Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு வணிகக் கல்வி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர் நியமனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2013 (வியாழக்கிழமை)    
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் திரு.த.ரமேஸ்வரன் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் க.பொ.த.(சா.த) , க.பொ.த.(உ.த) வகுப்புகளிற்கு வணிகக் கல்வி, மற்றும் க.பொ.த.(சா.த) வகுப்புகளிற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (Information and Communication Technology) ஆகிய பாடங்களை கற்பிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக் கல்லூரிக்கு தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்திற்கு ஆசிரியர் நியமனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2013 (புதன்கிழமை)    
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் சிதம்பராக் கல்லூரிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் திரு.தி.சுபாகரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர் க.பொ.த.(சா.த), க.பொ.த.(உ.த) வகுப்புகளிற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (Information and Communication Technology) பாடத்தை தமிழ், ஆங்கில மொழிகளில் கற்பிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.
[மேலும் வாசிக்க...]
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 3வது கலை இலக்கியப் பெருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது - 75 படங்கள் இணைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/01/2013 (புதன்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் தெற்கு வீதியில் 3 வது கலை இலக்கியப் பெருவிழா நடைபெற்றது. இவ் விழாவினைச் சிறப்பிக்க சிறப்பு விருந்தினராக வல்வெட்டித்துறையின் நாடகக் கலைஞர் திரு முத்துச்சாமி அவர்களும், பிரதம விருந்தினராக திரு சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டனர்.
[மேலும் வாசிக்க...]
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் வருடாந்த கலை நிகழ்ச்சி இன்று (01.01.2013) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2013 (செவ்வாய்க்கிழமை)    
வல்வெட்டித்துறையில் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டுவரும் கலை நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் 4.00 மணியளவில்ஆரம்பமாகியது. வல்வைச் சந்தியில் இருந்து நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் வீதியில் அமைந்திருக்கும் பிரதான அரங்கிற்கு, பிரதம விருந்தினர்கள் மேளதாள வாத்தியங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
[மேலும் வாசிக்க...]
வல்வை ஒன்றியத்தின் பூரணம் முதியோர் கொடுப்பனவுத் திட்டம் மற்றும் நவம்பர் மாத ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வையில் செயற்பட்டுவரும், வல்வை ஒன்றியம் தம்மால் முன்னெடுக்கபட்டுவரும் 'பூரணம்' முதியோர் கொடுப்பனவுத் திட்டம், மற்றும் சில திட்டங்களை விளக்கி இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. சம்பந்தப்பட்ட அறிவித்தலையும், மற்றும் November மாத ஒன்று கூடலையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக் கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூட வேலைகள் முழுமையாக பூர்த்தி - CWN
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
கடந்த சில மாதங்களாக CWN (Chithambara College Well wishers Network) இனால் முன்னெடுக்கப்பட்டு வந்த வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூட வேலைகள் முழுமையாக பூர்த்தியடைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தியடைந்துள்ள சிதம்பராக் கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூடத்தினை கீழே உள்ள படங்களில் காணலாம்.
[மேலும் வாசிக்க...]
ஊரிக்காட்டிலுள்ள சாய் நிலையத்தின் ஆண்டு விழா அனுஸ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2013 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை ஊரிக்காட்டிலுள்ள சாய் நிலையத்தின் நான்காவது ஆண்டு விழா நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. நேற்றைய தினம் காலை சுமார் 8.30 மணியளவில் ஆரம்பித்து நண்பகல் வரை நீடித்த இந்நிகழ்வில் சில அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
[மேலும் வாசிக்க...]
எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/01/2013 (செவ்வாய்க்கிழமை)    
எமது வாசக அன்புள்ளங்கள் அனைவருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
[மேலும் வாசிக்க...]
