Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென்அண்டநிஷ் விளையாட்டுக்கழகம் மோதியது.
வல்வெட்டித்துறையிலுள்ள மதவடி கடற்கரையில் ராட்சத சுறா மீனொன்று கரையொதுங்கியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வல்வெட்டித்துறையிலுள்ள மதவடியைச் சேர்ந்த செல்வராசா என்பவரது வள்ளத்தில் பிடிபட்ட இந்த சுறா மீனானது சுமார் 20 அடி நீளம் மற்றும் 5 - 6 அடி அகலமும் 5-6 தொன் நிறை கொண்டது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டுவரும் உதைபந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டங்கள் நேற்று இரவு மிகப்பிரமாண்டமான மின்னொளியில் இரவு நடைபெற்றது.
மொறட்டுவு பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தின் தமிழருவி (கலை விழா) இன்று ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் பிற்பகல் 03.30 மணியளவில் ஆரம்பித்திருந்த இந்த விழாவில் அரங்கம் நிறைய பார்வையாளர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
இப்பரிசளிப்பு விழா நிகழ்விற்கு திரு.நடராசா சுந்தரம் (Ex dean, Faculty of Management studies, University of Jaffna) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினரைக் கெளரவிக்கும் நிகழ்வு பாண்ட் வாத்தியங்கள் சகிதம் நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய வீதியில் இருந்து ஆரம்பித்திருந்தது.
இச் சேவைகளின் மூலம் சமுதாயத்தில் இனம் காணப்படாத ஏழை மக்கள், விதவைப்பெண்கள், கல்வியைத் தொடர்வதில் கஷ்டங்களை எதிர்நோக்கும் மாணவர்கள், முன்பள்ளிகள், அதில் கல்வி பயிலும் சிறார்கள், பாடசாலைகள், தொண்டர் ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள், சைவத் தொண்டர்கள் என பலதரப்பட்டோர் பயன் அடைகின்றனர்.
தொண்டமனாறு ஒற்றுமை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 10 ஓவர்களைக்கொண்ட மென்பந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டம் இன்று காலை தொண்டமனாறு கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இக் கால் இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
"வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா" ஆனது வரும் 11 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது என நகரசபை வட்டாரங்களிலிருந்து வல்வெட்டித்துறை.org ற்கு தெரியவருகின்றது. இது சம்பந்தமான முடிவுகள் நேற்றைய (05-07-13) நகரசபை உறுப்பினர்கள் மட்டத்திலான கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் நேற்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகம் மோதியது.
வல்வை ஆதிசக்தி முன்பள்ளியின் 26ம் ஆண்டு நிறைவையொட்டி பாலகர்களின் வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று பிற்பகல் 0300 மணியளவில், வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் ஜூலை முதலாம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவர்கள் மற்றும் வல்வை மகளீர் மகா வித்தியாலய மாணவர்களால் டெங்கு விழிப்புணர்வு தினம் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழாவையொட்டி அவ் விளையாட்டுக் கழகத்தால் நாடாத்தப்பட்டுவரும் நேற்றைய ஆட்டத்தில் புத்தூர் கலைமதி அணியை எதிர்கொண்ட வதிரி டைமன்ட்ஸ் விளையாட்டுக்கழகம் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளது.
திரு.வயித்தியலிங்கப்பிள்ளை புலவர் அவர்கள் வல்வையின் குறிப்பிடத்தக்க முதலாவது அடையாளமாவார். வல்வெட்டிதுறையானது திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்த இடமென்பது வெளிப்படயானவொன்று. மேலும் ரெலோ (TELO) ஸ்தாபகர்களில் ஒருவரான திரு.குட்டிமணி அவர்களும், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின்
நகரசபை வட்டாரங்களிலிருந்து valvettithurai.org கிடைத்த தகவல்களின் பிரகாரம், இத்திட்டமானது 2012 ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் அமைவதால், இவ் நிர்மான வேலைகள் விரைவாக முடிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், திட்டத்தைப் பூர்த்தியாக்க சுமார் 8 மாதங்கள் (சித்திரையிலிருந்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற உதைப்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் தோல்வி பெற்றுள்ளது .
