வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்த சபையினரால், வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ''ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்'' ஆனது எதிர்வரும் ஆவணி மாதம் திறக்கப்படவுள்ளதாக நிர்வாகசபையினர் valvettithurai.org ற்குத் தெரிவித்துள்ளனர்.
வேலம்பிராய் கண்ணகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு பலதிருப்பணி வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இக் கோவிலானது கடந்த காலங்களில் முற்று முழுதாக அழிவடைந்திருந்தமை குறிபிடத்தக்கது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை 22.06.2013 அன்று பரிசளிப்பு விழா பிற்பகல் 02.00 மணியளவில் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன், பாடசாலை மண்டபத்தில், அதிபர் திரு. ஆ. சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறையில் பகுதியில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் பொதுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை முடிவெடுத்துள்ளதாக நகரசபை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு மற்றும் அதனை அண்டிய சுற்று வட்டாரக் கிராமங்களான கொம்மாந்தறை மற்றும் கெருடாவில் போன்ற பிரதேசங்களில் வெங்காயப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 x 1.5 x 3.5 என்ற அளவில் செய்யப்படவுள்ள இந்த மாதிரிக் கப்பல், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி கொள்கலன் கப்பலைப் போல் கண்ணாடியால் மூடப்படவுள்ள இக்கப்பலைச் செய்வதற்கு சுமார் 2 மாதங்கள் எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வடமராட்சியின் சகல பாடசாலைகளினதும் இத்தகைய தாய்க்கட்டடங்கள் கம்பீரமாக காட்சியளிக்கையில் எமது பாடசாலையின் இந்த தாய்க்கட்டடமானது ஆராதனை மண்டபத்தையும் வகுப்பறைகளையும் கொண்டு சிதைந்த நிலையில் காணப்படுகின்றது.
எனது முதலாவது கட்டுரையில் கடந்த எழுபத்து ஐந்து வருடகாலத்தல் கப்பல் கட்டுவதற்கு அதிமுக்கிய காரணங்களாகிய 'கப்பல் கட்டும் தேவை' மற்றும் 'அரசாங்க உதவி' என்பவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது பற்றியும் மற்றயை பல காரணங்களில் வல்வையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் பார்த்தோம்.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிகழ்வையொட்டி இன்று நடைபெற்ற வதிரி டைமண்ட் மற்றும் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டம், வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழக வீரர்கள் மீது நடுவர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடையில் நின்றது.
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் வல்வெட்டித்துறை சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைகளின் ஒரு பகுதி தற்பொழுது ஏற்கனவே PM foundation னுடைய முயற்சியால் பூர்த்தியாக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மீண்டும் அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படுள்ளன.
Central finance company (PLC) ஆனது வல்வெட்டித்துறை ஆதிகோவில் மீனவர்களுக்கு குறுகிய
கால அடிப்படையில் கடன் வழங்க முயற்சி எடுத்துள்ளது. இது சம்பந்தமாக Central finance company உத்தியோகத்தர்களால் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கான ஒரு விளக்கம் கடந்த 14 ஆம் திகதி ஆதிகோவில் பொது மண்டபத்தில் நடைபெற்றது.
தொண்டைமானாற்று புதிய பாலத்தின் இருபக்க வீதிகளும் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. இவ் வேலைகள் வரும் 20 ஆம் திகதி பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாற்று வலுவுடைய, வல்வை புளுஸ் விளையாட்டு கழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், செல்வன் பாலச்சந்திரன் ஜெகன் (வயது 26) 110 மீட்டர் தடைதாண்டல் போட்டியில் 25.54 செக்கனில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
சிதம்பரா கல்லூரி நலன்புரி வலையமைப்பினால் (CWN) நேற்று கணிதப்போட்டி (Mathematics Challenge) 2013 பிரித்தானியாவில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளதாக சிதம்பரா கல்லூரி நலன்புரி
வலையமைப்பு அறிவித்துள்ளது.
கனடாவிலுள்ள பிரம்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், வல்வெட்டித்துறை பூர்வீகமாகக் கொண்ட 40 வயதுடைய தங்கவேல் கோபிநாத் என்பவரும் அவரது 5 வயது மகளான ஆரணியும் சம்பவம் இடத்திலே பலியானார்கள். இவர்களோடு காரில் பயணித்து சம்பவத்தில் காயமடைந்துள்ள தாயும், இன்னுமொரு 3 வயதான மகளும் வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கத்தினால் இதுவரை நடாத்தப்பட்டு வந்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டங்களும் பரிசு வழங்கல்களும் நேற்று 15 ஆம் திகதி புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார். இவருக்கு வயது 59. தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த மணிவண்ணன் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Valvettithurai.org இனால், அ.சி.விஸ்ணுசுந்தரம் நினைவு மையத்தின் அனுசரணையுடன், வல்வெட்டித்துறை மேத்திரிகளால் உருவாக்கப்படவுள்ள அன்னபூரணி மாதிரிக் கப்பலை (Model ship) வடிவமைக்கும் ஆரம்ப நிகழ்வு இன்று வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.
வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்பட்டு வருகின்ற 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின், நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி யூத் விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகம் 5 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
வல்வையின் கல்வித் துறையிலும் நாடகத் துறையிலும் பெரும் பங்காற்றியிருந்த திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை அவர்கள் கடந்த 6 ஆம் திகதி கனடாவில் காலமானார்.
திரு.எஸ்.அந்தோனிப்பிள்ளை பற்றி, அன்னாரின் மறைவையொட்டி அவரின் உறவினர்களாலும், நண்பர்களாலும் வெளியிடப்பட்ட அன்னாரின் வாழ்க்கை வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்டுவரும் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டங்களும் பரிசு வழங்கல்களும் வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அன்னபூரணிக் கப்பலுடன் தொடர்புடைய அனைத்து விடையங்களையும் ஆவணப்படுத்தும் நோக்குடனும் எமது இணையதளமான valvettithurai.org, இதற்கென ஒரு புதிய பகுதி ஒன்று ஆரம்பிக்கபட்டுள்ளது. ''Florence C Robinson, அன்ன பூரணி 75 ஆவது நிறைவு''.
'உலக இரத்த நன்கொடையாளர் தினம்' எதிர்வரும் June 14 ஆம் திகதி, ஜனாதிபதி வாசஸ்தலத்தில் (Temples Trees) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு வல்வெட்டித்துறை பிரதேசத்தில் இதுவரை அதிகளவு தடவை இரத்ததானம் செய்துள்ள மற்றும் இளம் வயதில் இரத்ததானம் செய்துள்ளவர்களும் அழைக்கப்பட்டுள்ளார்கள்
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 60ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் முகமாக நேற்று இரவு மின்னொளியில் கரப்பந்தாட்டம் நடாத்தப்பட்டது. நேற்றைய போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்த வல்வை விளையாட்டுக் கழகம் , இறுதிப் போட்டியில் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக் கழகத்திடம் தோல்வியைத் தழுவியது.
சுகாதார அமைச்சு மற்றும் தேசிய இரத்தமாற்றுப் பிரயோக சேவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'உலக இரத்த நன்கொடையாளர் தினம்' எதிர்வரும் June 14 ஆம் திகதி, ஜனாதிபதி வாசஸ்தலத்தில் (Temples Trees) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.
தலையங்கத்தை இப்படி கேள்வியாகத் தொடங்கியதற்கு காரணமே அதனுள் அடங்கியிருக்கும் உண்மை பலருக்கு தெரிந்திருக்கும் என்பதே! 'அன்னபூரணி' கப்பலுக்கு இணையாக வேறு ஒரு கப்பலும் கட்டப்பட்டிருக்கவில்லை, எனவே இன்னுமொரு 'அன்னபூரணி' கப்பல் உள்ளதா? என்ற கேள்விக்கும் இங்கு இடம் இல்லை! அப்படியாயின் என்னதான் இந்தக் கட்டுரையில் அடங்கியுள்ளது?.
வல்வெட்டித்துறை ஊரணி பிரதேசத்தில் இன்று காலை வயோதிப மாது ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப் பட்டுள்ளவர் சோதிலிங்கம் தெய்வமலர் (வயது 64) என்று இனம் காணப் பட்டுள்ளார். இன்று காலை சுமார் 11.00 மணியளவில் உறவினர்களின் கவனத்துக்கு வந்த இந்த கொலைச் சம்பவம் பற்றிய மேலதிக எதுவும் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.