ரேவடி சிறுவர் பூங்கா கட்டட வேலைகள் பூர்த்தி, விளையாட்டு உபகரணங்கள் சில தினங்களில் பொருத்தப்படும்
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2014 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரைப் பகுதியில் அண்மையில் சீராக்கப்பட்ட கடற்கரை மைதானத்திற்கு அருகில், ரேவடி கழக இளைஞர்களால் புதிதாக அமைக்கப்பெற்று வந்த 45 x 50 அடி அளவில் அமைந்த சிறுவர் பூங்காவின் கட்டுமான வேலைகள் நேற்றுடன் பூர்த்தியாகியுள்ளது. தற்பொழுது இப் பகுதியில் நிரந்தரமாகப் பொருத்துவதற்குரிய சிறவர்களிற்கான விளையாட்டு உபகரணங்களின் இறுதிக் கட்ட வேலைகள் இடம்பெற்றுவருகின்றது.
கடற்கரைப் பகுதிக்கேற்றவாறு குறித்த உபகரணங்கள் தரமாக வல்வையிலும் நீர்கொழும்பிலும் செய்யப்பட்டுள்ளன. இவை இன்னும் ஓரிரு தினங்களில் சிறுவர் பூங்காவிற்குள் பொருத்தப்படவுள்ளதாக ரேவடி கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை கடற்கரை மைதானம் மற்றும் சிறுவர் பூங்கா வேலைகளிற்கு இதுவரை உதவி புரிந்தவர்களிற்கு ரேவடி கழகத்தினர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பூங்கா மற்றும் கடற்கரை மைதானத்திற்கு செல்வதற்காக அமைக்கப் பட்டுள்ள படிக்கட்டுகள்
இப்படிகலில் சிறார்கள் மற்றும் பெரியவர்கள் பாதுகாப்பிற்கென கைப்பிடிகள் பொருத்தப்படவுள்ளன
புதிய சிறுவர் பூங்காவின் ஒவ்வொரு பக்கத் தோற்றம்
சிறுவர்களிற்கான விளையாட்டு உபகரணங்களின் இறுதிக்கட்ட வேலைகள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.