங்களில் படிக்க முடிகின்றது.
கி.மு 200 இல் வாழ்ந்ததாக அறியப்படும் விஷ்ணுபுத்திர வெடியரசன் என்று அழைக்கப்படும் இம் மன்னர் நெடுந்தீவு, காரைநகர் போன்ற இடங்களில் தன்வம்சத்தோடு ஆட்சி செய்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களம் வெடியரசன் கோட்டையின் சிதைவுகளைப் பாதுகாப்பதற்கு இதுவரையில் எதனையுமே செய்யவில்லை என்பதை அந்தப் பகுதிக்கு சென்ற போது அறியமுடிகின்றது.
ஆனால், இது ஒரு பௌத்த சின்னம் எனக் காட்டுவதற்கான முயற்சி மட்டும்தான் கடந்த வாரத்தில் அவா்களால் மேற்கொள்ளப்பட்டது. சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டும் எழுதப்பட்ட அறிவித்தல் இந்தப் பகுதியில் வைக்கப்பட்டது.
தமிழ்த் தலைவா்கள் அதனை எதிா்த்தாா்கள். அதேவேளையில் இந்த அறிவித்தல் சிலரால் பிடுங்கி எறியப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
இதனையடுத்து நெடுந்தீவில் கடற்படையினா் நிலைகொண்டுள்ள ஜெற்றியில் இந்த அறிவித்தல் இப்போது காட்சியளிக்கின்றது.
யாழ்ப்பாணத்திலேயே அதிகளவு தொல்லியல் சின்னங்களைக் கொண்டுள்ள தீவாக நெடுந்தீவு இருக்கின்றது. அவற்றைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் எதனையும்தான் காணவில்லை.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.