Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம் (31) – வல்வையில் துறைமுகத்துக்கான சாத்தியங்கள்

பிரசுரிக்கபட்ட திகதி: 11/08/2018 (சனிக்கிழமை)
50 வருடங்கள் பூர்த்தி செய்துள்ள சில கப்பல் நிறுவனங்கள் இன்று மிகப்பெரிய கப்பல் நிறுவனங்கள் ஆக விளங்கிவருகின்றன.. 
 
இன்றிலிருந்து 50 வருடத்திலிருந்து 80 வருடங்களை எடுத்துக்கொண்டால், வல்வையில் அல்லது வல்வை வாசிகளிடம் இருந்த கப்பல்களின் எண்ணிக்கை - நான் மேலே குறிப்பிட்டுள்ள கப்பல் நிறுவனங்களிடம் இருந்ததை விடவும் அதிகமானவை. அவை வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்ட விகிதமும் அதிகம்.
 
பல கப்பல்களை வைத்திருந்த ‘கப்பல் பெண் அதிபர் சின்னத்தங்கம்’ என்று கூறுமளவுக்கு கப்பல் யாவாரம் இங்கு ஓகோ என்றிருந்துள்ளது. 
 
எமது கப்பல் வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து, அதன் வளர்ச்சியின் உச்சிக்காலத்துக்கு ஒரு கணித வரைபை வரைந்து, அதற்குப் பின்னால், முன்னர் இருந்த கப்பல்களின் வளர்ச்சித் தரவுகளைக் கொண்டு, கோட்டை மேலும் நீட்டிவரைந்தால் (Extrapolation) - இன்று எங்களிடம் இருக்க வேண்டிய கப்பல்களின் எண்ணிக்கை – இன்று பெரிய கப்பல் நிறுவனங்களாக விளங்கும் சில கப்பல் நிறுவனங்களிடம் உள்ளதை விட அதிகமாக இருந்திருக்க வேண்டும், அதுவும் பாரிய கப்பல்களாக. 
 
கடல் வாணிபத்தில் கொடிகட்டிப் பறந்த பெண்மணியான சின்னத்தங்கம் அவர்களின் சமாதி
 
 ஆனாலும் கப்பற்துறையின் வளர்ச்சி இங்கு அவ்வாறு இடம்பெறாமல் ஒரு கட்டத்தின் பின்னர் தளர்வடைந்து இறுதியில் முற்றாக மறைந்து விட்டது. பல காரணங்கள் உண்டு. இவை பற்றி பின்னர் இன்னொரு பக்கத்தில் எழுதுகின்றேன். 
 
பருத்தித்துறையில் துறைமுகம், மயிலிட்டியில் துறைமுகம் (பாரிய மீன்பிடித் துறை முகங்கள்) என்று பல செய்திகள் இப்பொழுது அடிபட்டு, மிகக் குறுகிய காலத்தில் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி ஆரம்பித்தும் விட்டது. பருத்தித்துறையிலும் சனங்கள் குழப்பாமல் இருந்தால் அமைவது முற்றிலும் சாத்தியம் .
 
அப்படி என்றால் வல்வெட்டித்துறையிலும் ஏன் துறைமுகம் அமைக்கப்படக்கூடாது என்ற கேள்வி எழலாம். அதிகம் ஊர்ப்பற்றுக் கொண்ட சிலர் ‘வல்வெட்டித்துறை ஹார்பர்’ வரைபடம் கூட வரைந்து பதிவேற்றியும் உள்ளதுடன், ஓரிருவர் முன்னர்போல் இங்கும் துறைமுகம் அமையும் என்று தமது சொந்தக் கருத்துக்களையும் தெரிவித்தும் வருகின்றனர். 
 
ஆனால் வல்வெட்டித்துறையில் ஒரு துறைமுகம் என்பது சாத்தியமா? என்றால் விடை நிச்சமாக ‘இல்லை’ என்பதே உண்மை. 
 
காரணங்கள் சில 
 
கடலின் ஆழம். வல்வையை ஒட்டி அமைந்துள்ள கடலின் ஆழம் பல இடங்களில் மிகவும் குறைவானது (Shallow waters). இவற்றை ஆழப்படுத்த பெரியளவில் நிதி வேண்டும்.
 
