அவுஸ்திரேலியாவில் மிக மோசமான கடும் வெய்யில், Australia Open Tennis போட்டியில் வீரர்கள்
அவதி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2014 (வியாழக்கிழமை)
அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மிக மோசமான கடும் வெய்யில் உருவாக்கியுள்ளது. பல இடங்களில் தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபடியால் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளதாக அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை (14/01/2014) இரவு (Victoria) விக்டோரியா என்னும் இடத்தில் இடிமின்னல் காரணமாகப் பல இடங்களில் தீ பரவியதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதே இடத்தில் தான் கடந்த 2009ம் ஆண்டில் ஏற்பட்ட தீயினால் 2000 வீடுகள் எரிந்ததோடு 173 பேர் இறந்தனர் என்பது குறிப்பித்தக்கது. அத்துடன் கடந்த வாரம் மேற்கு அவுஸ்திரேலியாவில் (Western Australia ) காட்டுத் தீ பரவியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
துறைமுக நகரான மெல்போனில் (Melbourne) 14/01/2014 அன்று வெப்பநிலை 42.2c (105f) யை அடைந்துள்ளது. அடலைட் (Adelaide) என்னும் இன்னுமொரு துறைமுக நகரில் வெப்பநிலை 45.1c ஆக உயர்ந்ததுள்ளது. என்றுமே இல்லாத அதிகூடிய வெப்பம் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Australia Open Tennis போட்டியில் வீரர்கள் அவதி
இந்த அகோரமான வெய்யிலினால் இந்த வருடம், மெல்பேர்ன் நகரில் நடைபெற்று வரும் Australia Open Tennis போட்டியில் வீரர்களுக்கு வாந்தி, மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. என்றுமேயில்லாத அகோரமான வெப்பத்தினால் வீரர்கள் போட்டியைத் தொடர முடியாமல் மிகவும் அவதிப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சில வீரர்கள் விளையாடமுடியாமல் தரையில் விழுந்தனர். இதில் ஒரு வீரரும், பந்து எடுத்துக் கொடுக்கும் சிறுவனும் மயங்கி விழுந்தனர். அம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. சீனா நாட்டின் பெண் வீராங்கனை Peng Chuang என்பவர் வாந்தியெடுத்து மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.
வெயிலின் சூட்டைத் தணிக்க வீரர்கள் ஐஸ்கட்டிகளைத் தமது தலையிலும் கழுத்திலும் வைத்துக்கொண்டு இருப்பதைக் காணமுடிந்தது. ஒரு சில வீரர்கள் விளையாட்டு முடிந்ததும் அருகில் உள்ள தண்ணீர்த் தடாகத்தில் இறங்கிவிட்டதையும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியுள்ளன. பார்வையாளர்களும் பெரும் அவதிப்பட்டத்தைக் காணமுடிந்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.