நாளை மறுதினம் 24 ஆம் திகதி தமிழக முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி. இராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர், M.G.R) 26 ஆவது நினைவு தினமாகும். தை மாதம் 17 ஆம் திகதி 1917 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த எம்.ஜி.இராமச்சந்திரன் இலங்கைத் தமிழர்கள் பால் கொண்டிருந்த கரிசனையையொட்டி கடந்த 2004 ஆண்டு வல்வெட்டித்துறை ஆலடியில் இவருக்கென ஒரு சிலை அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் தொடர்ந்து 3 வருடங்கள் இவரின் மறைவு நாளில் இங்கு ஒரு சிறு விழா எடுக்கப்பட்டு வந்திருந்தது.
பின்னர் கடந்த காலத்தில் இனந்தெரியாதோரால் இச்சிலை சேதமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, கைவிப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சிலையினைக் காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.