Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

Photo with explanation - படமும் விளக்கமும்

The photos in this section are published with a brief description. All the photos, including overseas photos taken by our web team only.

இந்தப் பகுதியில் படங்கள் சிறு விளக்கங்களுடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். பிரசுரமாகும் அனைத்துப் படங்களும், வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட படங்கள் உட்பட, எமது இணையதள குழுவினரால் எடுக்கப்படுபவை ஆகும். 

தொண்டைமனாறு கடல் நீரேரி
Thondaimanaru Lagoon
Uploaded Date: 21/03/2014
தொண்டைமனாறு கடல் நீரேரி

படத்தில் காணப்படுவது வடமரட்சியையும் வலிகாமத்தையும் பிரிக்கும் தொண்டைமனாறு கடல் நீரேரியாகும். அழகானதும் ஆர்பாட்டமற்றதுமான இந்த நீர்ப்பரப்பு தொண்டைமனாறு - சுண்டிக்குளம் கடல் நீரேரியின் ஒரு பகுதியாகும். பிரசித்திபெற்ற செல்வச் சந்நிதி முருகன் ஆலயம், பாரிய நீர்த்தாங்கி, போக்குவரத்திற்கென அண்மையில் கட்டப்பெற்ற புதிய பாலம், நீர்த்தடுப்புப் பாலம், பசுமை நிறைந்த மரங்கள் போன்றன இப்பகுதியை அழகுறச்செய்கின்றன.

யாழ் தீபகற்பத்தில் உல்லாசப் படகுச் சவாரிக்கு (Boating) முதனமையான இடம் இதுவாகத்தான் இருக்கமுடியும்.

Thondaimanaru Lagoon
Photo shows 'Thondaimanaru Lagoon', which separates Valikamam from Vadamaradchi of Jaffna. It also part of Thondaimanaru - Sundikkulam lagoon, which is one the longest lagoon in Srilanka. Thondaimanaru Lagoon is surrounded by famous Selva sannithi temple, newly built water tank, Sluice gate, newly built Bridge and numerous Coconut and Palmyra tress etc.

Thondaimanaru Lagoon is considered as most suitable location for the boating in Jaffna Peninsula.
வல்வை சிவன் கோயிலின் 2 கோபுரங்கள்
Valvai Sivan Kovil Towers
Uploaded Date: 15/03/2014
வல்வை சிவன் கோயிலின் 2 கோபுரங்கள்

படத்தில் காணப்படுவது வல்வெட்டித்துறை சிவன் கோயிலில் அமைந்துள்ள 2 கோபுரங்களாகும். படத்தில் இடமிருந்து வலமாக முதலாவதாகக் காணப்படுவது ஆலயத்தின் மேற்குப்புறத்தில் அமைந்துள்ள பாதி நிலைவரை கட்டப்பட்டுள்ள கோபுரமாகும். இரண்டாவதாகக் காணப்படுவது ஆலயத்தின் தெற்குப்புறத்தில் அமைந்துள்ள பிரதான கோபுரமாகும். இதுவே பழையதுமானதாகும். வல்வெட்டித்துறை சிவன் கோயில், திரு.பிரபாகரன் அவர்களின் மூதாதையர்களிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Valvai Sivan Kovil Towers

Photo shows 2 towers ('Kopuram' in Tamil) seen in Valvettithurai Sivan temple. The first tower (from left) located on the western side of the temple has been built partly, where the second tower which is the main and oldest tower of the temple located in the eastern side. Valvettithurai Sivan temple is said to be belonging to Mr.V.Pirapakaran's ancestors.
ரஞ்சன் குடி கோட்டை
Uploaded Date: 08/03/2014
இந்தியாவின் தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில், சென்னை – திருச்சி நெடுச்சாலையில் (NH-45) உள்ளது இந்த அழகான கோட்டை. 17 ஆம் நூற்றாடில், கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தாராக இருத்த ஒருவரால் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இதற்கான சான்றுகள் கர்நாடக மாநிலத்தின் மைசூர் அரண்மனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும் இதற்கு முன்னர் இங்கு இந்துக் கோவில்கள் இருந்திருக்கலாம் என சில குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சன் குடி கோட்டையின் விபரங்கள் (யாழ் கோட்டையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்)
கோட்டையின் பிரதான கட்டத்துக்கு தொலைவிலேயே ஒரேயொரு வாசல் அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் மதில்கள் 3 அடுக்குகள் கொண்ட சுவார்களாக வெவ்வேறு உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. பிரதான வாசலானது இலகுவாகக் கோட்டையின் மேலிருந்து பார்க்கக்கூடிய வண்ணம் உள்ளது. கோட்டை அரைக் கோள வடிவில்
அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறமாக மதில் சுவர்கள் வழியாக அகழி உள்ளது. அருகில் உள்ள நீரோடையிலிருந்து நீரானது அகழிக்கு வருகின்றது. கோட்டையின் மேலுள்ள பீர்ஙகி சுடுவதற்கான துளைகளானது, வெளியில் இருந்து பார்க்கும் போது தெரியாதவண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. மிக மேற்பக்கத்தில் ஒரு சிறிய குளம் உண்டு. தற்பொழுதும் நீர் வற்றாமல் உள்ளது.

