யாழில் நாடகமும் அரங்கியலும் இரு ஆண்டு கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண சுண்டுக்குளிக் கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. டவர் நாடகப் பாடசாலை 1997 ஆம் ஆண்டு நாடகம் மாற்றும் அரங்க கலைகள் ஓராண்டு முழுநேர டிப்ளோமா சிங்கள மொழி மூலமாக மருதானை சரசவிபாயவில் ஆரம்பித்தது.
இதன் விரிவாக்கமாக 2022, 2023 ஆண்டு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு தமிழ் மொழி மூலமான உயர் நாடகமும் அரங்கியலும் டிப்ளோமா பாட நெறி 70 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கிளையான யாழ்பாணத்தில் தமது கல்விமாணிப் பட்டத்தினை தொடரலாம்.
க.பொ.த சாதாரண தரத்தில் 06 பாடங்களில் கட்டாயம் சித்தியடைந்திருத்தல் வேண்டும். மற்றும் க.பொ.த உயர்தரபரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் ஏதாவது ஒரு அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அத்துடன் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைப் படித்த மாணவர்களுக்கு முன்னுரினை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.