வல்வெட்டித்துறையிலும் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினம் நினைவேந்தல் இடம்பெறும் என அறியமுடிகிறது. இதற்கு முன்னோடியாக இன்று வல்வை தீருவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் (National forum tamil culture) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் வல்வையின் பொது அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.
கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வல்வை தீருவில் பகுதியில் முன்னர் அமைந்திருந்த தூபி அடியில் சிரமதானம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கீழே படத்தில் வல்வை தீருவில் பகுதியில் குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு போராளிகளின் ஞாபகார்த்த நினைவு தூபியினை காணலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.