Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
வல்வெட்டித்துறை நேதாஜி விளையாட்டுக்கழகத்தின் 49 ஆம் ஆண்டு நிறைவுவிழா மற்றும் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிகள் இன்று நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 02:30 மணியளவில் காட்டுவளவு நேதாஜி விளையாட்டுக்கழக உல்லாசக் கடற்கரை மைதானத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமான வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (VEDA) நேற்று, கடந்த க.பொ.த (உ/த) பரீட்ச்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகளான ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. நேற்று (25-08-13) பிற்பகல் 03:30 மணியளவில்
வல்வெட்டித்துறைச் சேர்ந்த திரு.சீவரத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்டு கடந்த 18 ஆம் திகதி வல்வைச் சந்தியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் வெளியிடப்பட்ட 'ஆழ்கடல்கள் வென்றவர்கள்' எனும் நூலின் பிரதிகளை வல்வெட்டித்துறைச் சந்தியின் நவீன கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கலைச் சோலை புத்தக சாலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு
சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) இன் சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி பரிசளிப்பு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. இது சம்பந்தமாக சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) வெளியிடுள்ள அறிக்கை பின்வருமாறு..
வல்வையின் முதுபெரும் விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான, வல்வை நேதாஜி விளையாட்டு கழகத்தின் 49 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அக்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போட்டிகளின் வரிசையில், வல்வை விளையாட்டு கழகங்களுக்குபட்ட அணிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் இன்று மாலை நேதாஜி கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
ஆலய கோபுரம், குளம் மற்றும் ஆலய சுற்று வளாகம் அனைத்தும் பல்வேறுவகையான மின் சோடனைகளால் கண்களைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை சுமார் 05:00 மணியளவில் வசந்த மண்டபப் பூஜையுடன் ஆரம்பித்த பூங்காவனத் திருவிழா, பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய கலை நிகழ்வுகள்....
யாழ்பாணம் தொண்டைமானாற்றில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நன்னீர் கிணறு மற்றும் வாசிகசாலை என்பன இனந்தெரியாதோரால் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சேதமாக்கபடுள்ளது. வாசிகசாலையில் இருந்த பொருட்கள் மற்றும் ஒரு பெரிய பதாகை என்பன நன்னீர் கிணற்றுக்குள் வீசப்பட்டுள்ளன.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் நடந்து முடிந்த வருடாந்த மகோற்சவத்தைத் தொடர்ந்து நேற்று இரவு பூக்காரர் திருவிழா நடைபெற்றது. நேற்று இரவு சுமார் 10:00 மணியளவில் சிறப்புப் பூஜைகளுடன் ஆரம்பித்த சமய நிகழ்வு இரவு 12:00 மணியளவில் நிறைவெய்தியது. இத்திருவிழாவில் கடந்த ....
நடந்து முடிந்த வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் பூங்காவனத் திருவிழா நடைபெறவுள்ளது. பூங்காவனத் திருவிழாவையொட்டி இன்று சில சமய கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் நடந்து முடிந்த வருடாந்த மகோற்சவத்தைத் தொடர்ந்து இன்று இரவு பூக்காரர் திருவிழா நடைபெறவுள்ளது. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் மட்டும் நிகழும் இத்திருவிழா மகோற்சவகாலங்களில் ஆலயத்தில் பணிவிடை செய்திருந்த தொண்டர்களுக்காகவும், விளக்கு எடுத்தல் ........
இதன் ஒரு நிகழ்வாக வல்வெட்டித்துறைச் சேர்ந்த திரு.சீவரத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்டு கடந்த 18 ஆம் திகதி வல்வைச் சந்தியில் அமைந்துள்ள நகரசபை மண்டபத்தில் வெளியிடப்பட்ட ஆழ்கடல்கள் வென்றவர்கள் எனும் முழு நூலும் விரைவில் எமது இணையதளத்தில் வெளியாகும்.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பலரும் சென்றுள்ள போதும், அதுவும் தீர்த்தத் திருவிழாவிற்குக் சென்றிருந்தாலும், மிகச் சிலரே தீர்த்தத் திருவிழா நிகழ்வைக் கண்டு களித்துள்ளார்கள் என்பது உண்மை. தீர்த்த உற்சவம் நடைபெறும் நேரம், வழக்கத்துக்கு மாறாக நிகழ்வு நடைபெறும் இடம் மற்றும் முறைகள், குறிப்பிட்ட எண்ணிக்கையானோரே நிகழ்வைப் பார்க்கக் கூடிய வசதி போன்றவையே இதற்க்குக் காரணங்களாகும்.
லண்டனைத் தளமாகக் கொண்டு செயற்படும் CWN (Children well wishers network) ஐச் சேர்ந்த திரு.ராஜேந்திரா (மாஸ்டர்) அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கபட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து திரு.ராஜேந்திரா அவர்கள், இது தொடர்பாக லண்டன் போலீசில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளதாகவும் திரு.ராஜேந்திரா தெரிவித்துள்ளார்.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று காலை சுமார் 06:00 மணியளவில் பூஜைகளுடன் ஆரம்பித்ததைத் தொடர்ந்து சுமார் 09:00 மணியளவில் நிறைவுற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை மௌனத்திருவிழா நடைபெற்றிருந்தது.
வல்வெட்டித்துறை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நண்பகல் அளவில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
தீர்த்த மகோற்சவம் வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் நடைபெற் பின், சுவாமி தற்பொழுது வல்வை வைத்தீஸ்வரர் ஆலயத்தைச் சென்றடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்று நண்பகல் நடைபெற்றது. பத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகிருந்தது. தீர்த்தத்திருவிழா நாளை நடைபெறவுள்ளது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழாவில் இன்று பக்தர்கள் அலையென திரண்டிருந்தனர். இன்று முற்பகல் சுமார் 07:00 மணியளவில் பூஜைகளுடன் ஆரம்பித்திருந்த தேர் திருவிழா மதியம் வரை நீடித்திருந்தது. ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போலவே தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு...
நேற்று தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்றிருந்த இந்த சப்பற உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அமரர் வே .சோதிநாராயானசாமி (பரஞ்சோதியப்பா) மற்றும் சோ.சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று மாலை வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 14 ஆம் திருவிழாஇன்று காலை 09:30 மணியளவில் நிறைவுபெற்றது. இன்று காலை முற்று முழுதாக மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நாகபாம்பு வாகனத்தில் சுவாமி உலா வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று மாலை 09:00 மணியளவில் நிறைவுபெற்றது. நேற்றைய இரவுத் திருவிழாவின் போது பெண் கலைஞர்களின் (ஆண் கலைஞர்கள் உட்பட்ட) தவில் மற்றும் நாதஸ்வரம் கச்சேரிகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
வல்வெட்டித்துறைச் சேர்ந்த திரு.சீவரத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'ஆழ்கடல்கள் சென்றவர்கள்' எனும் நூல் வெளியீடு நேற்று வல்வை நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 04:00 மணியளவில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர்கள், ஆலயக் குருக்கள், அரச அதிகாரிகள் அதிபர்கள், கடலோடிகள், எழுதாளர்கள், சமூக ஆர்வலர்கள்..
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள் பகல் திருவிழா இன்று காலை 09:30 மணியளவில் நிறைவுபெற்றன. நாளை சப்பறத் திருவிழா நடைபெறவுள்ளது. சப்பறத் திருவிழாவையொட்டி சப்பறப்பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நடந்து முடிந்த கணிதப்போட்டி (Mathematics Challenge 2013) மற்றும் நடைபெறவுள்ள கணிதப்போட்டி சம்பந்தமாக Children's Well-wishers Network (CWN) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், அதன் விபரம் பின்வருமாறு.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று நிறைவெய்தியது. நாளை சப்பறத் திருவிழா நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து நாளை மறுதினம் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.
அமரர் வே .சோதிநாராயானசாமி (பரஞ்சோதியப்பா) மற்றும் சோ.சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப போட்டிகள் இன்று காலை வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறைச் சேர்ந்த ஆறுமுகம் மதியழகன் என்னும் இளைஞர், மணற்காட்லிருந்து உந்துருளியில், வல்வெட்டித்துறை நோக்கி வருகையில் நேற்று முன்தினம், 15-08-13 அன்று மரணமடைந்துள்ளார். பிரேதபரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணைகளின் பிரகாரம் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தொண்டைமானாறு விநாயகர் மின் அமைப்பினரால் முருகப்பெருமானின் மின் உருவம் ஒன்று உருவாக்கட்டுள்ளது. சுமார் 40 அடி உயரமான இவ் உருவம் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் நிறுவப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு வாயில் மற்றும் தங்க நீர்த்துறை ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. அண்மையில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த புதிய துறைமுகத்துக்கு (பகுதி), தற்பொழுது உலகத்தில் வாணிபத்தில் உள்ள பாரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான (CMA-CGM PEGASUS) வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் திருவிழா நேற்று நிறைவெய்தியது. வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.