வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, மற்றும் கனடா ரொறன்ரோ, பிரம்டன் ஆகிய இடங்களில் வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி வேலுப்பிள்ளை அவர்கள் பெப்ருவரி 24 திங்கட்கிழமையன்று பிரம்டனில் காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, மற்றும் கனடா ரொறன்ரோ, பிரம்டன் ஆகிய இடங்களில் வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பராணி வேலுப்பிள்ளை அவர்கள் பெப்ருவரி 24 திங்கட்கிழமையன்று பிரம்டனில் காலமானார்.
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், ராசரத்தினம் (கண்டக்கா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மோகன் (ஓய்வுபெற்ற மேலதிக பணிப்பாளர் நாயகம் – வீதி அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு), சுமதி (நியூ சிலாந்து), இந்துமதி (மாலதி - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. சறோஜினி (LRH - கொழும்பு), யுவராஜன் (நியூ சிலாந்து), உதயச்சந்திரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷர்மிளா, விஷ்ணுபிரசாத், கிரிஷாந்த், அபர்ணா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகமுத்து, குமாரசாமி, ஆறுமுகம், மற்றும் மகமாசிதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற துரைரத்தினம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்-பருத்தித்துறை), மற்றும் சுசீலா, பருவதாவர்த்தினி, இராஜேஸ்வரி, சிவலிங்கம், ஈஸ்வரலிங்கம், தங்கநாயகி, கெளசல்யா, மணிமொழி, சற்குணபாலன், திருமனைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, செல்லப்பாக்கியம், இராஜேந்திரா மற்றும் புஸ்பராஜமணி (அவுஸ்திரேலியா), சறோஜினிதேவி (இங்கிலாந்து) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மார்ச் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5 மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 3ஆம் திகதி திங்கட்கிழமையன்று 10 மணி முதல் 12 மணி வரை அதே இடத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.