Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
நீண்ட காலமாக சிறந்த முறையில் பராமரிக்கப்படாமல் இருந்த, வல்வை சென்.செபஸ்தியர் தேவாலயத்திற்கு உதவ வல்வை நலன் விரும்பிகள் சிலர், சில மாதங்களின் முன்னர் உதவ முன்வந்ததையடுத்து, வல்வை சென். செபஸ்தியர் தேவாலய நிர்வாகம் முதற்கட்ட வேலைகளுக்கான விபரங்களை, அறிவித்திருந்தனர்.
தேர்த்திருவிழா முடிந்த பின் காத்தவாரயன் வெளிவீதி எழுந்தருளிய பின் கழுவேரி முன் படையலிட்டு பூசை நிகழ்வுகள் நடைபெற்றன . பூசை முடிந்த பின் பக்தர்கள் நேர்த்தி வைத்த கால்நடைகளுக்கு (ஆட்டுக்கடா, சேவல்) மஞ்சள் தண்ணீர்தெளிக்கபட்ட பின்னர், படையல் சோறு பக்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் ஒன்று திரண்டு வல்வை முத்துமாரி அம்மனை தரிசிக்க இங்கு வருகை தந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் கல்வி கற்ற சிதம்பராக்கல்லூரியை பார்வையிட பழைய மாணவர் தாய் சங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 14ம் நாளான இன்று பகல் 7மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் முத்துமாரியம்மன், முருகன் மற்றும் பிள்ளையார் தனித்தனி தேரில் ஏறி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 13ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவில் முத்துமாரியம்மன் சப்பறத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
வல்வை நலன் புரிச்சங்கத்தின் கலந்துரையாடலும், ஒன்றுகூடலும் (Discussion and Get to - gether) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 28.04.2013 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 11 ம் நாளான இன்று நண்பகல் 01.30 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவில் முத்துமாரியம்மன் வசந்தோற்சவம் (பூங்காவனம்) வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
சிதம்பராகல்லூரி பழைய மாணவர்களின் விபரக்கோவை தயாரிக்கும் பணி பழைய மாணவர் மாபெரும் ஒன்றுகூடலில் ஆரம்பமாகவுள்ளது. இந்த விபரக்கோவையானது கல்லூரியுடன் தொடர்புகள் அற்றிருக்கும் உங்கள் நண்பர்களை ஒருங்கிணைக்க மிகவும் பயன்படும்.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 10 ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரியை தொடர்ந்து, இரவு 8மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இத் திருவிழாவில் அம்மன்,முருகன் மற்றும் பிள்ளையார் தண்டிகை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 10 ம் நாளான இன்று பகல் 10 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் முத்துமாரியம்மன் பூந்தொட்டி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குறுகிய காலப்பகுதியில் நிறைவேற்றபட்டுள்ள இந்த வேலைதிட்டங்களை நேரில் பார்வையிட சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் ஒன்று திரண்டு வல்வை முத்துமாரி அம்மனை தரிசிக்க இங்கு வருகை தந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் கல்வி கற்ற சிதம்பராக்கல்லூரியை பார்வையிட பழைய மாணவர் தாய் சங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 8ம் நாளான இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வேட்டைத் திருவிழாவிற்கான வசந்த மண்டப பூசை ஆரம்பமாகி ஒற்றை குதிரை வாகனத்தில் ஏறி, அம்பாள் வேட்டைக்கு புறப்பட்டார்.
வல்வை பொது விளையாட்டரங்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முதலாவது ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு, இன்று மாலை அவ விளையாட்டரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வல்வை சிதம்பராக்கல்லூரியின் இடைநிறுத்தப்பட்ட புதிய ஆண்கள் கழிப்பறை அமைக்கும் வேலைகள்
பழையமாணவர் சங்கத்தின் முயற்சியால் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. CWN ஆல் முன்னெடுக்கப்பட்ட சிதம்பராக்கல்லூரி புதிய கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் மாசி மாத ஆரம்பத்தில் முற்றாக நிறுத்தப்பட்டது.
வல்வெட்டிதுறையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வல்வை விளையாட்டுக்கழகத்திற்கும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணிக்குமிடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி, இன்று மாலை வல்வை பொது விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 4ம் நாளான இன்று காலை 10 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் ஆரம்பித்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விஜய புதுவருடத்திற்கான சிறப்பு பூசைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.