வல்வை பட்டத் திருவிழா பற்றி ட்விட்டரில் நாமல் ராஜபக்ஸ
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2021 (புதன்கிழமை)
எதிர்வரும் 14 ஆம் திகதி வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெறவுள்ள 'வல்வை பட்டத் திருவிழா' பற்றி இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. நாமல் ராஜபக்ஸ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் திரு. நாமல் ராஜபக்ஸவுக்கும் பட்டப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பை அடுத்தே குறித்த பதிவு இடம்பெற்றுள்ளது.
உள்ளூரில் நடைபெறும் இந்தப் பட்டப் போட்டியை சர்வதே ரீதியாக எடுத்துச் செல்வதற்கு, சர்வதேச ஊடகங்களும் இராஜதந்திரிகளும் இந்த நிகழ்வுக்கு வரவேண்டும் என தான் அழைப்பு விடுப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் திரு.நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.