ஜோர்டான் நாட்டின் அக்காபா (Jordan's Aqaba Port) துறைமுகத்தில் இன்று காலை கப்பல் ஒன்றில் சரக்கு ஒன்றை ஏற்ற முற்பட்ட பொழுது, அது தவறுதலாக கீழே விழுந்ததில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
Hong Kong இல் பதிவு செய்யப்பட்டுள்ள MV Forest 6 என்னும் Multi-purpose cargo and heavy lift vessel இல், 25 டன்கள் நிறையுடைய கொள்கலனில் அடைக்கப்பட்ட குளோரின் (chlorine) வாயுவை ஏற்ற முற்பட்ட போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டது. இதில் 10 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், நூற்றுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கீழே CCTV இல் பதியப்பட்ட காணொளியில் வெடிப்பு சம்பவம் ஏற்படும் பொழுது 200 மீட்டர்களுக்கு அப்பால் வரை தீப் பிழம்பு மஞ்சள் நிறத்தில் பரவுவதைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.