தமிழகத்தின் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடந்த முடிந்த கந்தசஸ்ட்டி விரத காலத்தில் நேரடியாகத் தரிசனத்தில் கலந்து கொண்டிருந்த, வல்வையைச் சேர்ந்த தற்பொழுது லண்டனில் வசிக்கும், பழம் பெரும் புகைப்படக் கலைஞர் தனது தரிசன அனுபவத்தை எழுது வடிவிலும், புகைப் படங்களின் வடிவிலும் வாசகர்களுக்காக அனுப்பியுள்ளார். கீழே.....
இவ்வருடம் திருச்செந்தூரில் கந்தசஸ்ட்டி புனிதகாலத்தில் இரண்டாவது வருடமாக தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோம். இவ்வருடம் தீபாவளி ஒரு சந்தியிலிருந்து சூரன் போர் முடிந்து, கல்யாணத்திருவிழாவையும் தரிசனம் செய்து அடுத்த நாள் மீண்டும் மூலவர் தரிசனம் முடித்து மீண்டிருந்தோம்.
திருச்செந்தூரில் தங்கியிருந்த எட்டு நாட்களும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன். திருச்செந்தூரின் கடலோரத்தில் தெற்கு புறமாக ஜயா சுவாமி என்று வைகுண்ட சுவாமி கோயில் கொண்டுள்ளார்.
இக்கோயிலின் வரலாறு கி.பி1008 இல் உள்ளதாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது. இங்கு மூலவராக இருக்கும் ஜயாவை சுற்றி வணங்கும் போதும் சுவாமி ஊர்வலத்தின் போதும் ஆண்கள் தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள்.
இதேவேளை திருச்செந்தூர் செந்தில தண்டவரின் வரலாறு கி.பி 1087 இல் என்பதாக இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. குறித்த கல்வெட்டில் “இக் கோயிலானது ஈழத்து முதலாளிமார்களால் கட்டப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வைக் கடலோடி முதலாளிகள்மாரும் அக்காலங்களில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கோயில்கள் பல இலங்கை, இந்தியா உட்பட்ட பல இடங்களில் கட்டியதாக வரலாறுகள் சான்று பகிர்வதால், மேற்குறிப்பிட்ட இரு கோயில்களின்
உருவாக்கத்தில் வல்வைக் கடலோடிகளின் பங்கு கண்டிப்பாக இருந்திருக்கும் என நம்புகின்றேன்.
திருச்செந்தூர் மூலவருக்கு தினசரி மூன்று நேர அபிசேகங்களை பலர் சேர்ந்து செய்கின்றார்கள். அது போல் இரவு தங்கத்தேர் இழுப்பதற்கும் பலர் பதிவுசெய்து கொள்கின்றார்கள்.
திருச்செந்தூரின் தங்கு விடுதிகள் யாவும் புலம்பெயர்ந்த தமிழர்களாலும் சிங்கப்பூர் மற்றும் மலேசியத் தமிழர்களாலும் நிரம்பிவிடுகின்றது.
பிரம்மாண்டமான பிரசங்க மண்டபத்தில் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மணிக்கு ஒருவர் என பிரசங்கங்கள் நடைபெற்றுவருகின்றன. பஜனைக்குழுக்கள் இரவு பகலாக பாடிய வண்ணம் உள்ளன. பெண்கள் கோலாட்டம் ஆடிய படியுள்ளனர். பல மயில்கள் தோகை விரித்தாடிக் கொண்டிருக்கின்றது.
ஜந்து நாட்களும் இரவு முருகன் தங்கத்தேரில் வரும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாக இருக்கின்றது. இரவு பகல் என்று பாராமல் பக்தர்கள் சமுத்திரத்தில் நீராடிய படி இருக்கின்றார்கள்.
காவல்துறையும் ஆலயநிர்வாகமும் அடியார்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குகின்றார்கள். போனவருடம் சூரன் போர் நிகழ்வுக்கு 13 லட்சம் மக்கள் வந்ததாகவும், இம்முறை 15 லட்சம் அடியார்கள் திரண்டதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
தலையா அல்லது கடலலையா என்று வியக்கும் வண்ணம் திருச்செந்தூர் சுற்றாடல் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
சூரன் போர் அன்று வானத்தில் கருட பகவான் வந்து வட்டமிட்ட பின்னர் தான் சூரன்போர் ஆரம்பமாகின்றது. அங்கு வள்ளிக்குகையையும் தரிசனம் செய்யும் பாக்கியம் எமக்குக்கிடைத்தது.
கடலுக்கு அருகமையில் நிலத்தடியில் இருந்து வரும் ஆழிக்கிணறு நல்ல நீராக இருக்கின்றது. ஆழிக்கிணற்றில் நீராடிய பின்னர் தான் சமுத்தரத்தீர்த்தம் ஆடவேண்டும் என்பது மரபு. அப்பொழுது தான் திருசெந்தில் ஆண்டவனை தரிசித்த