Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்குள் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் இந்த வருடத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் சுற்றில் இன்று கலட்டியை எதிர்த்து வதிரி டைமண்ட்ஸ் மோதியது....
வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் பகல் 12 மணியளவில் நிறைவெய்தியுள்ளன. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்..........
வடமாகாணசபை சுகாதாரத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் கடந்த 26 ஆம் திகதி வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அமைச்சருடன் வடமாணசபை உறுப்பினர்களான திரு.M.K.சிவாஜிலிங்கம், திரு.சிவஜோகன் மற்றும் வடமாகாணசபை
இன்று பிற்பகல் 0330 மணிக்கு வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டப் போட்டியில் வதிரி டைமண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி கருணாகரன் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் 2014 ஆம் ஆண்டுக்கான உதைபந்துப் போட்டியின் நேற்றைய முதலாவது ஆட்டத்தில் கரவெட்டி நவசக்தியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன் மோதியது. இந்த ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுள்ளது.
இரண்டாவது போட்டியில் கலட்டி
வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, இரவுத் திருவிழா மாலை 0630 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. விநாயகர் சுவாமி வீதி உலாவினைத் தொடர்ந்து இரவு 0830 மணியளவில் இன்றைய
ஜெனீவாவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலங்கம் அவர்கள் நாளை ஜெனீவா செல்கின்றார். அமெரிக்காவின் பிரபல சட்டத்தரணி கரன் பேகர் தலைமையிலான மனித உரிமைகள் குழுவைப்
யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களின் ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வு இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. வல்வை வேம்படிப் பகுதியில் அமைந்துள்ள யோகநாயகி கல்விக் கூடத்தில் சுமார் 1130 மணியளவில், முகாமைத்துவ கற்கைநெறியை முடித்து வெளியேறியுள்ள வடமராட்சியைச் சேர்ந்த
பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் இந்த வருடத்திற்கான விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில், இன்று ஆண்களுக்கான உதைபந்துப் போட்டிகள் ஒரு பகுதி இன்று வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்துள்ள கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்திலும் மறுபகுதி திக்கம் இளைஞர் விளையாட்டுக்
யாழ்பாணத்தில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலயங்களில் ஒன்றானதும் திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களுக்குச் சொந்தமானதுமான வல்வெட்டித்துறை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகியது. இன்று முற்பகல் சுமார் 1040 மணியளவில் ........
பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் இந்த வருடத்திற்கான விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில், இன்று ஆண்களுக்கான உதைபந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப் போட்டிகளின் ஒரு பகுதி இன்று வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்துள்ள கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்திலும் மறு பகுதி திக்கம்...
இன்றைய முதலாவது போட்டியில் நவசக்தி விளையாடுக் கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் மோதவுள்ளது. இரண்டாவது போட்டியில் கலட்டியை எதிர்த்து கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாடுக் கழகம் மோதுகின்றது.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான பருத்தித்துறை லீக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள கழகங்களுகிடையிலான இன்றைய முதலாவது போட்டியில் திக்கம் விளையாடுக் கழகம் வதிரி பொம்மர்ஸ் உடன் மோதியது. இந்த ஆட்டத்தில் வதிரி பொம்மர்ஸ் 2 : 1 என்ற கோல் கணக்கில்
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் அமைந்துள்ளதும் தற்பொழுது இலங்கை அரசுக்கு சொந்தமானதுமான கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத் வருடாந்த திருவிழா எதிர்வரும் 16 மற்றும் 17திகதிகளில் நடைபெறவுள்ளது. இத் திருவிழாவிற்காக இலங்கை மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த சில..
வல்வை வாலம்பிகா சமேத ஸ்ரீ வைதீஸ்வர சுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் நாளை 01 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. உற்சவங்கள் யாவும் முற்பகல் பத்து மணி முதல் இரவு பன்னிரண்டு மணிக்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என ஆலய தர்ம கர்த்தாக்கள் அறிவித்துள்ளனர். 15 நாட்கள்...
சிறந்த நாடகக் கலைஞரும், சிறந்த கல்விமானுமாகியயாழ் வடமராட்சியின் கரவெட்டிக் கிராமத்தைச் சேர்ந்த K.S.பாலச்சந்திரன் அவர்கள் கனடாவில் நேற்று முன்தினம் 26. 02. 2014 அன்று காலமானார். இதையொட்டி இச் சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகின்றது. 'தெனாலி' திரைப்படத்தில் தான் பேசிய...
