Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
பச்சைக் கிளி வாங்க முன்னர் கிளிக்கு ஒரு கூடு வாங்குதல் வேண்டும்! கிளியை வாங்கியபின்னர் கூடுவாங்குவோம் என்று நினைப்பது மடமை!
இந்தக் கட்டுரை எமது வல்வை மக்களின் மனங்களை நன்கறிந்து கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்களையும் மனதில் கொண்டு ஒரு நடுநிலையில் நின்று எழுதப்பட்டுள்ளது!
படத்தில் காணப்படுவது 11.75 அடி நீளமுடைய வல்வை நாயகி எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிய பாய்மரக்கப்பல் ஆகும். யாழ் தீபகற்பத்தின் வடமராட்சியின் கிழக்கு கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நாகர் கோவில் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள இக்கப்பல், நாகர் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 7 ஆம் திருவிழாவான கப்பல் திருவிழாவின் பொழுது பயன்படுத்தப்படுவதாகும்.
வல்வெட்டித்துறை தீருவில் பிரதேசத்தில் அமைந்துள்ள புட்கரணி (புட்டணி) ஆலயத்தின் கோபுரம் மற்றும் மணிக்கூட்டு கோபுரம் என்பன புதிதாக நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
வல்வெட்டித்துறை ஆதிகோவில் கடற்பிரதேசத்தில் உள்ள நான்கு வான்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. பிரதேசவாசிகளின் தகவல்களின் படி, ஒவ்வொரு வானும் சுமார் 3 தொடக்கம் 4 அடி வரை ஆழப்படுத்தப்பட்டும் 20 தொடக்கம் 25 அடிவரை அகலப் படுத்தப்பட்டுமுள்ளன. ஆனாலும் இதை ஏனைய வழிகளில் உறுதிப்படுத்தப் பட முடியவில்லை.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவிலில் எண்ணைக்காப்பும் மகா கும்பாபிஷேகமும் முறையே நாளையும் (செவ்வாய்க் கிழமை) நாளை மறுதினமும் (புதன் கிழமை) நடைபெறவுள்ளன. மகா கும்பாபிஷேக கிரியா கால நிகழ்வுகள் ஏற்கனவே கடந்த 21ஆம் திகதியில் ஆரம்பித்து தற்பொழுது நடைபெற்றுவருகின்றன.
தொண்டைமானாற்றில் உள்ள உதவித் தபாற் கந்தோருக்கு தேசிய சேமிப்பு வங்கியால், அதன் சேமிப்புத் தரவுகளை உடனுக்குடன் பதிவு செய்யும் நோக்குடன் online வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வடமராட்சியில் இவ் online வசதியை தொண்டைமானாறு உதவித் தபாற் கந்தோர் மாத்திரம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வசதி கடந்த 1ஆம் திகதியிலிருந்து செய்து கொடுக்கப்பட்டுள்ளது
அன்னபூரணி சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் ஒருமுகப்படுத்தும் நோக்குடனும், அன்னபூரணி கப்பல் பற்றி மற்றவர்களுக்கு மேலும் தெரியப்படுத்தும் வகையில் நாம் அன்னபூரணி கப்பலுக்கு என ஒரு பிரத்தியேக பகுதியை உருவாக்கியுள்ளோம். அப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள படங்களின் தொகுப்பு, இங்கே மீள் பதிவு செய்யப்படுகின்றது.
பொலிகண்டி அருள்மிகு கந்தவன சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா நேற்று காலை சிறப்பாக நடைபெற்றது. கடந்த 14ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நடைபெறவுள்ளது.
இப்பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினாராக பேராசிரியர் மா. சின்னத்தம்பி ( கல்வியியல் பேராசிரியர், கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு ஐ. செல்வராசா (உதவிக் கல்விப் பணிப்பாளர், (ஆங்கிலம்) வலயக் கல்வி அலுவலகம் வடமராட்சி ) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்
வல்வை மகளீ ர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் வல்வெட்டித்துறை சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைகளின் அடுத்த கட்டப் பணிகளின் ஒரு பகுதி பூர்த்தியாகின்றன.
ஜப்பானின் MOL கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான கொள்கலன் கப்பல் (Container ship) "MOL Comfort' கப்பல், அதன் அடிப்பாகத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பைத் தொடர்ந்து இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியுள்ளது
சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடத்தப்பபட்ட கணிதப்போட்டி விடைத்தாள்கள் திருத்தும் பணி கணிதப்போட்டி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் பல பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்துள்ளார்கள்.
