பொலிகை ஒற்றுமை வி . கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் 12 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட சுற்று தொடரில், பொலிகை ஒற்றுமை விளையாட்டு கழக மைதானத்தில் இன்று நடைபெற்ற அரை இறுதியாட்டத்தில் வல்வை வி.கழகத்தை எதிர்த்து உபயகதிர்காமம் வி.கழகம் மோதியது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வல்வை சிதம்பரக்கல்லூரி மைதானத்தில் வல்வை ஆதிசத்தி விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ட சுற்றுதொடரில் இன்று மயிலங்காடு ஞானமுகன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு கழகம் மோதியது.
தொழில் நுட்பவியல் கல்லூரிகளில்/ தொழில் நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகள் தொடர்பாக தகமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.
யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரியின் 2010/2011 ஆம் ஆண்டிற்கான நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் 11/11/2012 அன்று கல்லூரியின் கலையரங்க வளாகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கணபதி பாலர் பாடசாலை பாலர்களின் திருக்குறள், கொன்றைவேந்தன் மனப்பாடம் செய்யும் போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) வல்வை மகளீர் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
ஆதிசத்தி வி. கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இளவாலை யங்கென்றிஷ் வி. கழகத்தை எதிர்த்து உரும்பிராய் சென்மைக்கல் வி. கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் இளவாலை யங்கென்றிஷ் வி. கழகம் 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது.
யாழ்ப்பாண குடா நாட்டின் அடித்தளம் சுண்ணாம்புக் கற்பாறைகளைக் கொண்டது. இந்தியத் தமிழகத்தின் நீட்ச்சியாக இருந்த நிலப்பரப்பின் தாழ்வான பகுதியைக் கடல் கபளீகரம் செய்தமையாலேயே இலங்கை தனித் தீவாக உருவானது.
வல்வெட்டித்துறையின் சுற்றுலாத்தலங்களை வெளிகொணர்ந்து, எல்லோருக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் எமது இணையத்தளம் ஒரு புதிய பகுதிய ஆரம்பித்துள்ளது. குறிப்பிட்ட சுற்றுலாத்தலங்களை இணையதளத்தில் பார்வையிடுவதற்கு பின்வரும் இணைபிற்குச் செல்லவும்.
ஆதிசத்தி வி .கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உடுப்பிட்டி நவஜீவன் வி .கழகத்தை எதிர்த்து இளவாலை சென்லூட்ஸ் வி .கழகம் மோதியது. ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல்கள் வீதம் பெற்றன . இதனால் போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக தண்ட உதையினை நடுவர்கள் நாடினர்.
வல்வை சிதம்பராக்கல்லூரியில் கடந்த பல ஆண்டுகளின் மேலாக இயங்கமுடியாத நிலையிலிருந்த விஞ்ஞான ஆய்வு கூடத்தின் புனரமைப்பு வேலைகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இக்கல்லூரியானது 1985 இற்கு முற்பட்ட காலப்பகுதிகளில் யாழ் மாவட்டத்திலேயே முன்னணித் தரத்திலான விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இரு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவது ஆட்டத்தில் அண்ணா சிலையடி வி .கழகத்தை எதிர்த்து நியூட்டன் வி .கழகம் மோதியது. இவ் ஆட்டத்தில் அண்ணா சிலையடி வி.கழகம் 1:0 என்ற கோல்கணக்கில் வெற்றியிட்டியது.
வல்வை அணிக்கும் புதுக்குடியிருப்பு (கோம்பாவில்) உதிக்கும் திசை அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்டம் (11 நபர், 5 நபர்) மற்றும் மென்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இன்று நெடியகாடு இளஞர் விளையாட்டுக்கழக மைதானத்திலும் வல்வை பொது விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றது.