மகா சிவராத்திரி விழாவையொட்டி வல்வெட்டித்துறை சிவன் கோவிலிலும் சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தன. விசேட அபிசேகம் மற்றும் 3 ஆம் ஜாமப் பூஜைகளைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா வந்திருந்தார். படங்களில் சுவாமி வீதி உலா வருவதனைக் காணலாம். இந்த நிகழ்வு இரவு 12 மணியளவில் நடைபெற்றிருந்தது.
.
வல்வை விளையாட்டுக் கழகத்தினால் பருத்தித்துறை லீக்கிற்குள் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டுவரும் இந்த வருடத்துக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் சுற்று இன்று மீண்டும் ஆரம்பமாகின்றது. இதன் வரிசையில் இன்றைய முதலாவது போட்டியில் திக்கம் விளையாடுக் கழகத்தை...
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த க.அரவிந்த் இனுடைய தயாரிப்பில் இந்தியாவின் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு நாளை வெளிவரவுள்ள பனிவிழும் மலர்வனம் என்னும் தமிழ் திரைப்படத்தின் சில புகைப்படங்கள் மற்றும் படத்தின் விவரங்கள் பின்வருமாறு.
தொண்டைமானாறு மற்றும் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றுடன் மோதி இறுதிப் போட்டிக்குத் தெரிவான வல்வை விளையாட்டுக் கழகம் (ஆண்கள்), இறுதிப் போட்டியில் தொண்டைமானாறு விவேகானந்தாவுடன் மோதி கிண்ணத்தை தனதாக்கியது. பெண்களுக்கான...
கடந்த வருடம் 2013 மார்கழி மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரப்) பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் சித்திரை மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். மேற்படி 2013 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர
"பனிவிழும் மலர்வனம்" என்னும் திரைப்படம் நாளை திரையிடப்படவுள்ளதாக திரைப்படக் குழுவினர் அறிவித்துள்ளானர். வல்வைச் சார்ந்தவர்கள் சிலரால் கடந்த வருடம் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இத் தமிழ் திரைப்படம் பற்றி ஏற்கனவே வல்வெட்டித்துறை.org நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நாளை இந்துகளின் முக்கிய சிவ விரதமான மகா சிவராத்திரி தினம் ஆகும். இதையொட்டி இலங்கையில் அரச வங்கி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளைய சிவராத்திரி தினத்தன்று இந்துக்கள் ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகள் மற்றும் வீடுகள் தோறும் சிவனது வாகனமான நந்தி பொறித்த சைவர்களின் நந்திக் கொடியை ஏற்றி..........
கடந்த 21 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் இந்த வருடத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி நாளை மறுதினம் மீண்டும் ஆரம்பமாகின்றது. வல்வை விளையாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள போட்டிகளுக்கான புதிய நேர அட்டவனை (Fixture) பின்வருமாறு
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த 8 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திரு.மார்க்கண்டன் திருநீலகண்டன் (Deputy General Manager, Asia Asset Finance Plc) சிறுப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
2014 ஆம் ஆண்டிற்கான வல்வை நகரசபையின் வரவு செலவுத் திட்டமானது முறையற்ற வகையில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி வல்வை நகரசபையைத் சேர்ந்த பிரதி நகரசபைத் தவிசாளர் திரு.சதீஷ் உட்பட்ட 5 உறுப்பினர்கள் யாழ் மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த....
"ஆங்கிலம் பேசும் பாடசாலை" என்னும் நிகழ்ச்சித் திட்டத்திற்கூடாக மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆங்கிலம் கற்பிக்கும் முறை இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் (வைஷ்வா) மற்றும் வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (வெடா) இணைந்து மீண்டும் துணிகளில் அச்சிடும் தொழில் நுட்ப (Textile Screen Printing) வகுப்பினை எதிர்வரும் பங்குனி 3 ஆம், 4 ஆம் திகதிகளில் நடாத்த ஏற்பாடுசெய்துள்ளனர். இது சம்பந்தமாக வைஷ்வா வெளியிட்டுள்ள விபரம் வருமாறு.
தயட்ட கிருல்ல தேசிய அபிவிருத்தித் திட்டம் 2014 இந்த வருடம் கேகாலே , புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றது. பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலையான உடுக்கும் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன் வரிசையில் தனி நபர் உடுக்கு .....
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக பொதுக் கூட்டம் கடந்த ஞாயிறு 23/02/14 அன்று நடைபெற்றுள்ளது. மாலை 5.00 மணிக்கு கழகத் தலைவர் திரு.பொ.ஈஸ்வரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரியப்பட்டுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.