வல்வெட்டித்துறையை சேர்ந்த கதிர்காமத்தம்பி விமலதாஸ் சமாதான நீதவானாக பதவியேற்றார்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/01/2014 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைச் சேர்ந்த உத்தரவு பெற்ற நில அளவையாளர் திரு.கதிர்காமத்தம்பி விமலதாஸ் அவர்கள் யாழ்ப்பாண நீதிமன்ற வலயத்திற்குட்பட்ட சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டு, இன்று காலை 09.00 மணியளவில் பருத்தித்துறை மாவட்ட நீதி மன்றத்தில் மாவட்ட நீதிபதி திரு.J. கஜநிதிபாலன் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
விமலதாஸ் அவர்கள் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த காலஞ் சென்ற கதிர்காமத்தம்பி தேவசிகாமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரன் ஆவர். இவர் வல்வை சிவகுரு வித்தியாசாலை மற்றும் வல்வை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
யாழ் தொழில்நூட்பக் கல்லூரியின் நில அளவையியல் கற்கநெறியை பயின்று தியத்தலாவை நில அளவை படமாக்கல் நிறுவனத்தில் நில அளவையியல் டிப்ளோமாவை பூர்த்தி செய்து, இலங்கை நில அளவை திணைக்களத்தில் நில
அளவையாளராக இணைந்து, பணியாற்றி, நில அளவையியல் அத்திகட்சராக தனது 59 ஆவது வயதில் 2012 ஆம் ஆண்டு அரச சேவையிலிருந்து ஒய்வு பெற்றார்.
இவர் சனசமூகநிலையம், பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் கூட்டுறவு போன்ற பல பொது ஸ்தாபனங்கள் மூலம் சமூக சேவையயில் ஈடுபட்டு வருவமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Capt.N.Kalainesan (Sri Lanka)
Posted Date: January 27, 2014 at 19:05
Happy to hear that my friend Vimali Appointed as an JP.. Congratuates
Iswar (UK)
Posted Date: January 24, 2014 at 21:26
I congratulate Mr Vimalathas on his achievements. In the mean time it would be appreciated to have his contact details on the web. After all the public wants to contact him as he is, now, a Justice of the Peace.
Regards
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.