கோட்டையைப் பார்க்க வந்திருந்த ஒருவர் மூலம் கிடைத்த விளக்கங்கள்
இரண்டு மசூதிகள், கீழ் ஒன்றும் மேல் ஒன்றுமாகவுள்ளன. நிலக்கீழ் அறை ஒன்று உள்ளது. சிறைகூடமாக இருந்திருக்கக்கூடும் மிக மேல் பக்கத்தில் ஒரு பாதுகாப்பான ரகசிய இடம் உள்ளது. முக்கிய பொருட்களை வைப்பதற்கு இது பயன் படுத்தப்பட்டிருக்கலாம்.
கோட்டையிலிருந்து சுரங்க வழிகள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
அண்மையில் (ஆவணி மாதம்) இங்கு ஒரு படப் பிடிப்பு நடந்துள்ளது.
இந்திய தொல் பொருள் ஆய்வு நிறுவனத்தின் கீழ் இக்கோட்டை உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனாலும் கோட்டையைப் பற்றிய எந்தவொரு அறிவிப்புக்களோ, விளக்கங்களோ எங்கேயும் இல்லை.

ரஞ்சன் குடி கோட்டையின் மேலதிக எமது புகைப்படங்களை எமது “Photos from Us’ என்னும் பகுதியில் பார்வையிடலாம்.

Link :
The Ranjankudi fort (Ranjankudi Kottai in Tamil, also referred as Nanjankudi Kottai) is located at about 22 Kilometres north of Perambalur district in NH45, Tamil Nadu, India. It is located between Chennai
செண்பகம்
Crow Pheasant
Uploaded Date: 01/03/2014
செண்பகம்
உழவர்களின் நண்பன் எனப்படும் செண்பகம் இலங்கையில் பொதுவாகக் காணப்படும் ஒரு பறவையாகும். யாழ் தீபகற்பத்தில் தோட்டங்கள், தோப்புக்கள் மற்றும் புல்வெளிகள் சார்ந்த பகுதிகளில் இவை பொதுவாக காலை நேரங்களில் காணப்படுகின்றன. படத்தில் காணப்படுவது வல்வெட்டித்துறை ஊரிக்காட்டுப் பகுதியில் காணப்படும் சிவத்த கண்களையும், நீண்ட வாலையும், தவிட்டு நிற இறக்கைகளையும் கொண்ட ஒரு செண்பகம் ஆகும். செண்பகத்தின் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ் ஆகும்

Crow Pheasant
Crow Pheasant (Centropus sinensis) is a widespread resident in Srilanka. They are very commonly found in the farm lands and urban gardens in Jaffna Peninsula during early day hours. Photo shows a large Crow Pheasant, crow-like with a long tail and coppery brown wings with red eyes, seen at Orikadu, Valvettithurai of Jaffna Peninsula.
பிரிட்டன் தொலைபேசிக் கூண்டுகள் - British Telephone Booths
Uploaded Date: 22/02/2014
பிரிட்டன் தொலைபேசிக் கூண்டுகள்

லண்டன் என்று சொன்னால் உடனே நம் நினைவுக்கு வருவது எழில் மிகுந்த பாராளுமன்றம், சிவப்பு நிற இரட்டை அடுக்குப் பேரூந்து, அத்துடன் இந்தச் சிவப்பு நிறத் தொலைபேசிக் கூண்டுகள் தான். இவை பிரிட்டனில் 75 ஆண்டுகளைக் கடந்து இன்றும் சேவையில் உள்ளன.

1935 ம் வருடம் Kiosk No 6 என்னும் பெயருடன் அறிமுகமான இந்தத் தொலைபேசி கூண்டுகளை Giles Gilbert Scott என்பவர் வடிவமைத்திருந்தார்.1968 ஆம் ஆண்டுவரை பிரித்தானியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 60,000 கூண்டுகள் பொருத்தப்பட்டுச் செயலில் இருந்தன.

இன்று மொபைல் தொலைபேசிகள் புதிதாக பரவலாக வந்தாலும், பிரித்தானியாவின் அடையாளங்களில் இந்தத் தொலைபேசிக் கூண்டுகள் இன்றும் பல இடங்களில் பாவனையில் இருக்கின்றன. பல இடங்களில் இருந்து இவை அகற்றப்பட்டாலும் இந்த அடையாளச் சின்னத்திற்கு இன்றும் பெரும் மதிப்பு உண்டு.

எனவே தான் பல இடங்களில் குறிப்பாக லண்டனின் தெருக்களில் இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. லண்டனுக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவரும் கூண்டுகளாக இன்றும் விளங்குகின்றன.

