மகாத்மா காந்தியின் 67 ஆவது நினைவு தினம் இன்று, வல்வை சிவன் கோவில் கோபுரத்தில் மாத்திரம்
காந்தி சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2014 (வியாழக்கிழமை)
அகிம்சைவாதி எனப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 67 ஆவது நினைவு தினம் இன்றாகும். மகாத்மா காந்தி (மோகன்தாசு கரம்சந்த் காந்தி - Mohandas Karamchand Gandhi ) அவர்கள் 1948 ஆம் ஆண்டு தை மாதம் இதே நாள் நாதுராம் கோட்சே (Nathuram Godse) எனப்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இதையொட்டி லண்டன் நகரின் Camden பகுதியில் உள்ள Tavistock Square இல் நடைபெற்ற நினைவு தின நிகழ்வுகளைப் கீழே படங்களில் காணலாம் இந்த நிகழ்வு காலை 10.00 மணி தொடக்கம் 11.30 வரை நடைபெற்றிருந்தது.
காந்தியின் சிலை பல இடங்களில் காணப்பட்டு வந்தாலும், உலகிலேயே இந்து ஆலயக் கோபுரங்களில் வல்வெட்டித்துறை சிவன் கோவில் கோபுரத்தில் மட்டுமே காந்தியின் சிலை அமையப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுவது மிகவும் குறிப்பிடத்தக்கது.
வல்வை சிவன் கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள காந்தியின் சிலை
லண்டன் நகரின் Camden பகுதியில் உள்ள Tavistock Square இல்நடைபெற்ற நினைவு தின நிகழ்வு
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.