171 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் இறங்கிய சிதம்பராக்கல்லூரி, 85 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. (பரிசளிப்பு விழா படங்கள் முழுதும் 'Photos' ற்குள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று நடைபெறவுள்ள பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் பொன்மாலைப்பொழுது நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. பிரான்ஸ் வாழ் வல்வை மக்களின் பொன்மாலைப்பொழுது நிகழ்வு மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
நடைபெறும் கிரிக்கெட் தொடரினை (சிதம்பராக்கல்லூரி vs நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்) முன்னிட்டு, போட்டி ஏற்பாட்டுக் குழுவினரான வல்வை சிதம்பரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் - சிறப்புமலர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வல்வை சிதம்பரக்கல்லூரியும், நெல்லியடி மத்தியமகா வித்தியாலமும் மோதும் மென்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இரண்டாவது நாள் போட்டிகள் இன்று ஞாயிறு கிழமை நடைபெறவுள்ளது.
நிலாம் புயலினால் தரை சாய்ந்த சிவன்கோவிலின் இரண்டு புதிய தேர்களும் நேற்று (வெள்ளிக்கிழமை) முழுமையாகத் திருத்தப்பட்டு, தரை உயர்த்தப்பட்டு இருப்பதை படங்களில் காணலாம்.
வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறாவளியுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்கள், இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தை தொடர்பு கொள்ளும் வகையில் விசேட தொலைபேசி இலக்கம் (11-2670002) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகி இலங்கையின் பல பகுதிகளைத் தாக்கி சேதங்களை ஏற்படுத்திய புயலுக்கு பல்வேறு பெயர்கள் (நிலாம், நீலம் மற்றும் நிலம்) தமிழ் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை இலங்கை வங்கிக்கிளை இன்றிலிருந்து தனிக்கிளையாக மாற்றப்படுகின்றது. இதுவரைகாலமும் பருத்தித்துறை இலங்கை வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த வல்வெட்டித்துறை இலங்கை வங்கி இன்றிலிருந்து தனிக்கிளையாக மாற்றப்படுகின்றது.
இலங்கைக்கு கிழக்காக நிலைகொண்டிருந்த 'நிலாம்' புயல் (Tropical cyclone ) நேற்று மாலை இலங்கைக்கு வடகிழக்காக இந்தியாவை நோக்கி நகர்ந்து சென்னையை கடந்து சென்று வடமேற்கு திசையில் தற்பொழுது நகர்ந்து கொண்டிருக்கின்றது.
வல்வெட்டித்துறை மதவடியில் தில்லையம்பதி என்பவரின் வீட்டில் காணப்பட்ட ராஜநாகம் ஒன்று, இரண்டரை மணிநேர போராட்டத்தின் பின் பிடிக்கப்பட்டு, பின் பத்திரமாக கெருடாவில் (Kerudavil) மாயவர் கோவிலில் விடப்பட்டுள்ளது.
புயல் (Tropical cyclone) 'நிலாம்' சென்னையை மாலை 5 மணியளவில் கடக்கின்றது. பலத்த காற்றின் காரணமாகவும், இடைவிடாத மழையினாலும் பல உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக, குறிப்பாக யாழ்பாணத்தின் வடக்கு மற்றும் தெற்கு கரையோர பகுதிகள் அறியப்படுகின்றது.
வல்வெட்டித்துறையில் கடந்த 2 நாட்களாக நிலாம் புயலினால் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சிவன் கோவிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 2 தேர்கள்..
முல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் மையங்கொண்டு தற்பொழுது வடமேற்கு நோக்கி சுமார் 8 கடல் மைல் வேகத்தில் நகரும் நிலாம் எனப் பெயரிடப்பட்ட புயல்...
இதுவரைகாலமும் நெடியகாடு, தெணி ஒழுங்கையில் இயங்கி வந்த வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் (VEDA) நேற்றுலிருந்து சில்லாலை வேம்படி எனும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
முல்லைத்தீவிற்கு தென் கிழக்காக சுமார் 70nm தொலைவில் மையங்கொண்டு தற்பொழுது மேற்கு நோக்கி சுமார் 8 கடல் மைல் வேகத்தில் நகரும் புயல் (Tropical cyclone) யாழ்பாணத்தின் ...