இங்கு யாழ்பாணத்தில் இது போன்றதொரு தொலைபேசிக் கூடுகள் இதுவரை ஒன்றுமில்லை. இனியும் வருவதற்குரிய வாய்ப்புக்கள் இல்லை.
திருச்சி சுந்தரநகர் முருகன் கோயில்
Trichy Syndra Nagar Murugan Kovil
Uploaded Date: 15/02/2014
திருச்சி சுந்தரநகர் முருகன் கோயில்

கடந்த காலப் பிரச்னையால் இடம் பெயர்ந்தாலும் எமக்கே உரிய தனித்துவங்களை இன்னும் விட்டுக் கொடுக்கவில்லை என்றே கூறுகின்றோம். படத்தில் காணப்படுவது தமிழகத்தின் திருச்சி நகரின் சுந்தர நகரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவில். வல்வையர்கள் அதிகமாக வருகைதரும் தலம்.

Trichy Syndra Nagar Murugan Kovil

Photo shows a Murugan temple located in Sundra Nagar of Trichi town of Tamil Nadu, India, where most of displaced VVTrs used to visit.
பனங்கூடல்
Panankkudal
Uploaded Date: 08/02/2014
பனங்கூடல்

அதிக பனைமரங்களின் கூட்டம் பனங்கூடல் (பனை + கூடல்) எனப்படுகின்றது. ஏனைய
மரங்களைப் போலன்றி பனைகள் தாமாகவே வளர்கின்றன. மிக வேகமாக அழிக்கப்பட்டுவரும் பனைகள் தமிழர் நிலங்களின் அடையாளம். இதனால்தான் இப் பனைகள் தலைநகர் கொழும்பின் காலி முகத்திடலில் வளர மாட்டோம் என அடம் பிடித்தனப் போலும்.

Panankkudal (Group of Palmyra)

Group of Palmyra is called ‘Panank kudal’ in Tamil. Unlike other trees Palmyra is grown it self without any human need. Palmyra, which is vanishing drastically in Jaffna Peninsula, is an identity of Tamils. An
attempt to grow Palmyra in Gale face of Colombo has failed in the past.
A9 நெடுஞ்சாலை
A9 Road
Uploaded Date: 01/02/2014
A9 - யாழ் தீபகற்பத்தையும் கண்டியையும் இணைக்கும் இலங்கையின் அதி நீளமான (321km) அகல நெடுஞ்சாலை இதுவாகும்.

The A9 Highway is a 321km long highway in Srilanka, which connects Kandy with Jaffna City of Jaffna Peninusula.
தீர்த்தமும் புகைக்கூடும்
Theertham and Pukai kudu
Uploaded Date: 25/01/2014
Theertham and Pukai kudu

Photo shows a Gas balloon (Pukai kudu in Tamil) is sent to the sky during a Holy bath festival (Ttheertham in Tamil) of Valvai Sri Muthumariyamman, at Orani beach. This type of gas balloons are being made only in Valvettithurai as of now.

படம் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தத் திருவிழா, ஊறணிக் கடற்கரையில் நடை பெறுகின்றது. ஆகாயத்தில் பறக்கவிடப்படுவது புகை கூடு (அல்லது புகைக் குண்டு ஆகும். புகை குண்டுகள் இதுவரை வல்வெட்டித்துறையில் மட்டுமே தயாரிக்கப்படுவது சிறப்புடன் குறிப்பிடத்தக்கது ஆகும்.
திருமுறிகண்டிப் பிள்ளையார் கோவில்
Thiru Murikandy Pillayar Temple
Uploaded Date: 18/01/2014
முறிகண்டிப் பிள்ளையார் கோவில்

முறிகண்டிப் பிள்ளையார் கோவில் இலங்கையின் வட பகுதியின் முல்லைதீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச சபையில், யாழ் தீபகற்பத்துக்கான பிரதான நெடும்பாதையான, A9 நெடும்பாதையின் மேற்குப் பக்கமாக கிளிநொச்சியின் எல்லையில் முறிகண்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. யாழ்பாணத்துக்குச் செல்பவர்கள் முறிகண்டிப் பிள்ளையார் கோவிலில் கால் தடம் பதிக்கத் தவறுவது அரிதிலும் அரிது. இதனால் தான் இப்பெயர் வர ஒரு காரணம் என நம்பப்படுகின்றது. (முறி-நிறுத்து, கண்டி-கண்டி வீதி, பிள்ளையார்-இந்துக் கடவுள்).

தற்பொழுது முறிகண்டியை 2009 ற்கு முன் 2009 ற்கு பின் என வேறுபாடுகளுடன் காணமுடிகின்றது.

Thiru Murikandy Pillayar Temple

Murikandy Pillayar Temple is located in A9 Jaffna – Vavuniya highway of Oddisuddan Pirathesa Sapa of Mullaitivu district of Northern Srilanka. However it is closer to Kilinochchi town than Mullaitivu town. Murikandy Pillayar Temple is a prominent stop for most of all the travellers who visit to Jaffna Peninsula from south or Vice versa. That is why it is being called as Murikandy (Muri – stop, Kandy – Kandy road).


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2025>>>
SunMonTueWedThuFriSat
   12
3
4
5
6789
10
11
12
13
14
1516
17
18
19
20
2122232425
26
27
28
29
3031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai