பிரபல தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவால் நேற்று இரவு சென்னையில் காலமானார். கரகாட்டக்காரன் படத்தில் பழைய காரை கவுண்டமணி, செந்தில் தள்ளிக்கொண்டு வரும்போது 'பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்' என சைக்கிளில் கூவியபடி வருவார் குள்ளமணி.
சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்ட குள்ளமணி சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவர் காலமானதாக தமிழக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுப்பிரமணி என்கிற தனது இயற்பெயரை திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் குள்ளமணி என மாற்றிக்கொண்ட குள்ளமணி, ஆரம்ப காலத்தில் உள்ளூர்களில் நாடகங்களில் நடித்து, அதன் மூலம் கிடைத்த தொடர்பால் சென்னையிலுள்ள நாடகக் குழுக்களில் இணைந்திருந்தார். சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், நம்பியார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நாடகங்களில் நடித்தார். அதன் பின் திரைப் படங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தார்.
நவாப் நாற்காலி படம்தான் குள்ளமணியின் முதல் படமாகும். கரகாட்டக்காரன், அபூர்வ சகோதரர்கள், பணக்காரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.