கனடாவின் சைவநீதி பொங்கல்விழா மலரில் வல்வை வைத்தீஸ்வரர் ஆலயம் பற்றி சட்டத்தரணி
கனகமானோகரன் எழுதிய சிறப்புக்கட்டுரை வெளியாகியுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2014 (சனிக்கிழமை)
எம்மவர்கள் குறிப்பிடக்கூடியளவு வாழும் கனடா நாட்டிலே பல்வேறு ஸ்தாபனங்கள், மன்றங்கள், ஆலயங்கள், வானொலிச் சேவைகள் மற்றும் பத்திரிகைகள் என பலவும் தமிழ்பணியையும் சமயப்பணியையும் சிறப்பாக ஆற்றிவருகின்றன. அந்த வகையில் கனடா இந்து மாமன்றம் (Canada Hindu Maamantram) கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக அளப்பரிய பல சேவைகளைச் செய்துவருகின்றது.
அனைத்திலும் மேலாக 'சைவநீதி' என்னும் பெயரில் சிறந்த ஒரு சஞ்சிகையை நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் சிறந்த தமிழ், சைவ அறிஞர்களின் கட்டுரைகள், கதைகள் போன்றவற்றை மாணவர் பகுதியையும் அடக்கி தைப்பொங்கல், தமிழர் வருடப்பிறப்பு மற்றும் தீபாவளி தினங்களில் வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
பிரதி வருடந்தோறும் ஈழத்து வெளிநாட்டு திருத்தலங்களை தனது முன் அட்டையில் பிரசுரித்து சிறப்புக் கட்டுரையும் இடம்பெறுவது வழமை. இந்தவகையில் இந்த வருடம் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தைப்பொங்கல் சிறப்புமலர் 'சைவநீதியில்', எமது வல்வைச் சிவத்திருத்தலம் 'பாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரர் ஆலயம்’ இடம்பெற்றிருப்பது மிகவும் சிறப்புடன் நோக்கத்தக்கது.
இக் கட்டுரையை வரைந்திருப்பவர் வல்வையின் முன்னாள் பிரபல சட்டத்தரணியான திரு.கனகமனோகரன் அவர்கள். இவர் ஒரு எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். மேலும் இவர் கனடா இந்துமாமன்றத்தின் துணைத்தலைவர், பத்திரிகையாளரும் ஆவார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.