கரப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் வல்வை ரெயின்போ வி . கழகம் வெற்றியீட்டியது
பிரசுரிக்கபட்ட திகதி: 31/12/2012 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட (வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில்) கரப்பந்தாட்ட தொடர் இன்று வல்வை பொது விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படுவதையொட்டி, VEDA பொதுவான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 30/12/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படுவதையொட்டி, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பொதுவான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவிலில் மார்கழித் திருவாதிரை உற்சவம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2012 (சனிக்கிழமை)     [photos]
வல்வை சிவன் கோவிலில் மார்கழித் திருவாதிரை உற்சவம் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருவாதிரை உற்சவத்தின் போது நடராஜப் பெருமான் வீதி உலாவும், நடராஜர் திருக்கூத்தும் இடம்பெற்றது. இலங்கையில் பல சிவன் கோவில்கள் இருந்த போதிலும், நடராஜர் திருக்கூத்து நடைபெறுவது ஒருசில சிவன் கோவில்களில் மட்டுமே.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2012 (சனிக்கிழமை)    
நாளை (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவிருந்த வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரி பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. இப் பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம், வரும் 10.02.2013 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
வடமராட்சி வலயக்கல்வி அலுவலக கணினி வள நிலையத்தில் க.பொ.த (சா.த) எழுதிய மாணவர்களுக்கான கணினி, ஆங்கில வகுப்புக்கள் ((மீள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 29/12/2012 (சனிக்கிழமை)    
வடமராட்சி வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கல்வி நிலையத்தில் க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக Microsoft Office 2007 , Desk Top Publishing (Photoshop, Pagemaker, Coral Draw) மற்றும் ஆங்கிலப் பாட நெறிகள் மூன்று மாதங்கள் நடைபெறவுள்ளன. பங்குபற்ற விரும்பும் மாணவர்கள்.
[மேலும் வாசிக்க...]
வெள்ளம் காரணமாக நேற்றைய தினம் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதி தடைப்பட்டிருந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
கடந்த சில நாட்களாக வன்னியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நேற்றைய தினம் தேராவில் (Theravil) இடத்திலுள்ள மூங்கிலாறு மற்றும் மஞ்சள் பாலம் என்னும் இரு ஆறுகளும் பாதையை மூடி ஓடியமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு வீதி தடைப்பட்டிருந்தது. இவ்வீதி நேற்று வழமைக்குத் திரும்பியதனைக் காணக்கூடியதாக இருந்தது.
[மேலும் வாசிக்க...]
கிளிநொச்சில் நேற்று வாகன விபத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அரசாங்கத்திற்கு சொந்தமான பேரூந்தும், தனியாருக்கு சொந்தமான டிப்பர் ஒன்றும், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2012 (வெள்ளிக்கிழமை)    
யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறை உள்பட பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தொடர்ந்தும் வடக்கு மாகாணத்திலும், வடகிழக்கு, வடமேற்கு கரையோர பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இடைக்கிடையே பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
உணவு, குடிதண்ணீரில் சுகாதாரம் பேணுங்கள், தொற்று நோய்கள் பரவும் அபாயம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2012 (வெள்ளிக்கிழமை)    
தொடர்மழையை அடுத்து வடக்கில் தண்ணீர் மூலமாகப் பரவும் நோய்களின் தொற்று தீவிரமடையலாம் என்பதால் உணவு, குடிதண்ணீர் என்பவற்றின் சுகாதாரத்தைப் பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
[மேலும் வாசிக்க...]
பருத்துத்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 28/12/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
பருத்துத்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிமுதல் நடைபெற்றது. சம்பிரதாயபூர்வ மௌன அஞ்சலி, மங்கள விளக்கு ஏற்றுதல் மற்றும் கல்லூரிகீதம் ஆகியவற்றுடன் ஆரம்பித்த இந்நிகழ்வு, கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. S. திருவாகரன் தலைமையில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் நேற்றைய முன்தினம் சில மணி நேரத்திற்கு திறக்கப்பட்டிருந்தது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/12/2012 (வியாழக்கிழமை)     [photos]
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதால் வான் கதவுகள் நேற்றைய முன்தினம் சில மணி நேரத்திற்கு திறக்கப்பட்டிருந்தது.
[மேலும் வாசிக்க...]
