தயட்ட கிருல்ல (Deyata Kirulla National development program) தேசிய அபிவிருத்தித் திட்டம் 2014 இந்த வருடம் கேகாலே , புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது. பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலையான உடுக்கும் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன் வரிசையில் தனி நபர் உடுக்கு வாசிப்பில் வல்வையைச் சேர்ந்த திரு.ராசேந்திரம் மதியழகன் (வியஜன்) வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் குழு நபர்கள் வாசிப்பில் பருத்தித்துறை பிரதேசசபையைப் பிரதிநிதிப்படுத்திய திரு.நடராசா சிவராஜா (சிவலிங்கம்) குழுவினர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். குழுவினர் வாத்தியத்திலும் திரு.திரு.ராசேந்திரம் மதியழகன் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இடமிருந்து வலமாக, 3 ஆவதாக திரு. மதியழகன், 4 ஆவதாக திரு.சிவலிங்கம் ஆகியோர் உள்ளனர்
சிவலிங்கம் எனப் பொதுவாக அழைக்கப்படும் திரு.நடராசா சிவராஜா பொலிகண்டியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தமிழர்களின் பாரம்பரியக் கலையான உடுக்கு மற்றும் கம்படி போன்றவற்றில் பல ஆண்டு காலமாக தன்னை ஈடுபடுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.