Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
2014 ஆம் ஆண்டிற்கான வல்வை நகரசபையின் வரவு செலவுத் திட்டமானது முறையற்ற வகையில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி வல்வை நகரசபையைத் சேர்ந்த 5 உறுப்பினர்கள் யாழ் மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கு கடந்த சில தினங்களாக வாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டட நிலையில், இன்று...
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று மாரி தேவி உற்சவம் நடைபெற்றது. பிற்பகல் சுமார் 5 மணியளவில் சிறப்புப் பூஜைகளுடன் ஆரம்பித்த நிகழ்வு சுவாமி வீதி உலாவுடன் சுமார் 8 மணியளவில் நிறைவெய்தியது ஸ்ரீ முத்துமாரியம்மன், வல்வை வைத்தீஸ்வரருக்கு முன்னரே அமையப்....
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் (Asia cup 2014) நாளை வங்கதேசத்தில் ஆரம்பமாகின்றது. நாளை ஆரம்பமாகி மார்ச் மாதம் 8 ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகளுடன் முதன் முறையாக ஆப்கானிஸ்தான் அணியும் பங்கேற்கிறது. நாளை
இந்தியாவின் தமிழகத்தில் தென் கோடியில் அமைந்துள்ள பாம்பன் பாலம் தொழிற்படத் தொடங்கி இன்றுடன் 100 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இலங்கையில் உள்ள தமிழர்கள் நாம் பாம்பன் பாலத்தை பலமுறை உச்சரித்து இருக்கின்றோம். காரணம் இது பாக்கு நீரிணையில், தலைமன்னாருக்கு மிக அண்மையில்....
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பருத்தித்துறை லீக், முல்லைத்தீவு லீக்கை 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. பருத்தித்துறை அணி சார்பாக கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த செல்வன் பிரகாஷ் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த பேடன் பவலின் 155 ஆவது நினைவு தினம் நாட்டின் பல பாகங்களிலும் நேற்று 22.02.2014 அன்று அனுஸ்டிக்கப்பட்டது. பருத்தித்துறை மாவட்ட சாரணர் கிளைச்சங்கத்தாலும் பேடன் பவல் நினைவுதின நிகழ்வு நேற்று அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வல்வை சிவகுரு
வல்வெட்டித்துறை உதயசூரியன் விளையாட்டுக் கழக (ஐக்கிய இராச்சியம்) பொதுக் கூட்டம் இன்று லண்டனில் நடைபெறவுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பின்வரும் முகவரியில் கூட்டம் இடம் பெறவுள்ளது.
முதலாவது போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் அல்வாய் நக்கீரனை எதிர்த்து மோதியது.இவ் ஆட்டத்தில் அல்வாய் நக்கீரன் 2:1 என்ற ஓட்டத்தால் வல்வையை வெற்றி கொண்டது.
இறுதிப் போட்டியில் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக் கழகம், பருத்தித்துறை சென் தோமஸ் எதிர்த்து....
சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பு (Chithambara Well wishers Network - CWN) லண்டனில் நடாத்தவுள்ள இவ்வருடத்திற்கான கணிதப்போட்டியின் (Maths Challenge) விண்ணப்பங்கள் தற்பொழுது ஏற்று கொள்ளப்பட்டு வருகின்றன. போட்டிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதியாகும். இது.....
வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் நடாத்தப்பட்டுவரும் சதுரங்கப் போட்டியின் மாவட்ட மட்ட போட்டியின் முதல் சுற்று நேற்று யாழ் பெண்கள் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியின் அடுத்த சுற்று தொடர்ந்து இன்று நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டியில் பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக் கழகமும் வல்வை விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் பருத்தித்துறை வீனஸ் 13:8 என்ற அடிப்படையில் வல்வையை வெற்றிகொண்டு முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நாளை மறுதினம் மாரி தேவி உற்சவம் நடைபெறவுள்ளது. ஸ்ரீ முத்துமாரியம்மன், வல்வை வைத்தீஸ்வரருக்கு முன்னரே அமையப் பெற்றதை அடிப்படையாகக் கொண்டு, வல்வை வைத்தீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த கொடியேற்ற
இன்றைய காலைப் போட்டியில் வல்வை நெடியகாடு மற்றும் பருத்தித்துறை வீனஸ் விளையாட்டுக் கழகங்கள் மோதிக் கொண்டன. இதில் வீனஸ் விளையாட்டுக் கழகம் 14:4 எனற ஓட்ட அடிப்படியில் வெற்றி கொண்டது. அடுத்த போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் திக்கம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மோதியது
வல்வெட்டித்துறை போலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி திரு.குமாரசிங்க மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை 9 மணியளவில் வல்வை போலிஸ் நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ் வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான (ஆண்கள்) கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 15, 17 மற்றும் 19 என அனைத்து வயது 3 பிரிவுகளிலும் உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
2014 ஆம் ஆண்டுக்கான பருத்தித்துறை பிரதேச மட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளன. இதன் வரிசையில் ஆண்கள் மற்றும் பெண்களிற்கான எல்லே போட்டிகள் இன்றும் நாளையும் கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. குறித்த
வல்வெட்டிதுறையில் இன்று உல்லாச இரட்டைப் படகு (Blue Pleasure Boat service) ஒன்று வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. உல்லாசப் படகுச் சேவைக்கென (Boating) இப்படகானது வல்வையைச் சேர்ந்த நோர்வையைப் பிறப்பிடமாகக் கொண்ட நலன்விரும்பி ஒருவரின் முயற்சியால், யாழ்பாணம் காரைநகரைச் சேர்ந்த படகு கட்டுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படவிருந்த உதை பந்தாட்டப்போட்டியானது, பருத்தித்துறை உதைபந்தாட்டச் சம்மேளனம் மற்றும் பருத்தித்துறை மத்தியஸ்தர்கள் சங்கதிற்கிடையிலான இடையிலான சச்சரவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள்
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தி.குமாரசிங்க மற்றும் வல்வைப் பிரதேசத்திற்குட்பட்ட நெடியகாடு, ஆதிசக்தி விளையாட்டுக் கழகங்கள் உட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நாளை சனிக்கிழமை காலை வல்வை பொலிஸ் நிலைய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் இன்றைய முதலாவது போட்டியில் கருணாகரன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகமும், இரண்டாவது போட்டியில் கரவைச் சுடர்
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முதலாம் சுற்று முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டாம் சுற்று இன்று 20 ஆம் திகதி ஆரம்பமானது. இன்றைய முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தை
2014 ற்கான பருத்தித்துறை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இன்றைய போட்டியில் பெண்களுக்கான வலைப்பந்துப் போட்டிகள் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இதன் வரிசையில் வல்வை விளையாட்டுக் கழகம் பருத்தித்துறை ஐக்கிய
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முதலாம் சுற்று முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டாம் சுற்று இன்று 20 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இன்றைய முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரேஞ்சர்ஸ்
2014 ற்கான பருத்தித்துறை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன ஆண்கள் பெண்களென தனிப் பிரிவுகளாக பருத்தித்துறை பிரதேச மட்டத்திற்கு உட்பட்ட சகல விளையாட்டுக் கழகங்களும் இப்போட்டிகளில் பங்கு கொள்ளவுள்ளன. போட்டிகள் பல்வேறு மைதானங்களில் சுமார் நான்கு......
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ஜெயச்சந்திரன், ராபர் பயஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது என்று தமிழக சட்டப் பேரவையில் (Eemergent cabinet meeting) தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் முதலாம் சுற்று முடிவடைந்திருக்கும் நிலையில் இரண்டாம் சுற்று நாளை மறுதினம் 20 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இவ் இரண்டாம் சுற்றில் கம்பர்மலை யங்கமன்ஸ், வல்வை விளையாட்டுக் கழகம், வல்வை நெடியகாடு..........
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது என இந்திய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்டுவரும் உதைப்பந்தாட்ட லீக் அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் போட்டியின் வரிசையில் பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு லீக்குகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.