சிவகுரு வித்தியாசாலையில் பூப்பந்தாட்ட பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2012 (புதன்கிழமை)     [photos]
வல்வை சிவகுரு வித்தியாசாலையிலுள்ள பிரார்த்தனை மண்டபத்தில் இன்று காலை பூப்பந்தாட்டஅறிவுரை, ஆலோசனை, பயிற்சிவகுப்பு என்பன பேராசிரியர் திரு. சபா. இராஜேந்திரன் அவர்களால் நடாத்தப்பட்டன.
[மேலும் வாசிக்க...]
பருத்துத்துறை ஹாட்லி கல்லூரியின் ஒன்று கூடல் 27/12/2012
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2012 (புதன்கிழமை)    
பருத்துத்துறை ஹாட்லி கல்லூரியின் ஒன்று கூடல் நாளை 27/12/2012 கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது யாழ்ப்பணத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2012 (புதன்கிழமை)     [photos]
பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து போவதைக் காணக்கூடியதாக உள்ளது.
[மேலும் வாசிக்க...]
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான கிறிஸ்மஸ் மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2012 (புதன்கிழமை)     [photos]
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நத்தார் மரம் ஒன்று 82 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் இலங்கையில் இம்முறை அமைக்கப்பட்ட மிக உயரமான நத்தார் மரம் என்பது குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
வல்வை தேவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை தேவாலாயத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு பங்குதந்தை அவர்களால் திருப்பலி நடாத்தப்பட்டு, இயேசு பாலன் பிறப்பு சிறப்பாக நடைபெற்றது. இயேசு பாலன் பிறப்பை தொடர்ந்து தேவாலாயத்தின் மணி ஒலிக்கப்பட்டு வெடி கொழுத்தப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
பொலிகண்டி மற்றும் ஊறணி குடியேற்றத்திட்டத்தில் நிகழ்வுற்ற கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
பொலிகண்டி மற்றும் ஊறணி குடியேற்றத்திட்டத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தொழுவம் வைத்து இயேசு பாலனின் பிறப்பை சிறப்பாக கொண்டாடினார்கள்.
[மேலும் வாசிக்க...]
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு, நத்தார் பாப்பா உருவத்தை போன்று மின்சாரத்தில் ஒளிரக்கூடிய பட்டம் நேற்று வல்வெட்டித்துறையில் ஏற்றப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை சேர்ந்த உலகுடைய பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் வசிக்கும் (வல்வெட்டித்துறை தேவாலாயத்திற்கு அருகில்) இளைஞர் ஒருவரினால் இந்த பட்டம் ஏற்றப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
எமது வாசக அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 25/12/2012 (செவ்வாய்க்கிழமை)    
எமது வாசக அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
[மேலும் வாசிக்க...]
O/L விஞ்ஞானப் பரீட்சையில் 19 கேள்விகளுக்கு முழுப் புள்ளி
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2012 (திங்கட்கிழமை)    
க.பொ.த. சாதாரண தர விஞ்ஞானப் பாட வினாத்தாள், பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியாகியது உண்மை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் 19 வினாக்களுக்கும், பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் புள்ளிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறையில் நடைபெற்றுவரும் மார்கழி மாத திருவெம்பாவையும், சங்கு ஊதி நிகழ்வும்.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2012 (திங்கட்கிழமை)     [photos]
வல்வை இந்து ஆலயங்களிலும், மார்கழி மாதத்தில் நடைபெற்றுவரும் திருவெம்பாவையும், அதிகாலையில் 02.00 மணிக்கு சங்கு ஊதி நிகழ்வும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
[மேலும் வாசிக்க...]
அடுத்துவரும் சில நாட்களுக்கு கனத்த மழை பெய்யும்! - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/12/2012 (திங்கட்கிழமை)     [photos]
நாட்டில் பல பிரதேசங்களில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Nov - 2024>>>
SunMonTueWedThuFriSat
     
1
2
34
5
6
7
89
101112
13
14
15
16
1718
19
20212223
24252627
28
29
30
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai