"பனிவிழும் மலர்வனம்" தமிழ் திரைப்படம் நாளை திரைக்கு வருகின்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/02/2014 (வியாழக்கிழமை)
"பனிவிழும் மலர்வனம்" என்னும் திரைப்படம் நாளை திரையிடப்படவுள்ளதாக திரைப்படக் குழுவினர் அறிவித்துள்ளானர். வல்வைச் சார்ந்தவர்கள் சிலரால் கடந்த வருடம் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இத் தமிழ் திரைப்படம் பற்றி ஏற்கனவே வல்வெட்டித்துறை.org நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இத்திரைப்பட வெளியீடு சம்பந்தமாக திரைப்படக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..
பனி விழும் மலர்வனம் தமிழ் திரைப்படம்
வல்வையரின் தயாரிப்பில் உருவாகி பெரும் பொருட்செலவுடனும், நவீன தொழில்நுட்ப யுத்திகளை பயன்படுத்தியும் பெரும் எதிர்பார்ப்புடன் வருகின்ற 28ம் திகதி வெள்ளிகிழமை உலகமெங்கும் வெளிவரவிருக்கும் எமது பெரும் முயற்சியான" பனி விழும் மலர் வனம் "தமிழ்த்திரைப்படத்தினை எமது சொந்தங்கள் அனைவரும் கண்டுகளித்து எமது கன்னி முயற்சிக்கு ஆதரவளிக்க உங்கள் உதவி மிகவும் அத்தியாவசியமானது.
எமது படைப்பு வெற்றி பெறுமிடத்து எத்தனையோ எமது கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க போகும் நிறுவனமாக CTN PRODUCTION திகழும் என்பதில் உண்மை. அந்த வகையில் எண்ணற்ற பார்வையாளர்களை தன்னகத்தே கொண்டு உலா வரும் உங்கள் இணையத்தளத்தில் எமது படைப்பு சம்பந்தப்பட்ட காணொளிகள் , புகைப்படங்கள், வெளியீடுசம்பந்தமான காட்சிப்பதாதைகள் என்பவற்றினை வெளியிட்டு எமது திரைப்படத்தினது வெற்றிக்கு ஆதரவு நல்க வேண்டி நிற்கின்றோம்.
பனி விழும் மலர்வனம் தமிழ் திரைப்படம் படத்தினை பற்றியும் அதில் எம்மவர் பங்களிப்பு பற்றியும் சில தகவல்கள்
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் ஒரு உண்மையான புலியும் அனிமேசன் செய்யப்பட புலியும் இணைந்து மிரட்டப்போகும்அதிரடி காட்சிகள் உள்ளடங்கிய, இயற்கை அன்னையின் தேவையினையும் இயற்கையின் சமநிலைக்கு புலிகளின் அவசியத்தையும் ஒருதகவலாக மட்டும் சொல்லாமல் சுவாரசியமான காட்சிகளாகவும் காட்டியுள்ளதோடு மட்டுமன்றி படம் பார்த்த ரசிகன் திரையரங்கை விட்டுவெளியேறிய பின்னரும் அது பற்றி சிந்திக்க வைக்க கூடியவாறு சமயோசிதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நிஜப்புலி சம்பந்தப்பட்ட காட்சிகள் "Hangover", 'Burning Bright", 'We bought a zoo" போன்ற திரைப்படங்களில் நடித்த புலியினை நமது திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தனியார் விலங்குகள் சரணாலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு புலி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் சென்னையில் உள்ள 'மயக்கமென்ன ' ராமானுஜம் ' போன்றபடங்களில் அனிமேசனில் சிறப்பாக செயல்பட்ட தமிழர் நிறுவனமான Raymax நிறுவனத்தினால் அனிமேசன் செய்யப்பட்டு படத்தில்இணைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய ஒரு பிரமாண்டமான படைப்பானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிரமிப்பின் உச்சத்திற்கு இழுத்துச் செல்லும் என்பதில் மாற்றமில்லை.
இப்படத்தின் தயாரிப்பாளர்களாக கனடாவினை சேர்ந்த மாருதி நந்தன், ரவி இந்திரன் மற்றும் S.K. அரவிந்த் ஆகியோரும் தயாரிப்பு மேற்பார்வையினை ரவி இந்திரன் அவர்களும் தயாரிப்பு நிர்வாகத்தினை S.K. அரவிந்த் அவர்களும் மேற்கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் வல்வை மண்ணின் மைந்தர்கள் என்பது எம் எல்லோருக்கும் பெருமையே.
மேலும் அனிமேசன் புலியினை Raymax நிறுவனத்தின் இயக்குனர்களான A.K செல்வதாசன், A.K கமலதாசன் ஆகியோர் திறம்பட செயலாற்றியுள்ளனர். இவர்களின் அனிமேசன்ஆக்கங்கள் சர்வதேச அளவில் பேசப்படும் என்பது உறுதி.
மேற்குறிப்பிட்டவர்கள் தவிர மேலும் பல எம்மவர் இணைந்து இரண்டு வருடங்கள் தொடர்ந்து உழைத்து இத்திரைப்படத்தினை வெளிக்கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக அரசின் தணிக்கைக் குழுவினதும் வரிவிலக்கு குழுவினதும்பாராட்டுக்களை இந்த திரைப்படமானது ஒரு சேர பெற்றிருப்பது பாராட்டுக்கு உரியது.
உங்கள் உளப்பூர்வமான ஆதரவினை வழங்கி எம்மவர்களின் பெருமுயற்சிக்கு ஊக்கமளிக்க வேண்டுகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.