VaiSWA வின் 3 வது வருடாந்த பொதுக்கூட்டமும், கலந்துரையாடலும் எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2013 (வியாழக்கிழமை)
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (Valvai Seaman Welfare Association ) வின் 3 வது வருடாந்த பொதுக்கூட்டமும், கலந்துரையாடலும் எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில்வல்வை நவீன சந்தைக் கட்டிடத்தின் மேல்மாடி அமைந்துள்ள பழைய நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தலைவர் திரு.ஜ.கா. ரஞ்சனதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திரு.Dr .K மயிலேறும்பெருமாள் (முன்னாள் வல்வை அரசினர் மருத்துவமனை மாவட்ட வைத்திய அதிகாரி ) அவர்களும், கருத்தரங்கில் விசேட கருத்துக்களை திரு.பசுபதி சிவானந்தன் (தொழில் வழிகாட்டி ஆலோசகர் வடமராட்சி வலயக்கல்விப்பணிமனை ) அவர்களும், திரு T .இலங்கேஸ்வரன் (manager CINEC Jaffna campus ) அவர்களும், Capt .R .இராஜேந்திர (VaiSWA) அவர்களும், திரு.இரா .அகிலன் (உதவிப்பணிப்பாளர் vocational training authority ) அவர்களும், திரு. கே.சாந்தகுமார் (Lecturer Jaffna technical college ) அவர்களும், திரு சபேசன் (NITA manager ) அவர்களும் வழங்கவுள்ளார்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.