வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகள் மற்றும் வர்த்தமானிகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.
விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி போன்றன அடங்குகின்றன.
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பெறப்பட்ட இலத்திரனியல்/ பொறிமுறை/ மின்னியல்/ எந்திரவியல் ஆகியவற்றில் விஞ்ஞானமானிப்பட்டம் மற்றும் பட்டதாரிப் பட்டத்திற்கு பின்னரான பட்டம் (முதுமானி) அல்லது எந்திரவியலில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் சார் நிறுவனம் ஒன்றில் இணை அங்கத்துவம். அத்துடன் கூட்டுத்தாபனம், சபை/ புகழ் வாய்ந்த வர்த்தக ஸ்தாபனம்மொன்றில் முகாமைத்துவ மட்டத்தில் 15 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.
சம்பளம்:- 38350 – 1100 x 15 = 55030/=
v சபை செயலாளர்/ சட்ட அலுவலர் பதவிகல்வித்தகைமை:- கம்பனி/ அமைப்பு செயலாளராக 3 வருட செயற்பாடு மற்றும் அனுபவத்துடனான சட்டத்தரணி. கணனி புலமையுடையர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம்:- 46655/=
v விஞ்ஞான சார் அலுவலர் (தரம்- II) (AEA)
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பௌதீகம்/ கணனி விஞ்ஞானம்/ தகவல் தொழிநுட்பம் ஆகியவற்றில் பொருத்தமான பாட இணைப்புக்களில் முதல் வகுப்பொன்றுடன்/ இரண்டாவது வகுப்பொன்றுடன் 4 வருட விசேட பட்டம். அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பௌதீகம்/ கணனி விஞ்ஞானம்/ தகவல் தொழிநுட்பம் ஆகியவற்றில் பொருத்தமான பாட இணைப்புக்களில் இரண்டாவது கீழ் வகுப்பில் 4 வருட அனுபவம் இருத்தல் வேண்டும். கணனி, கணனி விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பவியல் ஆகியவற்றை உடைய விண்ணப்பதாரிகள் பின்வரும் துறைகளில் அனுபவத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
* Designing and developing websites using joomla.
* Object oriented PHP programming, DBMS knowledge (MSSQL, MY SQL)
* Troubleshooting IT/ Hardware/ Networking
* Software installation & setup
* Working on open source system
சம்பளம்:- 24725 – 550 x 5 , 645 x 5 , 770 x 15 = 42250/=
v நிதிஅலுவலர் பதவி - IIஆம் தரம் ( SLGC)
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முகாமைத்துவத்தில் பெறப்பட்ட பட்டதாரிப் பட்டம் அத்துடன் அரசாங்க திணைக்களம்/ கூட்டுத்தாபனம்/ சபை அல்லது புகழ்வாய்ந்த வர்த்தக அமைப்பொன்றில் நிறைவேற்று அலுவலர் நிலையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு வழங்கல்களில் ஒருவருட பதவியுடனான அனுபவம். அத்துடன் வழங்கல் மற்றும் பொருள் முகாமைத்துவத்தில் ஒரு வருட சான்றிதழ் கற்கை நெறி.
சம்பளம்:- 20890 – 10 x 365, 18 x 550 = 34940/=
v தொழிநுட்ப உதவியாளர் பதவி – தரம் – III ( SLGC & AEA)
கல்வித்தகைமை:- விஞ்ஞானம், கணிதம், மொழி ஆகிய உள்ளடங்கலாக 4 திறமைச் சித்தியுடன் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆறுபாடச்சித்தி அடைந்திருக்க வேண்டும். அத்தடன் க.பொ.த (உ/த) விஞ்ஞானத்துறையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி அடைந்திருக்கவேண்டும். மற்றும் இரு வருட டிப்ளோமாவை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தொழிநுட்பவியல் பயிற்சி நிறுவனம் ஒன்றினால் நடாத்தப்படும் 5வது தொழிநுட்பவியல் டிப்ளோமா, தேசிய வாழ்வாதார தகைமைக்கு குறையாத வகையில் பொறிமுறை/ மின்னியல்/ இலத்திரனியல்/ இராசாயனவியல்/ எந்திரவியல் ஆகியவற்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:- 14610 – 145 x 10 , 170 x 7 , 290 x 4 , 345 x 20 = 25310/=
அரச வளங்கள் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு
இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம்.
v பொது முகாமையாளர்
தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் விவசாயம்/ விஞ்ஞானம் ஆகியவற்றில் பெறப்பட்ட முதல் பட்டதாரிப்பட்டமொன்றுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில்(விவசாயம்/ வர்த்தக நிருவாகம்/ முகாமைத்துவம்) ஆகியவற்றில் பெறப்பட்ட முதுமானிப்பட்டத்துடன் தேயிலை, இறப்பர் வளர்ப்புத்துறையில் முகாமைத்துவ அனுபவமாக 15 வருட அனுபவத்தில் சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில் 10 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.
சம்பளம்:- HM 2 – 1 (44030 – 12 x 310 – 59750)
v முகாமையாளர் – நிர்வாகம்
தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முகாமைத்துவம்/ வர்த்தக நிர்வாக துறையில் முதலாவது பட்டதாரிப் பட்டத்துடன் அரச/ புகழ் வாய்ந்த அமைப்பொன்றில் நிர்வாகம்/ மனித வள முகாமைத்துவத்தில் 5 வருட அனுபவம் இருத்தல் வேண்டும். அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் முகாமைத்துவத்தில் பெறப்பட்ட முதலாவது பட்டதாரிப் பட்டத்தின் பின் பெறப்பட்ட பட்டத்துடன் அரச/ அங்கீகரிக்கப்பட்ட அமைப்பொன்றில் 5 வருட அனுபவம் இருத்தல் வேண்டும்.
சம்பளம்:- HM 25640 – 3 x 665 – 7 x 735 – 15 x 925 – 46655
பண்ணை விலங்கு மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை
v உல்லாச விடுதிப் பொறுப்பாளர் (PL - 2 2006 A)
கல்வித்தகைமை:- க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம்/ தமிழ் உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரச/ தனியார் நிறுவனமொன்றில் உல்லாச விடுதிப் பொறுப்பாளராக 1 வருடத்திற்கு குறையாத அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
சம்பளம்:- PL – 2 2006A 12410 – 10 x 130 – 10 x 145 – 10 x 160 – 12 x 170, 18000/=
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பொறியியலாளர் பட்டம். அல்லது அதற்குச் சமனான தகைமை.
சம்பளம்:- 20770 – 365 x 2 – 450 x 15 – 550 x 5 – 3100
v அகழ்வு பொறியியலாளர் - VA தரம்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பொறியியலாளர் பட்டம். அல்லது அதற்குச் சமனான தகைமை. அத்துடன் உரித்துடைய துறையில் 4 வருட அனுபவம்.
சம்பளம்:- 24650/=
v அகழ்வு பொறியியலாளர் IV தரம்
கல்வித்தகைமை:- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பொறியியலாளர் பட்டம். அல்லது அதற்குச் சமனான தகைமை. அத்துடன் உரித்துடைய துறையில் 4 வருட அனுபவம். அத்துடன் பட்டப்பின் பட்டமொன்று அல்லது பட்டயம் பெற்ற பொறியியலாளர் தகைமைகளுடன் உரித்துடைய துறையில் 4 வருட கால அனுபவம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.