வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் அனுசரணையுடன் இன்று 09.06.2013 பிற்பகல் 3.30 மணியளவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான திரு.பிரேம் அவர்களின் ''கம்பிகளின் மொழி" எனும் கவிதை நூல் வெளியீடு இடம்பெற்றது.
நேற்று எமது இணையத்தளத்தில் வெளியாகியிருந்த "கம்பிகளின் மொழி" எனும் கவிதை தொகுப்பின், வெளியீடு சம்பந்தப்பட்ட செய்தியை தொடர்ந்து "வல்வையூரான்" பற்றிய சர்ச்சை உருவாகியிருந்தது. "கம்பிகளின் மொழி" எனும் கவிதை தொகுப்பை எழுதியிருந்தவர் திரு. பிரேம், இவர் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்.
யாழ்ப்பாணத்தின் தென்மாராட்சியிலுள்ள மிகவும் பிரசித்தமானதும், புராதனமுமான சுட்டிபுரம் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான இன்று, தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நேற்று வியாழக்கிழமை (06.06.2013) காலை 09.30 மணி தொடக்கம் பிற்பகல் 16.30 வரை பாலர்களின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வுகளின் மேலதிக புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி கணினி வள நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மாலை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. சி. நந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் ICT கிளையின் பணிப்பாளர் திரு.G.M. நீல் குணதாச அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
வல்வெட்டித்துறை சேர்ந்த செல்வன் நீதிராஜா வர்ணன் சக்தி TV யின் புதியதொரு அறிவிப்பாளாராகின்றார். சக்தி TV யின் காலை நிகழ்ச்சிகளில் ஒன்றான இன்றைய 'Good morning Srilanka' வில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இவர் மொறட்டுவ பல்கலை கழக பொறியியல் பிரிவின் இறுதியாண்டு மாணவர் ஆவார்.
'வீரகத்திப்பிள்ளை அன் சன்ஸ்' பின்பு 'இராசசேகரம் அன் சன்ஸ்' அதன் தொடராக 'வி.ஆர்.வடிவேற்கரசன்' நிறுவனமாக தேசிய நிறுவனமாக இயங்கி வந்த நிலையில் இவருடைய இழப்பு (1-06-2013ல்) அவரது குடும்பத்தினருக்கும் அவர் பிறந்தகமான தொண்டைமானாறுக்கும் பெரிய இழப்பாகும்.
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாட வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் சேவையின் வகுப்பு 3 -11 தரத்திற்கு ஆசிரியர்களைச் சேர்த்து கொள்வதற்காக டிப்ளோமாதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
VEDA கல்வி நிலையத்தில் தற்போது தரம் 09,10,11 ஆகிய வகுப்புக்களே நடைபெற்று வருகின்றன. பெற்றோர்களினதும், மாணவர்களினதும், மற்றும் நலன்விரும்பிகளினதும் வேண்டுகோளுக்கிணங்க VEDA 2014ம் ஆண்டில் 06,07,08 ஆகிய வகுப்புக்களையும் ஆரம்பிக்கவுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று 02.06.2013 பி. ப 02.30 மணிக்கு, வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் ( தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வருடத்தின் பொதுவான காலநிலைகளில் ஒன்றான தென்மேல் பருவக் காற்று (south west monsoon) ஆரம்பமானதைத் தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் நேற்றும் இன்றும் காற்றுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வருகின்றது. கொழும்பில் மேகமூட்டத்துடன் கூடிய மழை நேற்றும் இன்றும் அவ்வப்போது தொடர்கின்றது.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட தொடரின் முதலாவது போட்டிகள் இன்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது .
உணவு ஆணையாளர் திணைக்களத்தில் வெற்றிடமாக இருக்கும் மேற்பார்வை முகாமைத்துவ உதவி தொழில் நுட்ப உத்தியோகத்தர் (தானிய ஆய்வாளர் - தரம் 111) பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு தகுதியடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1929 இல் செய்யப்படிருந்த அன்னபூரணியின் நீளம் 90 அடி (133 அடி நீளம்). அனால் இப்போதைய பிந்தைய கப்பல்களின் நீளம் 1310 அடி. ஆகாய விமானகளும் இரு தட்டுக்களுடன் வரத் தொடங்குகின்றன. சீனாவில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட புகையிரதத்தின் வேகம் ஆகாய விமானகளைக் கலைக்கும் அளவிற்குள்ளது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கம் கலந்துரையாடலும் ஒன்றுகூடலும் கடந்த 27.05.2013 அன்று நடைபெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில் விபரங்கள், மற்றும் 28.04.2013 நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரங்களின் நகல்கள் என்பவற்றை வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் மிகச் சிறப்பாக வைகாசி விசாகப் பொங்கல் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தான் நடைபெறுவது வழமை. இதற்கமைய இம்முறையும் இவ் மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றதனை கீழுள்ள படங்களில் காணலாம்.
கணபதி பாலர் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப 02.00 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் வீதியில் திரு .ச . ஜெயகணேஸ் ( தலைவர் கணபதி படிப்பகம்) அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
நேற்றைய தினம் அம்மன் ஆலயங்களில் வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இவ் மகோற்சவம் பொதுவாக வருடத்தின் வைகாசி மாதத்தில் வரும் விசாக தினத்தில், அதாவது வைகாசிப் பூரணை தினத்திற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை அன்று மாலை வேளைகளை நடைபெறுவது வழக்கம்.
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 27.05.201 இன்று மாலை பூங்காவனத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிரபல பின்னணி பாடகர் T.M.சௌந்தரராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் டி.எம் சௌந்தரராஜன் டி.எம்.எஸ் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் இவர், 1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்.
சில தினங்களுக்கு முன்னர் நாம் 'இம்முறையும் வல்வையில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் பயிலும் மணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, ஒரு சிலரே க.பொ .த (சா/த) பரீட்சையில் சித்தியடையாதவர்களின் எண்ணிக்கை கவலைக்குரிய தொன்றாகவுள்ளதும் என்றும் செய்தி வெளியிட்டிருந்தோம். இதற்கு அதிருப்தி தெரிவித்து வாசகர் ஒருவர் விபரம் தெரிவித்துள்ளர்.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தில் (Images of Valvai), கடந்த மாதம் அன்னபூரணியின் அமெரிக்கா பயணத்தின் வைர விழாவின் ஆரம்ப நிகழ்வும், வல்வை வரலாற்று ஆவண காப்பகத்தின் முதலாவது நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. நடைபெற்றிருந்த நிகழ்வின் விபரங்கள் பின்வருமாறு, (பகுதி 2 நாளை பிரசுரமாகும்)
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 11.05.2013ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 15ஆம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 10ஆம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா இன்று காலை 0830 மணியளவில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 11.05.2013ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 14ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 9ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.