Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
எதிர்வரும்14 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள உலக குருதி நன்கொடையாளர் தினத்தையொட்டி இன்று யாழ்ப்பாணத்தில் வாகனப்பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது. வாகனப் பேரணி இன்று காலை 0730 மணிக்கு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்து, நண்பகல் அளவில் வல்வெட்டித்துறை சந்தியை ...
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை யாழ்பாணத்தில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலையத்தின் சுற்று சூழலுக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி ரொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளர்....
யாழ்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி மாபெரும் பட்டங்கள் ஏற்றும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. யாழ் நகரின் துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் 100 ற்கு மேற்பட்ட வண்ணப் படங்கள் பறக்க விடப்படும் என .....
எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள உலக குருதி நன்கொடையாளர்கள் தினத்தையொட்டி, யாழ்பாணத்தில் குருதி நன்கொடையாளர்களை கெளரவித்து, குருதி நன்கொடையை மேலும் ஊக்குவிக்குமுகமாகவும் நாளை வாகனப்பேரணி இடம்பெறவுள்ளது. குறித்த இந்த வாகனப் பேரணி நாளை காலை 0730 .........
நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் வீசிய கடுங்காற்று மற்றும் அடை மழை காரணமாக 48 மணித்தியாலங்களில் 15 பேர் உயிரிழந்ததுடன் 7500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் கடுங்காற்றுடன் பெய்த அடைமழையின் காரணமாக களுத்துறை மாவட்டத்திலுள்ள .......
வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகின்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா 12 ஆம் திகதியும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதியும் மற்றும் பூங்காவனத் ...
உதைபந்தாட்டத்தில் பல திறமையான வீரர்களையும்,சாதனைகளையும் கொண்டு இன்று வரை முன்னிலையில் இருக்கும் மிக முக்கியமான நாடு பிரேசில் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அப்படிப்பட்ட இந்த பிரேசில் நாட்டில் இம்முறை உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் ...
இலங்கை அரச கப்பல் கூட்டுத் தாபனம் (Ceylon Shipping Corporation Limited – CSCL 2 கப்பல்களை (Bulk Carrier) சீனாவிடம் இருந்து வாங்கவுள்ளது. தலா 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கொள்வனவு செய்யப்படவுள்ள இந்தக் கப்பல்கள் சீனாவின் ‘AVIC International Beijing Company’ யினால் கட்டப்படவுள்ளன....
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் அதிபர் திரு.சிவநாதன் அவர்கள், அவரது சேவையைப் பாராட்டி இன்று கெளரவிக்கப்பட்டுள்ளார். பிற்பகல் சுமார் 2 மணியளவில் பாண்ட் வாத்தியம் சகிதம் பாடசாலை வீதியிலிருந்து அழைத்து வரப்பாட்டு மங்கள விளக்கு ஏற்றலுடன் நிகழ்வு....
வருடந்தோறும் நிகழும் தென்மேற்குப் பருவப்பெயர்சிக் காலநிலை தற்பொழுது ஆரம்பித்துள்ளது. இதனால் நாட்டின் தலைநகர் கொழும்பில் இடியுடன் கூடிய மழை தற்பொழுது பெய்துவருகின்றது. தென்மேற்குப் பருவப்பெயர்சிக் காலநிலையானது மே மாதத்தின் இறுதிப் பகுதியிலிருந்து செப்டெம்பர்....
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பிற்பகல் 02.30 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் (தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் ..
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் அதிபர் திரு.சிவநாதன் அவர்களுக்கு மதிப்பளித்தல் விழா நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 0200 மணிக்கு தையல்பாகர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. சிவகுரு வித்தியாசாலை அதிபர் திரு.சு.ஜெயானந்தகுமார் அவர்கள் தலைமையில் ....
கெருடாவில் வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 1000 மணியளவில் ஆரம்பமான பூஜைகளைத் தொடர்ந்து கொடியற்றம் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா ........
ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை 0500 மணியளவில் றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இளங்கதிர் A ...
