வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2014 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று காலை 09.00 மணியளவில் வன்னிப் பார்வை அற்றோர் சங்கத்தலைவரும், நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் அங்கத்துவருமான திரு. ரூபன் அவர்களினால் போட்டோ பிரதி இயந்திரம் பாடசாலை அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு, போட்டோ பிரதி இயந்திரம் வாங்குவதற்கென கடந்த டிசம்பர் மாதம் லண்டன், Tooting Burntwood School ல் கல்வி கற்கும் வல்வெட்டித்துறையை சேர்ந்த மாணவியான செல்வி சர்மிளா வரதராஜ் அவர்களின் முயற்சியில் அவருடன் கல்வி கற்கும் மற்றைய மாணவிகளும் சேர்ந்து தங்கள் பாடசாலையில் உள்ள அனைத்து மாணவ,மாணவியர்,மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து £351.65p திரட்டியிருந்தார்கள்.
குறித்த பணத் தொகையை இங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் (Reg.Charity) மூலம் தான் அனுப்புலாம், என Burnt Wood Schoolநிர்வாகம் கூறியதற்கு இணங்க, இங்குள்ள "நம்பிக்கை ஒளி" எனும் Charity மூலம் £351.65p அனுப்பி வைக்கப்பட்டது.
இருந்தும் போட்டோ பிரதி இயந்திரம் வாங்குவதற்கு மேலதிகமாக தேசத்தின் பாலம் நிறுவனம்-- £200.00,
திரு.பரமகுருசாமி குடும்பம் -- £120.00, திரு.ஞானவேல் மோகனகுமார்--£30.00, ஆகியோர் மேலதிகமாக £350.00 ஐ அன்பளிப்பு செய்துள்ளனர்.
லண்டனில் வாழும் எமது ஊரின் மாணவிகள் செய்த இந்த மகத்தான சேவைக்கும்,Burnt Wood School நிர்வாகத்தினருக்கும் மற்றும் இந்தப் பணத் தொகையை தமது தொண்டு நிறுவனம் மூலம் ஊருக்கு அனுப்பிவைத்த "நம்பிக்கை ஒளி"நிறுவனத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.