அன்னபூரணி எனும் கப்பல் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு 1936 ஆம் வருடம் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு, பின்னர் கொழும்பு துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தை சென்றடைந்த 75 ஆவது வருடத்தைச் (1st August 1938) சிறப்பிக்கும் முகமாக Valvettithurai.org ஆல், அ. சி. விஷ்ணுசுந்தரம் நினைவு மையத்தின் (Canada) அனுசரணையுடன் ஓவியப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்த சபையினரால், வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ''ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்'' ஆனது எதிர்வரும் ஆவணி மாதம் திறக்கப்படவுள்ளதாக நிர்வாகசபையினர் valvettithurai.org ற்குத் தெரிவித்துள்ளனர்.
வேலம்பிராய் கண்ணகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு பலதிருப்பணி வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இக் கோவிலானது கடந்த காலங்களில் முற்று முழுதாக அழிவடைந்திருந்தமை குறிபிடத்தக்கது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை 22.06.2013 அன்று பரிசளிப்பு விழா பிற்பகல் 02.00 மணியளவில் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன், பாடசாலை மண்டபத்தில், அதிபர் திரு. ஆ. சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறையில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் பொதுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முடிவெடுத்துள்ளதாக நகரசபை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு மற்றும் அதனை அண்டிய சுற்று வட்டாரக் கிராமங்களான கொம்மாந்தறை மற்றும் கெருடாவில் போன்ற பிரதேசங்களில் வெங்காயப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 x 1.5 x 3.5 என்ற அளவில் செய்யப்படவுள்ள இந்த மாதிரிக் கப்பல், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி கொள்கலன் கப்பலைப் போல் கண்ணாடியால் மூடப்படவுள்ள இக்கப்பலைச் செய்வதற்கு சுமார் 2 மாதங்கள் எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வடமராட்சியின் சகல பாடசாலைகளினதும் இத்தகைய தாய்க்கட்டடங்கள் கம்பீரமாக காட்சியளிக்கையில் எமது பாடசாலையின் இந்த தாய்க்கட்டடமானது ஆராதனை மண்டபத்தையும் வகுப்பறைகளையும் கொண்டு சிதைந்த நிலையில் காணப்படுகின்றது.
எனது முதலாவது கட்டுரையில் கடந்த எழுபத்து ஐந்து வருடகாலத்தல் கப்பல் கட்டுவதற்கு அதிமுக்கிய காரணங்களாகிய 'கப்பல் கட்டும் தேவை' மற்றும் 'அரசாங்க உதவி' என்பவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது பற்றியும் மற்றயை பல காரணங்களில் வல்வையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் பார்த்தோம்.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிகழ்வையொட்டி இன்று நடைபெற்ற வதிரி டைமண்ட் மற்றும் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டம், வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழக வீரர்கள் மீது நடுவர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடையில் நின்றது.
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் வல்வெட்டித்துறை சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைகளின் ஒரு பகுதி தற்பொழுது ஏற்கனவே PM foundation னுடைய முயற்சியால் பூர்த்தியாக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மீண்டும் அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படுள்ளன.
Central finance company (PLC) ஆனது வல்வெட்டித்துறை ஆதிகோவில் மீனவர்களுக்கு குறுகிய
கால அடிப்படையில் கடன் வழங்க முயற்சி எடுத்துள்ளது. இது சம்பந்தமாக Central finance company உத்தியோகத்தர்களால் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கான ஒரு விளக்கம் கடந்த 14 ஆம் திகதி ஆதிகோவில் பொது மண்டபத்தில் நடைபெற்றது.
தொண்டைமானாற்று புதிய பாலத்தின் இருபக்க வீதிகளும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இவ் வேலைகள் வரும் 20 ஆம் திகதி பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாற்று வலுவுடைய, வல்வை புளுஸ் விளையாட்டு கழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், செல்வன் பாலச்சந்திரன் ஜெகன் (வயது 26) 110 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் 25.54 செக்கனில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
சிதம்பரா கல்லூரி நலன்புரி வலையமைப்பினால் (CWN) நேற்று கணிதப்போட்டி (Mathematics Challenge) 2013 பிரித்தானியாவில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளதாக சிதம்பரா கல்லூரி நலன்புரி
வலையமைப்பு அறிவித்துள்ளது.
கனடாவிலுள்ள பிரம்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், வல்வெட்டித்துறை பூர்வீகமாகக் கொண்ட 40 வயதுடைய தங்கவேல் கோபிநாத் என்பவரும் அவரது 5 வயது மகளான ஆரணியும் சம்பவம் இடத்திலே பலியானார்கள். இவர்களோடு காரில் பயணித்து சம்பவத்தில் காயமடைந்துள்ள தாயும், இன்னுமொரு 3 வயதான மகளும் வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.