வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 10 ம் நாளான இன்று பகல் 10 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் முத்துமாரியம்மன் பூந்தொட்டி வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குறுகிய காலப்பகுதியில் நிறைவேற்றபட்டுள்ள இந்த வேலைதிட்டங்களை நேரில் பார்வையிட சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்கள் ஒன்று திரண்டு வல்வை முத்துமாரி அம்மனை தரிசிக்க இங்கு வருகை தந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் கல்வி கற்ற சிதம்பராக்கல்லூரியை பார்வையிட பழைய மாணவர் தாய் சங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 8ம் நாளான இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வேட்டைத் திருவிழாவிற்கான வசந்த மண்டப பூசை ஆரம்பமாகி ஒற்றை குதிரை வாகனத்தில் ஏறி, அம்பாள் வேட்டைக்கு புறப்பட்டார்.
வல்வை பொது விளையாட்டரங்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முதலாவது ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு, இன்று மாலை அவ விளையாட்டரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வல்வை சிதம்பராக்கல்லூரியின் இடைநிறுத்தப்பட்ட புதிய ஆண்கள் கழிப்பறை அமைக்கும் வேலைகள்
பழையமாணவர் சங்கத்தின் முயற்சியால் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. CWN ஆல் முன்னெடுக்கப்பட்ட சிதம்பராக்கல்லூரி புதிய கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் மாசி மாத ஆரம்பத்தில் முற்றாக நிறுத்தப்பட்டது.
வல்வெட்டிதுறையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வல்வை விளையாட்டுக்கழகத்திற்கும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணிக்குமிடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி, இன்று மாலை வல்வை பொது விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
வல்வை முத்துமாரியம்மன் கோவிலில் 4ம் நாளான இன்று காலை 10 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் ஆரம்பித்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விஜய புதுவருடத்திற்கான சிறப்பு பூசைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சிதம்பராக் கல்லூரி நலன் விரும்புவோர் வலையமைப்பானது (CWN - Chithambara well wishers network), தனது இணையதளமான http://www.cwnetwork.co.uk இல், கல்விசார் தகவல்கள் பல இணைப்பதை, CWN இனர் ஆரம்பித்துள்ளனர்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் 11.04.13 அன்று 11 காலை மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இவ் வருடாந்த மகோற்சவத்தை விளக்கும் வகையாக கீழ் வரும் கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது. வல்வையெம்பதியினிலே மனமுவந்து வந்தமர்ந்தது, வல்வைக்கு வாழ்வளித்த மாரியம்மையின் மகோற்சவகாலத் திருவிழாக்கள்.
ஆக்கம் -திரு.வ .ஆ.அதிரூபசிங்கம் .
வல்வெட்டித்துறைச் சேர்ந்த திருமதி நந்தகுமார் அமிர்தகுமாரி நேற்று (10/04/2013, புதன்கிழமை) கொழும்பில் காலமானார். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டஇவர் 'பபி அக்கா' என்று பொதுவாக மற்றவர்களால் அழைக்கப்பட்டு வந்திருந்தார்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் இன்று 11.04.13 காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பதினைந்து நாட்கள் நடைபெறவுள்ள இம்மகோற்சவத்தில், தேர் திருவிழா புதன்கிழமை (24.04.2013) அன்றும், அதனைத் தொடர்ந்து தீர்த்தத் திருவிழா வியாழக்கிழமை (25.04.2013) அன்றும் நடைபெறவுள்ளது.
எமது இணையதளத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே பக்கத்தில் பல செய்திககள், சந்திர உதயம் மற்றும் சந்திர அஸ்தமனம், அதிக Face book முகங்கள், வாசகர் கருத்துக்கள் போன்றவை இவற்றில் சிலவாகும்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் நாளை 11.04.13 கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் நடைபெறவிருக்கிறது. இதன் முன்னிகழ்வாக நேற்று காத்தவராய சுவாமி வீதி உலா நிகழ்வு நடைபெற்றிருந்தது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 11.04.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்த மகோற்சவத்தை முன்னிட்டு காத்தவராய சுவாமி விதி உலா நிகழ்வு நடைபெற்றது
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டும் விழா 23.11.2012 அன்று நடைபெற்றது யாவரும் அறிந்ததே. தற்பொழுது இக் கல்யாண மண்டபத்தின் ஆரம்பக் கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை கீழுள்ள படங்களில் காணலாம்.
நடந்து முடிந்த G.C.E (O/L) பரீட்ச்சையில், வல்வை சிவகுரு வித்தயாசாலை மாணவி செல்வி கணேசலிங்கம் கேசவி அவர்கள் 9 பாடங்களிலும் A பெற்று சித்தியடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 11ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24ஆம் திகதி தேர்த் திருவுழாவும், 25ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
வல்வை மண்ணில் பூப்பந்தாட்டம் ஏன் வளரவில்லை என்று வாசகர் ஒருவர் வினா எழுப்பியுள்ளார். அவர் எமக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் "பெண்களுக்கு ஏற்ற இந்த (பூப்பந்தாட்ட) விளையாட்டுக்கு முக்கியம் கொடுக்காமல், ஆண்களுக்கேற்ற கரப்பந்தாட்ட விளையாட்டை, ஏன் ஊரில் பெண்களுக்கு பழக்கி, போட்டிகளுக்கு கொண்டு போகின்றார்கள்?'' என குறிப்பிட்டுள்ளதுடன் ...
பருத்தித்துறை இளையோர் கழகத்தினால் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கிடையில் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி நடைபெற்று வந்தது.