இவ் இணையதளத்தின் ஆசிரியர்களாக Master Mariners (Captains), பல்கலைக்கழக மாணவர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் குறைந்தது க.பொ.த (உ / த) இல் சித்தி பெற்றுள்ள சிலரும் உள்ளனர். இதைவிட இவ் இணையதளத்துக்கு பல்வேறு துறை வல்லுனர்களின் ஆலோசனைகளும் அவ்வப்போது கிடைக்கப்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பறவைகள் வருடந்தோறும் இக்காலப்பகுதியில் இங்கும் வருகை தருவது வழமை. முள்ளி வெளிப் பகுதியானது ஆங்காங்கே நீர்த்தேக்கங்களைக் கொண்ட பிரதேசம் என்பதும், இந்த நீர்த்தேக்கங்களில் பறவைகளுக்குத் தேவையான இரைகள் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டிதுறை கலை கலாசார இலக்கிய மன்றத்தால் வருட வருடம் நடாத்தப்படும் கலை இலக்கிய போட்டிகளின் முதற் கட்டப் போட்டிகள் கடந்த 29,30ம் திகதி நடைபெற்றிருந்தன.
சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பின் (CWN) பொதுக்கூட்டம் எதிர்வரும் 14th July Sunday 5pm-7.30pm @ Conference Hall , 31-39 Kingwood House , Mile Road , Mitcham, CR4 2DN இல் நடைபெறவுள்ளதாக CWN அறிவித்துள்ளது. மேலும்
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகிகள் சபை தெரிவும் நேற்று முற்பகல் (30/06/13) 11.00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. பாடசாலை பொது மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற உதைப்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது .
இவர்கள் ஒரு சமூகத்தை வழி நடாத்துபவர்களாக இருப்பின் இது கட்டாயம் சுட்டிக் காட்டப்படவேண்டும் என்பதற்காகவே இதை நாம் எழுதுகின்றோம். இது ஒன்றும் போட்டி பொறாமையால் எழுதப்படவில்லை எல்லோரும் ஒன்றாகச் செயற்படவேண்டும் .........
மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2013) அன்று பிற்பகல் 03.00 மணியளவில் கொழும்பு இராமகிருஷ்ணமிசன் மண்டபத்தில் தமிழருவி (கலை விழா) நடாத்தப்படவுள்ளது.
குஞ்சர் கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட Star of Vadamaradchi மென்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று குஞ்சர் கடை கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை கலை, இலக்கிய மன்றத்தால் நேற்று கோலம், கவிதை மற்றும் சித்திரப் போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தன. கீழ்ப்பிரிவினருக்குரிய இப்போட்டிகள் வல்வெட்டி மொடேர்ன் கல்வி நிலையத்தில் நடாத்தப்பட்டிருந்தன.
திருகோணமலை நகரிலிருந்து வடக்கே பதினொரு கிலோ மீற்றர் தொலைவில் சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 27 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 6ஆம் திகதி வரை நடைபெற்றிருந்தது. அழகான இயற்கைக் காட்சிகளையுடைய சல்லியில் குறிப்பிடக்கூடிய வல்வையர்கள் வசித்து வருகின்றார்கள் என்பதும் இங்கு குறிபிடத்தக்கது.
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பொதுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முடிவெடுத்துள்ளதை அடுத்து, வல்வை நகரசபையால் அதற்குரிய பெயர்ப்பலகை வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா எனப் பெயரிடப்பட்டு தற்பொழுது நாட்டப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியினால் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் விபரக் கோர்வை கடந்த சித்திரை மாதத்தில் ஆரம்பிக்கப் பட்டிருந்தது. ஆனாலும் இதில் இதுவரை 57 பழைய மாணவரே பதிவு செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக பழைய மாணவிகள் நால்வரே பதிவு செய்துள்ளனர்.
வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 100 வது ஆண்டை நிறைவை முன்னிட்டு, அவ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து பாசையூர் சென்அன்டனிஷ் விளையாட்டுக்கழகம் மோதியது.
வல்வெட்டித்துறை ஆதிகோவில் முன்பள்ளியான சிறுவர் பாடசாலை 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆதிசக்தி சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டுவரும் இப் பாலர் பாடசாலையில் சுமார் 55 வரையான சிறார்கள் கல்வி கற்று வருகின்றார்கள்.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.