தற்காலங்களில் அமைக்கப்படும் சிறிய துறைமுகங்கள் கூட குறைந்தது 5, 6 சதுர கிலோமீட்டர்கள் பரப்பைக் கொண்டமைகின்றன. இது வல்வையின் மொத்தப் பரப்பளவை விட அதிகம்.  
 
சரி துறைமுகத்தை கட்டிவிட்டோம். எந்தப் பொருட்களை இங்கிருந்து ஏற்றப்போகின்றோம். காய்கறிகள், பழங்கள் விளையவல்ல யாழ் மண்ணிலிருந்து  இங்கு தேவையானவற்றை கூட விளைக்கமுடியாமல் தம்புள்ளையில் இருந்து இறக்குவிக்கிறோம்.
 
அல்லது பெரியளவில் பொருட்களை இறக்குவதை எடுத்துக்கொண்டால் பெரிய அளவில் பொருட்களை இறக்க யாரிடம் அவ்வளவு பணம் உண்டு.
 
வல்வைக்கு மேற்காகும் கிழக்காகவும் ஏற்கனவே பருத்தித்துறை, மயிலிட்டி மற்றும் கான்கேசன்துறை துறைமுகங்களின் இருப்பு. தற்பொழுது இவை புணரமைக்கப்படாமால் செயலற்று இருந்தாலும் இவற்றை விரைவில் இயக்கவைக்கக் கூடிய சாதகநிலைகள் உண்டு.
 
வல்வையில் துறைமுகம் அமைய அரசியல் பின்னணிகள் இடம்கொடுக்காது.
 
மேற்குறித்தவற்றை விட இதர பல விடயங்களும் உண்டு.
 
சாத்தியமானவை 
 
வல்வையில் இரண்டு மீன்பிடி நங்கூரத்தளங்கள் (Fishing anchorages)  அமைக்கப்படுவதற்கு முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஒன்று ஆதிகோவில் பகுதியில், இன்னொன்று கொத்தியால் பகுதியில். ஆய்வுகளின் அடிப்படியில் இடம்பெற்ற இந்தத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி அளிக்கவுள்ளது. இவற்றில் ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவ்வாறு அமையாமல், ஒன்று தற்பொழுது பொலிகண்டியில் அமைத்து முடிக்கப்பட்டுவரும் தருவாயில் உள்ளது.  
 
அவ்வாறு திட்டமிட்டபடி இங்கு மீன்பிடி நங்கூரத்தளங்கள் அமையப் பெறாது போனதற்கு - புதிதான ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியாத மனோபாவம், தேவையற்ற சிங்களக் குழப்பங்கள், ஆர்வமின்மை போன்ற பல காரணங்கள் உண்டு.
 
பொலிகண்டியில் மீன்பிடி நங்கூரத்தளம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 வீதமான வேலைகள் முடிந்த போது, இங்கு ஊரில் சிலரிடம் இதுபற்றி கேட்ட பொழுது, ஒருவருக்கும் இப்படி ஒரு வேலைத் திட்டம் இடம்பெறுவது தெரிந்திருக்கவில்லை. 
 
என்னைப் பொறுத்தவரை கடலியலில் மிகவும் நலிந்துள்ள யாழின் கரையோரத்தில் எங்கு இவ்வாறன வேலைத் திட்டங்கள் இடம்பெற்றாலும் சந்தோசமே. ஆனாலும் ஊரவர்கள் இழந்து விட்டார்கள் அல்லது தொடர்ந்து இழக்கப்போகின்றார்கள் என்பதுதான் வருத்தம். 
 
ஏனெனில் பொலிகண்டியில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடி நங்கூரத்தளம் பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுவரும் ஒரு வேலைத்திட்டம். 
 
மீன்பிடி நங்கூர தளங்களில் (Fishing anchorages) மீன்பிடி படகுகளையும் வள்ளங்களையும் பாதுகாப்பாக நிறுத்திவைக்க முடியும். ஆனாலும் பருத்தித்துறை அல்லது மயிலிட்டி போன்ற இடங்களில் உள்ளதைப்போல் வள்ளங்களை கொண்டுவந்து பொருட்களை கரைக்கு இலகுவாக ஏற்றிஇறக்க வசதி இருக்காது. 
 
