காண்டவனம் வருடா வருடம் சித்திரை மாத வசந்த காலத்தையொட்டி வருவதும், சுப காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாக உள்ளதுமான அக்கினி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்று 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவடைகின்றது.
இந்த வருடம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைத்திணைக்களம் அறிவித்துள்ளது.
VEDA கல்வி நிலையத்தில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடலானது ஒவ்வொரு தவணையும் VEDA நிலைய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட கலந்துரையாடலானது 2013.04.27 அன்று நமது VEDA நிலையத்தின் முன்றலில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சென். செபஸ்தியர் தேவாலயத்தின் புனரமைப்பு வேலைகளை பகுதி பகுதியாகப் பிரித்து, ஒவ்வொரு வேலைகளுக்கும் தேவையான நிதி விபரங்களை தெரிவிக்கும் படி புலம் பெயர் நாடுகளில் உள்ள வல்வை நலன்புரிச் சங்கத்தினர், மற்றும் வல்வை நலன் விரும்பிகள் கேட்டதிற்கு இணங்க,
ஆரம்பித்திருக்கும் கோடை காலத்தைத் தொடர்ந்து, வல்லை சம வெளிப் பகுதியில் ஆயிரக்காணக்கான வெளிநாட்டுப் பறவைகள் ஒன்று கூடுகின்றன. இக் கண்கொள்ளாக் காட்சியை யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியூடாக, வல்லை வெளியால் செல்லும் பயணிகள் பார்வையிட்டுச் செல்லுகின்றனர்.
இயக்குனர் பாலா தனது பிதாமகன் திரைப்படத்தில், படத்தின் முதல் காட்சியையே மயானத்தில் (சுடுகாட்டில்) காட்டியிருந்தார். இப்படம் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது. இக்காட்சி மூட நம்பிக்கைக்கு எதிராகக் காட்டப்பட்டிருந்தது. அத்துடன் ஒருவரின் வித்தியாசமான துணிச்சலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
கனடா (Toronto) வில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக பொங்கல் விழா எதிர்வரும் 24.05.2013 (வெள்ளிக்கிழமை)அன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு - விலை மதிப்பு திணைக்களத்தின் சட்ட அலுவலர் பதவிகள் இரண்டிற்கு தகமையுடைய இலங்கைப் பிரஜைகளிடம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Canada Toronto Blues கழகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த கூட்டம் எதிர்வரும் மே 12ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கனடா முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நில அளவித் திணைக்களத்தினால் நில அளவையாளர் நாயகத்தின் உத்தரவு பெற்ற பட வரைஞர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்காக நடத்தப்படும் பரீட்சை (2013) கொழும்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறவுள்ளது.
நடைபெற்று முடிந்த வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நிகழ்வாக குளித்தித் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. குளித்தி அபிசேஷகத்தை முன்னிட்டு நடைபெறும் இரவுத்திருவிழா கற்பூரத்திருவிழா (கற்பூரச்சட்டி) ஆகும்.
வல்வை மகளீர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் 'PM Foundation' எனும் அமைப்பினால் சில நாட்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்த வல்வெட்டித்துறை சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைகளின் ஒரு பகுதி தற்பொழுது பூர்த்தியடைந்துள்ளது.
நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களுக்காகஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்புக்கு இணங்க இலங்கை ஆசிரியர் சேவையில் 3 - 1 தரத்திற்கு ( தமிழ், ஆங்கிலம், சிங்களம் ) பட்டதாரி ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
நீண்ட காலமாக சிறந்த முறையில் பராமரிக்கப்படாமல் இருந்த, வல்வை சென்.செபஸ்தியர் தேவாலயத்திற்கு உதவ வல்வை நலன் விரும்பிகள் சிலர், சில மாதங்களின் முன்னர் உதவ முன்வந்ததையடுத்து, வல்வை சென். செபஸ்தியர் தேவாலய நிர்வாகம் முதற்கட்ட வேலைகளுக்கான விபரங்களை, அறிவித்திருந்தனர்.
தேர்த்திருவிழா முடிந்த பின் காத்தவாரயன் வெளிவீதி எழுந்தருளிய பின் கழுவேரி முன் படையலிட்டு பூசை நிகழ்வுகள் நடைபெற்றன . பூசை முடிந்த பின் பக்தர்கள் நேர்த்தி வைத்த கால்நடைகளுக்கு (ஆட்டுக்கடா, சேவல்) மஞ்சள் தண்ணீர்தெளிக்கபட்ட பின்னர், படையல் சோறு பக்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் ஒன்று திரண்டு வல்வை முத்துமாரி அம்மனை தரிசிக்க இங்கு வருகை தந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் கல்வி கற்ற சிதம்பராக்கல்லூரியை பார்வையிட பழைய மாணவர் தாய் சங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தது.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 14ம் நாளான இன்று பகல் 7மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் முத்துமாரியம்மன், முருகன் மற்றும் பிள்ளையார் தனித்தனி தேரில் ஏறி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 13ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவில் முத்துமாரியம்மன் சப்பறத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
வல்வை நலன் புரிச்சங்கத்தின் கலந்துரையாடலும், ஒன்றுகூடலும் (Discussion and Get to - gether) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 28.04.2013 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 11 ம் நாளான இன்று நண்பகல் 01.30 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவில் முத்துமாரியம்மன் வசந்தோற்சவம் (பூங்காவனம்) வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .
சிதம்பராகல்லூரி பழைய மாணவர்களின் விபரக்கோவை தயாரிக்கும் பணி பழைய மாணவர் மாபெரும் ஒன்றுகூடலில் ஆரம்பமாகவுள்ளது. இந்த விபரக்கோவையானது கல்லூரியுடன் தொடர்புகள் அற்றிருக்கும் உங்கள் நண்பர்களை ஒருங்கிணைக்க மிகவும் பயன்படும்.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 10 ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரியை தொடர்ந்து, இரவு 8மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இத் திருவிழாவில் அம்மன்,முருகன் மற்றும் பிள்ளையார் தண்டிகை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.