என்னடா வருகிறது புதிய நைட் ரைடர் என்று தலையங்கத்தை பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். வேறொன்றுமில்லை நீங்கள் உங்கள் சிறு வயதுகளில் தொலைக்காட்சியில் தொடராக பார்த்த நைட்ரைடர் கார் போன்ற நிஜமாகவே தானாகவே இயங்கக்கூடிய காரை இணையவுலகின் மன்னன் கூகிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அமரர் பாலன் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவாலயத் திறப்பு விழாவும், மலர் வெளியீடும் நாளை சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது.
தலைவர் திரு. வே.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு பிரதம விருந்தினராக.....
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயது பிரிவு பெண்களுக்கான கரபந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகியுள்ள அரச பதவிகளுக்கான வெற்றிடங்களின் வேலைகளிற்கான தொகுப்பை வெளியிட்டுள்ளனர். விபரங்களில் சம்பந்தப்பட்ட பதவி (வேலை வாய்ப்பு), தேவையான குறைந்தளவு தகமை, சம்பளம், முடிவுத் திகதி .....
தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையால் ஞானச்சுடர் சஞ்சிகையின் வைகாசி மாத வெளியீட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆச்சிரம மண்டபத்தில்....
ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை 0430 மணிகயளவில் றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இளங்கதிர் A ..............
நடைபெற்று வரும் ‘தேசிய பாவனைக்கு உதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களின் முகாமைத்துவ வாரத்தினையொட்டி" வல்வெட்டித்துறை நகரசபை பாவனைக்கு உதவாத இலத்திரனியல் உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு இன்று ஒலிபெருக்கி ......
நாளை 30.05.14 கெருடாவிலில் அமைந்துள்ள வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகின்றது. பதினைந்து தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா 12 ஆம் திகதியும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதியும் .....
வல்வெட்டித்துறை நவீனசந்தை கடைத் தொகுதி ‘B’ இனை வாடகைக்கு வழங்குவதற்கான கேள்வி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி யாழ் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. வல்வை நகரசபைத் தலைவர் சார்பில் வெளியிடப்பட்டிருந்த இந்த அறிவித்தலில் கீழ்வரும் 2 விடயங்கள் ..........
பிரபாகரன் பிறந்த ஊரில் இன்னொமொரு ‘ஹீரோ’ என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான ‘The Hindu’ ஒருமுறை எழுதிய ஆழிக்குமரன் ஆனந்தன் என பொதுவாக அழைக்கப்படும் திரு வி.எஸ் குமார் ஆனந்தனின் 71 ஆவது பிறந்ததினம் கடந்த 25 ஆம் திகதி ஆகும். ஆனாலும் வல்வெட்டிதுறையில் பிறந்த இவர் பல கின்னஸ் ....
ESOFT Computer Studies, ITN தொலைக்காட்சி என்பவற்றுடன் இணைந்து Computer Society of SriLanka (CCSL) வருடாந்தம் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தும் IT MasterMind Quiz க்கு, பிரதேச மட்டப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லுாரியில் க.பொ.த. உயர்தரத்தில் கல்விகற்கும் வல்வெட்டித்துறை சேர்ந்த மனோகரன் சௌந்தர்யா.........
வல்வெட்டித்துறை புதுவளவைப் பிறப்பிடமாகவும் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ஐயாமுத்து விசாகரெத்தினம் (முன்னாள் நீர்ப்பாசனத் திணைக்கள வரைபடவியலாளர்) 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28.05.2014 (புதன்கிழமை) மாலை 0300 மணி...
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 31.05.2014 சனிக்கிழமை அன்று பி. ப 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் ( தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் .......
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் மைதானத்தின் நிலமட்டம் தற்பொழுது உயர்த்தப்பட்டுவருகின்றது. இதற்குரிய மண் மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள குளத்தில் இருந்து அகழப்பட்டுவருகின்றது. கடந்த சில வாரங்களாக மைதானத்தின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.