யாழ் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் -TSSA UK நடாத்தும் உதைப்பந்தாட்டப் போட்டிகள், சிதம்பராக் கல்லூரி (வல்வை புளூஸ்) அணியும் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2014 (திங்கட்கிழமை)
யாழ் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் -TSSA UK நடாத்தும் உதைப்பந்தாட்டப் போட்டிகள்
லண்டனில், யாழ் தமிழ் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்கத்தினர் (Tamil Schools Sports Association) - UK) நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் (22 ஆவது உதைபந்துப் போட்டி) வழமைபோல இந்த வருடமும் நடைபெறவுள்ளது.
இந்தப்போட்டிகள் யாவும் இன்றைய தினம் (05/05/2014 திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
இதில் முக்கியமாக எமது சிதம்பராக் கல்லூரி உதைப்பந்தாட்ட (வல்வை புளூஸ்) அணியின்
Under-10, Under-12, Under-14, Under-16, Under-19, Adult Open Group,மற்றும் Over-40 என 7 அணிகள் பங்குபற்றுகின்றன.
இன்று நடைபெறப்போகும் இந்தப் போட்டிகளில் எமது ஊரின் புகழ்மிக்க பாடசாலையான சிதம்பராக் கல்லூரியின் அணியினர் திறமையாக விளையாடி வெற்றி பெறுவார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
1992 ஆம் ஆண்டில் இருந்து வருடா வருடம் நடைபெறும் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பது இங்கு குறிப்பிடதக்கது.
போட்டிகளில் எடுக்கப்படும் படங்கள் இன்னும் சில மணி நேரத்தில் இணைக்கப்படும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.