பொலிகண்டியில் அமைக்கப்பட்டுவரும் மீன்பிடி நங்கூர தளம்
 
 
ஆகவே இங்கு துறைமுகம் என்ற பதத்தில் அமைக்கப்டக்கூடிய விடயம் என்றால் வள்ளங்கள் வந்து ஒட்டி தரித்து நிற்கக்கூடிய சுமார் 50 அடி நீளம் கொண்ட மிகவும் சிறிய இறங்குதுறை (ஜெற்றி) ஒன்றுதான்.
 
ஆதிகோவில், ரேவடி மற்றும் கொத்தியால் பகுதிகளில் – இவற்றுள் ஓரிடத்தில் தான் இறங்குதுறை அமைவது சாத்தியம். நாங்கள் குறித்த இந்தப் பகுதிகளில் நான்கு கிளப்புக்கள் வைத்திருக்கின்றோம் என்பதற்காக நான்கு ஜெற்றிகளைக் கட்டமுடியாது? 
 
ஒருவேளை ஜெற்றி அமைவதற்கான சாத்தியங்கள் வந்தால் இதை எதிர்க்கவும் சிலர் கிளம்புவார்கள். எதிர்ப்பதற்கு சரியான காரணங்களைக் கூட அவர்கள் முன் வைக்கக்கூடும். பருத்தித்துறையில் இடம்பெறுவது இதற்கு சிறந்த ஒரு உதாரணம். நான் சிலரிடம் இதுபற்றி பேசியபோது பலர் வந்தால் நல்லது என்றார்கள் சிலர் கூடாது என்கின்றார்கள்.
 
சில வருடங்கள் முன்பு நாடளாவிய ரீதியில் இவ்வாறு மீன்பிடிப் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டு இது போன்ற சில இறங்குதுறைகள் ஆராயப்பட்டு அமைக்கப்பட்டன.
 
இந்தத் திட்டத்துக்குள் கையைவிட்டு, இவற்றுள் ஒன்றை எங்களுக்கு பெறக்கூடிய எதுவும் எங்களிடம் இருந்திருக்கவில்லை. இப்பொழுது தானாக வந்த திட்டங்களையும் தக்கவைத்துக் கொள்ளக் கூடிய எதுவும் எம்மிடம் இருக்கவில்லை.   
 
அதிகம் எம்மிடம் இருப்பவை அறியாமை, பழமை மட்டும் பேசுவது, முக்கியமாக தேவையற்ற இடங்களில் தமிழ்த் தேசியத்தை திணிப்பது போன்றவை மட்டும் தான்.
 
கப்டன் அதிரூபசிங்கம் ஆதவன் 
TP – 00 94 777 64 99 55 (Viber, Whats up)
Face book – athiroobasingam.athavan   

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
S.Ahilan (Sri Lanka) Posted Date: August 11, 2018 at 10:39 
Meaning full comments Athavan anna.


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


 இந்த செய்தி தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்:
ஆதவன் பக்கம் (22 ) – 'பழனியப்பா' எனும் மகத்தான மனிதர்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/08/2020 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (30) – யாழிலும் யூனிவேர்சல் பழங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/08/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (29) – ஊரில் பணப்புழக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (28) - அக்கௌன்டன்ட் குமாராசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 21/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (27) – உண்மைச் சம்பவம் - ஐயாவும், ஆஞ்சநேயர் சாமியாரும்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (26) – கண்டன் ஆச்சி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/07/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (25) – யாழ்ப்பாணத்தாரின் ஒழுங்கைகளும் சுவர்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (24) – கப்பல் வாங்கிய நம்மவர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (23 ) – யாழ்ப்பாணக் குப்பைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (21) – சுமந்திரனுக்கு வல்வையில் மாலை, 'Shame' மா?
பிரசுரிக்கபட்ட திகதி: 02/06/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (20) – கஸ்புஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (19) – மதுராவும் வல்வையும்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (18) – இந்திரவிழாவில் நான் கண்ட 17 குறைபாடுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (17) – பாணாக்கம், மோர், தயிர்ச்சோறு, சர்பத்..........
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (16) – ஒரு முதுசத்தின் மறைவு (காணொளி இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 21/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (15) – கப்பல் மாப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 14/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (14 ) – வல்வை வரைபடத்தில் முதலாவதாக ரேவடிப் பூங்கா
பிரசுரிக்கபட்ட திகதி: 07/04/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (13) – நான் ஒரு மரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 31/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (12 ) – இங்கு ஆங்கிலம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (11) – கொட்டப்பட்ட இ வேஸ்ற்றுக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (10) – இசை நிகழ்ச்சியால் வல்வையில் மழுங்கடிக்கப்படும் பாரம்பரியங்களில் ஒன்று
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2018 (வெள்ளிக்கிழமை)
ஆதவன் பக்கம் (9 ) – பழைய இரும்பு பித்தளைக்கு பேரீச்சம்பழம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/03/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (8) – தடுமாறும் தமிழர் தமிழ் பெயர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (7) – வேதா ரீச்சரும் மதுரா அக்காவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (6) உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள், 3 வருடங்கள் முன்பு நான் விரும்பியது
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2018 (திங்கட்கிழமை)
ஆதவன் பக்கம் (5 ) – மயிலிட்டி என்னும் சோகம், நேரடிப்பாதை வல்வைக்கு வளம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (4 ) – நகரபிதாவிற்கு………………….பொது மக்கள் சார்பில் 101 கோரிக்கைகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/02/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (3) - M.K.சிவாஜிலிங்கம் - நான் அறிந்த ஊரின் சேவகன் -
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (2) – அரிப்பும், அழிப்பும்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம் (1) – ஐயா
பிரசுரிக்கபட்ட திகதி: 13/01/2018 (சனிக்கிழமை)
ஆதவன் பக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

