உயிரüக்குப் போராடும் நிலையிலும் சிவலிங்கத்துக்கு அழைப்பாணை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2026 (சனிக்கிழமை)
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரüக்குப் போராடிவரும் நிலையிலும், அநுர அரசாங்கம் விசாரணைகள், கெடுபிடிகள் என்று அவரைத் துரத்தி வருகிறது – இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான சிறீகாந்தா விசனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரபிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்களுக்கு அண்மையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மாற்று சத்திரிகிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
தற்பொழுது அவர் மந்திிகை மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் சென்ற பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடுமையான கடுமையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், சிவாஜிலிங்கத்தை வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அன்று வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிவரும் நிலையிலும் அநுர அரசாங்கம் இவ்வாறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறது – என்றார் என நேற்றைய யாழ் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.