வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் புயலாக மாற வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2026 (சனிக்கிழமை)
கடந்த சில தினங்கள் முன்பு மத்திய அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல்மட்ட காற்று சுழற்சியின் தாக்கத்தால், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியதுடன், நேற்றய தினம் 13 ஆம் தேதி நவம்பர் 2026, 0300 UTC அன்று அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நவம்பர் 14 ஆம் தேதி நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்தப் பகுதியாக (Low Pressure) மாறி, நாளை நவம்பர் 15, 2026 இன் காலையில் அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரமடையக்கூடும் என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பிறகு, இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 ஆம் தேதி மாலைக்குள், மத்திய வங்காள விரிகுடாவில் மேலும் தீவிரமடைந்து வெப்பமண்டலப் புயலாக மாறக்கூடும் என இந்திய வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.