பிந்திய 25 செய்திகள்:
சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2024 (வெள்ளிக்கிழமை)
தீருவில் பொது பூங்காவில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம், அதிக மழைக்கு வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2024 (புதன்கிழமை)
புதிய அமைச்சரவை அமைச்சர்களின் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2024 (திங்கட்கிழமை)
வியாபார கொமிஷனுக்கு பலத்த அடி!
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
நாகை - காங்கேசன்துறை சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இரத்து
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2024 (சனிக்கிழமை)
கடலியல் துறையில் டிப்ளமோ பட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
சங்கீதப் போட்டியில் சிவகுரு இரண்டாம் இடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2024 (வியாழக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி- கனகசுந்தரம் முருகமூர்த்தி, பவாணி முருகமூர்த்தி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
யாழ் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2024 (செவ்வாய்க்கிழமை)
தேசிய மட்ட தனி நடனப் போட்டியில் வட இந்து மாணவி முதலிடம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2024 (திங்கட்கிழமை)
ஹாட்லி கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவும் கல்லூரி நாளும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
ஈழத்து சௌந்தர்ராஜன் வியஜரட்ணம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
பழைய மாணவர் சங்கம் மீள் உருவாக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/11/2024 (சனிக்கிழமை)
செல்வச் சன்னிதியில் இடம்பெற்ற சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2024 (வெள்ளிக்கிழமை)
ஒன்லைன் கடவுச்சீட்டு Appointment புதிய முறை
பிரசுரிக்கபட்ட திகதி: 06/11/2024 (புதன்கிழமை)
77 ஆவது இரத்ததான முகாம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/11/2024 (செவ்வாய்க்கிழமை)
‘வடக்கு மாகாண நீர் வளங்களும் அவற்றின் பயன்பாட்டு உத்திகளும் பங்கீட்டுக்கொள்கையும்’  நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசஷ்ட்டி விரதம் அனுட்டிப்போருக்கு பழங்கள் அன்பளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 03/11/2024 (ஞாயிற்றுக்கிழமை)
பல வருடங்களின் பின் பலாலி - வாசவிளான் வீதி மக்கள் பாவனைக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை பட்டப் போட்டி திருவிழா 2025
பிரசுரிக்கபட்ட திகதி: 01/11/2024 (வெள்ளிக்கிழமை)
விளம்பரம் - காணி விற்பனைக்கு (ஊரிக்காடு)
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
கொழும்பு - காங்கேசன்துறை ரயில் சேவை 2 ஆக அதிகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 31/10/2024 (வியாழக்கிழமை)
மரண அறிவித்தல் - திருமதி நடனசிகாமணி மகாலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் செல்வி கஜிஷனா தர்ஷன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/10/2024 (புதன்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Aug - 2025>>>
SunMonTueWedThuFriSat
     12
34567
8
9
1011
12
13141516
17
18192021
22
23
242526
27
282930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai