Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழாவான இன்று, இரவு திருவிழாவின் முன்னர் சுமார் 6:30 மணியளவில் செல்வன் விஸ்வலிங்கம் சுமதீஸ்வரனின் பிரசங்கம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்ட 54 பேர் இன்று காலை 5.00 மணியளவில் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் மேலதிக
வல்வை விளையாட்டுக் கழகத்தின் அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக இன்றைய போட்டியில் .....
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 3 ஆம் நாள் திருவிழா இன்று காலை சுமார் 11 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து பிற்பகல் சுமார் 1 மணியளவில் நிறைவெய்தியது. இன்றைய திருவிழாவில் அம்பாள் கப்பல் வாகனத்தில் வீதி உலா வந்திருந்தார்.
லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 2 ஆம் நாள் நேற்று இடம்பெற்றது. மகோற்சவப் பூஜைகள் வாகீசக் குருக்கள் மற்றும் ரூபென் குருக்களால நடாத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய உற்சவத்தில் அம்பாள் ஆட்டுக் கடா வாகனத்தில் உலா வந்திருந்தார்.
வல்வை விளையாட்டுக் கழகத்தின் அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று ஆரம்பமானது.
முதாலவது போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்....
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா இன்று இரவு சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியது. இன்றைய திருவிழாவில் அம்மனுக்கும் நடைபாவாடை விரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 06.04.14 அன்று சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவரின் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைத் தொடர்புகள் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சென்னை மத்திய புகையிரத நிலையத்தில் பெங்களூருவில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலையில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதில் ஒருவர் பலியானதுடன் 10 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன் என தமிழக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2 ஆம் நாள் திருவிழா பகல் 1100 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து பூஜைகளைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலாவுடன் சுமார் 1230 மணியளவில் நிறைவெய்தியது.
லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் வருடாந்த மகோற்சவம் நேற்று ஆரம்பமாகியுள்ளது. வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ காலங்களையொட்டி லண்டன் டூட்டிங் நகர் ஆலயத்திலும் வருடாந்த மகோற்சவம்.........
அமரர் பரஞ்சோதியப்பா மற்றும் அமரர் சந்திரமோகன் ஆகியோரின் ஞாபகார்த்த 9 நபர் கொண்ட லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வல்வை விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படவுள்ளது.
குறித்த போட்டியின் நேர அட்டவணையும், விதிமுறைகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் முதலாம் நாள் திருவிழா நிறைவு இன்று இரவு சுமார் 10 மணியளவில் நிறைவெய்தியுள்ளது. மாலை 7 மணியளவில் வசந்த மண்டப பூஜை ஆரம்பித்து, சுமார் 9 மணியளவில் அம்பாள் வீதி உலா வந்திருந்தார்.
வல்வெட்டித்துறை வேம்படிப் பகுதியில் இளைஞர்களிடயே சற்று நேரத்திற்கு முன்னர், இரவு சுமார் 10 மணியளவில், மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கைகலப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு ரோந்துப் பணியில் வந்த வல்வை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரினால்
இந்த விபத்து குருநாகலின் பொத்துஹெர (Pothuhera) புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை சுமார் 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் (Rajina), கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பளை நோக்கி பயணித்த கடுகதி சொகுசு
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியது. 1100 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியேற்றம் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா இடம்பெற்று பகல் திருவிழா....
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர்.....
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை 30 ஏப்ரல் 2014 அன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் மகோற்சவத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கீழே படங்களில் வருடாந்த மகோற்சவத்தையொட்டி அமைக்கப்பெற்றுள்ள ஈசானப் பந்தலையும் ஆலய
இலங்கையின் தலைநகர் கொழும்பில் தற்பொழுது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. தற்போது நிகழும் இந்த காலநிலை நாளை காலை வரை நீடிக்கலாம் என இலங்கை வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் லண்டன் டூட்டிங் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களில் நாளை கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகின்றது. இரண்டு ஆலயங்களிலும் உள்ளூர் நேரப்படி நாளை காலை 11 மணிக்கு காலை பூஜைகளுடன் ஆரம்பமாகும் நிகழ்வுகள் எதிர்வரும் 14 ஆம் ......
வல்வெட்டிதுறையில் பல கோவில்கள் மிக நெருக்கமாக இருந்தாலும், மிக அதிகளவு உள்ளூர் வாசிகளாலும், புலம்பெயர் வல்வையர்களாலும் தரிசிக்கப்படும் கோயில் காணொளியில் காணப்படும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மன் கோவில் ஆகும். இது யாழ் தீபகற்பத்தின் வட கோடியில்....
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட"வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக்கழக அறிவகம்" நேற்று மாலை 28 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த அறிவகம் (மறைந்த) திருமதி செந்திவடிவேல் சிவரூபராணி அவர்களின் ஞாபகார்த்தமாக........
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள "தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக அறிவகத்தில் இன்று காலை இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது. இதில் இதில் வல்வைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 25 பேர் இரத்தம் நன்கொடை செய்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட 35 வது அணியினர் தமது ஆய்வு நோக்கிற்காக யாழ் மாவட்ட வடமராச்சி கல்வி வலயத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மட்டம் தொடர்பான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர். வடமராச்சி கல்வி வலயத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளில்
வல்வை சைனிங்க்ஸ் ஊக்குவிப்புக் குழுவினால் இதுவரை நடாத்தப்பட்டு வந்த 7 நபர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்டத்தின் இறுதிப் போட்டி இன்று ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் வல்வை நேதாஜி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர்
லண்டன் டூட்டிங் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 7 வது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. லண்டன் டூட்டிங் நகரில் (1st Floor, 190-194, Mitcham Road, Tooting) அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 7 வது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 2014 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்த இல்ல தடகள விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.