ஆதவன் பக்கம் - 68 - திருமதி தர்சினி நிதர்சன் - ஒரு ரோல் மொடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/04/2024 (புதன்கிழமை)
கடந்த 3 வருடத்தில், டிஜிட்டல் அறிவு மையம் உருவாக்கம், சர்வதேச பூச்சிய கழிவு தினம் போன்ற ஏராளமான சுற்றுப்புற சூழல் திட்டங்கள், மாணவர்கள் இலகுவில் பரிச்சய, பயன்படக் கூடிய முன்னெடுப்பக்கள், இதுவரை இல்லாத வகையில் பிஎச்ஐ ஊடாக டெங்குக் கட்டுபாடு (3 இஞ்சி சீமெந்து குழிக்காக எனக்கும் ஒரு ரெட் நோட்டீஸ்) மற்றும் தரமற்ற உணவுச்சாலைகளுக்கு சீல், விளையாட்டுக் கழகங்களுடன் ஒன்றிணைந்து துப்பரவுப்பணிகள், தானே முன்னின்று ஆரம்பித்து ஊக்குவித்து இளைஞர்களுக்கு (ஆண், பெண் இருபாலருக்கும் என) விளையாட்டுப் போட்டிகள், சிறந்த குப்பை மேலாண்மை (Garbage Management), பல்வேறு வகைப்பட்ட விழிப்புணர்வுக் கூட்டங்கள், இரத்ததான ஏற்பாடுகள், OL, AL வினாத்தாள்கள் போன்றவற்றை உள்ளடக்கி பொது நூலகத்தை சிறப்பித்தமை, நேர்த்தியான நகரசபை இணைய தள உருவாக்கம், QR Code, e Payment, சிறந்த கணக்கு அறிக்கைகள், அகில இலங்கை ரீதியில், மாகாண ரீதியில் வல்வை நகரசபையை பல வேலைத்திட்டங்களில் முன்னுக்கு கொண்டு வந்தமை, சுகாதார துப்பரவு தொழிலாளர் உட்பட்ட சக ஊழியர்களை கைக்கொண்ட முறை..... என ஏராளமான விடயங்களில், கடந்த 3 வருடங்களில் வல்வை நகரசபையை மிகத் திறம்பட நடத்தி மாற்றலாகிச் செல்கின்றார் திருமதி தர்சினி நிதர்சன் அவர்கள். அதுவும் நடுத்தர வயது தான்.
எங்கள் வீட்டுக்கும் நகரசபை கதிரைகளுக்கும் இடையில் உள்ள தூரம் வெறும் 5 இலிருந்து 10 மீட்டர்கள் தான்.
பாடசாலை மாணவர்கள் போல், ஆசிரியரின் திறமையைப் பொறுத்து மாணவர்கள் எவ்வாறு அமைதியாக இருந்து கற்பார்களோ, அதே போன்றதொரு சூழலை கடந்த 3 வருடங்களாக பார்க்க முடிந்தது. ஏனெனில் அதற்கு முன்னர் வரை ‘உறுப்பினர்கள் சபை” இயங்கியபோது அடிக்கடி பயங்கரச் சத்தங்கள், வாக்குவாதங்கள், முடிவில் குழப்பங்கள்.
ஒருமுறை இவரை சிறிதுநேரம் சந்தித்துப் பேசி இருக்கிறேன். திருமதி தர்சினி அவர்களின் முகாமைத்துவம் மிகவும் உற்றுநோக்கதற்குரியது. அவரது ஒவ்வொரு வேலைத் திட்டங்களும் மிகவும் மெதுவாகவும், திடமாகவும் - முன்பள்ளி சிறர்கள், சிறுவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், கழகங்கள், வயோதிபர்கள் என அனைத்து வல்வை நாகசபைக்கு உட்பட்ட பிரைஜைகளை உள்வாங்குவதாக இருந்தது.
ஒரு பெண் பணியாளர் / அதிகாரி எப்படி சிறந்த சிந்தனையுடன் மிகச்சிறப்பாக செயற்பட முடியும் என்பதற்கு இவர் உதாரணம். குறிப்பாக ஊர்ப் பெண்மணிகளுக்கு – இவரை ஒரு ரோல் மொடலாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
தூபி, நினைவேந்தல்கள், பொதுப்பூங்கா, போலீஸ், மாகாணசபை, அரசியல்வாதிகள் போன்ற அவிழ்க்க முடியாத சிக்கலுக்குள் - வல்வெட்டிதுறையில் ஒரு அரச பணியாளராக - அதுவும் ஒரு பெண்மணி இவ்வளவு சிறப்பாக பணியாற்றியதை மிக நன்றியுடன் நினைவு கூர்வோம்.
வரும் காலங்களில் கல்வி வலயத்திலும் சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.