நேற்று வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளில் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் சிறந்த பெறுபேறுகளை அபிராமி,புவித்ரா (8AB) பெற்றனர்.
செல்வி யோகச்சந்திரன் அபிராமி
இதில் வல்வெட்டித்துறை சிதம்பரக்கல்லூரியில் கல்விகற்ற செல்வி யோகச்சந்திரன் அபிராமி கணிதம், தமிழ், விஞ்ஞானம் ,வரலாறு,சைவசமயம்,வணிககல்வியும் கணக்கீடும்,சுகாதாரமும் உடற்கல்வியும்,தமிழ்மொழியும் இலக்கியம் உட்பட 8 பாடங்களில் 'A' தர சித்தியை பெற்று ஆங்கிலத்தில் 'B' தர சித்தியும் பெற்றுள்ளார். தற்போது உயர்தரத்தில் உயிரியல் துறையில் கல்விகற்றுவரும் இவர் ஓர் சிறந்த வைத்தியராக வருவதே தனது எதிர்கால இலட்சியம் என்று கூறியுள்ளார்.
செல்வி முரளிதாஸ் புவித்ரா
அடுத்து வல்வெட்டித்துறை மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற செல்வி முரளிதாஸ் புவித்ரா கணிதம்,தமிழ்,விஞ்ஞானம்,வரலாறு,சைவசமயம்,வணிககல்வியும் கணக்கீடும்,தகவல் தொழில்நுட்பமும் தொடர்பாடல்,தமிழ்மொழியும் இலக்கியம் உட்பட 8 பாடங்களில் 'A' தர சித்தியை பெற்று ஆங்கிலத்தில் 'B' தர சித்தியும் பெற்றுள்ளார்.இவரும் தற்போது உயர்தரத்தில் உயிரியல் துறையில் கல்விகற்றுவரும் இவர் ஓர் சிறந்த வைத்தியராக வருவதே தனது எதிர்கால இலட்சியம் என்று கூறியுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.