கடந்த மே மாதம் 5 ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற உள்ளூர் தேர்தலில் வல்வை ரேவடியைப் பூர்வீகமாக கொண்ட செல்வி சர்மிளா வரதராஜ் வெற்றி பெற்று 'Wandswoth' இன் வான்ஸ்வேர்த் சபையில் (Wandsworth council) இன் துணை மேயராக பதவி ஏற்றுள்ளார். துணை மேயராக பதவியேற்ற செல்வி ஷர்மிளா தனது கன்னி உரையை கடந்த 22 ஆம் திகதி New wandle ward இல் நிகழ்த்தியிருந்தார்.
தற்போதைய உலகளாவிய மனித பேரவலங்களை மையப் படுத்தி - அதாவது உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள அத்துமீறிய இராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரேன் நாட்டு மக்களின் இடப் பெயர் வுகள், மற்றும் இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் இடம்பெறும் பாரிய நெருக்கடிகள் காரணமாக இடம்பெறும் மக்கள் இடப்பெயர்வுகள் பற்றியும், அவ்வாறு இடம் பெயரும் அகதி களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் பற்றியும் தனது கன்னி உரையில் தெரிவித்துள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.