ஆதவன் பக்கம் (43) – கவிழ்ந்த தேரும் நிமிர்த்திய திறமையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2018 (சனிக்கிழமை)
முப்பது ஆண்டுகள் முன்பு, 88 ஆம் ஆண்டு அம்மன் கோயில் திருவிழா வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரம்.
சப்பறத் திருவிழாவுக்கு முதல்நாள் என்று நினைக்கின்றேன். இரவுத் திருவிழா முடிந்தகையோடு தேர்த் திருவிழாவிற்கு முன்னேற்பாடாக முருகப்பெருமான் மற்றும் விநாயகப்பெருமான் சித்திரத்தேர்களை வெளியே கொண்டு வந்து நிறுத்துவதற்காக அங்கு நின்றோர்கள் கூடினார்கள்.
முருகப்பெருமானுடைய தேர்
சிறிய தேர். சீமெந்து தரையிலிருந்து நேரே இழுத்து, சிறிது தூரத்தில் வெளியே விடுவது மட்டும் தான். தேரை இழுக்க வெளிக்கிட்டார்கள்.
நானும் அங்கே தேரை இழுத்தவர்களில் ஒருவன். வயது குறைந்தவன் என்ற காரணத்தால் வடத்தை முன்னுக்கு நின்று பிடித்தேன்.
கணிதம் பிழைத்திருந்ததை அவதானித்தேன்.
‘அரோகரா’ என கரகோஷம் இட தேரும் உருண்டது. உள்ளே சீமெந்திலாலான சம தளத்திலிருந்து வேகமாக உருண்ட தேர், கொட்டகையின் முற்பக்கமாக மண்ணை நோக்கிப் போடப்பட்டிருந்த சாய்வுப்படி வழியே மேலும் வேகமாக உருண்டு ‘படார்’ என்று முற்றாகச் சரிந்தது. மண்ணுடன் மோதிய தேரின் பாகம் சேதமும் அடைந்தது.
சாய்வான படியைக் கட்டும்போது கணிதத்தைக் கவனத்தில் எடுக்காதது தான் தேர் கவிழக் காரணம். அதாவது படியின் சாய்வுக் கோணம் அதிகமாக இருந்ததால், தேர் நிலக்குத்திலிருந்து சரியும் கோணமும் அதிகமாக, தேரின் புவியீர்ப்பு மையம் வெளியே விலகி தேரைக் கவிழ்த்துவிட்டது.
ஊர்த் திருவிழா என்றால் சந்நிதி கோயில், வல்லிபுரக் கோயில் திருவிழா மாதிரி அல்ல. திருவிழா நிகழ்வுகள் முடிந்த கையோடு பக்தர்கள் மாயமாவது வழமை. எங்களைப் போல் கோயிலைச் சுற்றியுள்ளோர், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் சிலர்தான் திருவிழா முடிந்த பின்னரும் தொடர்ந்து நிற்பது வழமை.
அன்றும் அப்படித்தான், சிலர் தான் நின்றிருந்தார்கள். தேர் சரிந்த விடயத்தை கூற சுற்றியுள்ளவர்கள் உடனே கூடிவிட்டார்கள்.
இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம்.... எனக்கூறி ஒரு மணி நேரத்தில் எப்படி தேரை உயர்த்துவது என்று முடிவெடுத்தார்கள்.
உச்சியிலிருந்து படிப்படியாக உயர்த்தி தரின் அடிப்பாக வரை கொண்டு வந்து ‘அரோகரா’ என உரக்கக் கூறி ஒரே மூச்சில் உயர்த்தினார்கள். சில நிமிடங்கள் தான்.
தேர் கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. உடைந்த பகுதிகளையும் அங்கு நின்ற மர வேலை தெரிந்தவர்களைக் கொண்டு சரி செய்ய வெளிக்கிட்டார்கள். இரவானதால் நான் வீடு சென்று விட்டேன்.
விடிய வந்து தேரைத் தான் முதலில் பார்த்தேன். தேர் முதல் நாள் சரிந்ததுக்கான எதுவித அடையாளமே தெரியவில்லை. பலருக்கும் அன்றும் சரி இன்றும் சரி இப்படி ஒரு நிகழ்வு இடம்பெற்றது பற்றியே தெரியாது.
அன்றும் அங்கு நின்றவர் திறமை பார்த்து வியந்தேன், இன்று நினைத்தும் வியப்பேன்.
வளர்ச்சி அடைந்த நாடு ஒன்றில் இது போன்ற ஒரு சம்பவம் இப்பொழுது நிகழுமானால் முதலில், தீயணைப்புகாரர், பின்னர் மீடியாகாரர்கள், பாரம் தூக்கிகள், ஆம்புலன்ஸ், ஹெல்மட் போட்ட வேலையாட்கள், நிமிர்த்துவதால் வரக்கூடிய ஆபத்துக்கள் பற்றிய ஆய்வு (Risk assessment) என பெரிய பிரளயத்தின் மத்தியில் தான் தேர் நிமிர்ந்திருக்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: April 29, 2018 at 09:03
சிறப்பு
jlingam (uk)
Posted Date: April 29, 2018 at 07:29
உண்மையில் நானும் இதைப் பார்த்தேன். அந்த நாளில் அடுத்த நாளில் அதில் எதுவும் பலபேருக்கு இது நடந்ததே தெரியாது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.