க.பொ.த (சா/த) பரீடசையின் பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து, புதிய க.பொ.த (உ /த) வகுப்புக்கள் அண்மையில் ஆரம்பித்திருந்தமை அனைவரும் அறிந்ததே. இம்முறையும் வல்வெட்டித்துறையிலிருந்து க.பொ.த (உ /த) கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவேயுள்ளது.
Florence C Robinson, Ex அன்னபூரணியம்மாள் எனும் கப்பலானது 1936 ஆம் வருடம் வல்வெட்டித்துறையிலிருந்து புறப்பட்டு, பின்னர் கொழும்பு துறைமுகத்திலிருந்து அமெரிக் காவின் Gloucester துறைமுகத்தை சென்றடைந்த 75 ஆவது வருடத்தைச் (1st August 1938) சிறப்பிக்கும் முகமாக, எம்மால், அ. சி. விஷ்ணுசுந்தரம் நினைவு மையத்தினால் (Canada) அனுசரணையுடன் ஓவியப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாட்டில் இயங்கி வரும் கணபதி பாலர் பாடசாலைக்கு, புதிய மாடிக்கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சியினை கணபதி பாடசாலை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
CWN இனால் நடத்தப்படும் கணிதப்போட்டிக்கு பிரித்தானியா முழுவதும் இருந்து 1467 மாணவர்கள் பங்குபற்ற உள்ளார்கள். இக்கணிதப்போட்டியால் எமது கல்லூரிக்கும், எமது ஊருக்கும், இங்கிலாந்தில் வாழும் எம் ஊர் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு ஆகியவற்றின் ஒரு திட்டத்திற்கமைய, முன்னெட்டுக்கப்பட்டுவரும் வல்வெட்டித்துறை நீர் வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியான தொண்டைமானாற்றில் அமைந்துள்ள பாரிய நீர்த் தாங்கியின் வேலைகள் பூர்த்தியாகின்றது.
படங்களில் காணப்படுபவை புதிதாக கட்டப்பட்டு முடியும் தருவாயிலுள்ள தொண்டைமனாற்றுப் பாலம். இப்பாலம் யாழ்பாணத்தின் B 75 பாதையான யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது. இது வடமராட்சியையும் வலிகாமத்தையும் இணைக்கின்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 5ஆம் திருவிழா இன்று காலை 10 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த சுவாரசியமானதும் ஏற்கக்கூடியதுமான விடயம் எனது பேனையிலிருந்து எழுதப்படவில்லை. அத்துடன் இக்கட்டுரையில் உள்ள விடையங்களிற்கும் நான் உரிமை கூறவுமில்லை .
வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் அமைந்துள்ள ஊரணி தீர்த்த மண்டபத்தின் சில உடையும் நிலையிலிலுள்ள பகுதிகளைப் பிரஸ்தாபித்து வாசகர் ஒருவர் சில புகைப் படங்களை அனுப்பியுள்ளார்.
மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் 10 over கொண்ட மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அரை இறுதியாட்டம் , மாலிசந்தி மைக்கல்விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது.
நம்புவதற்குக் கடினம் தான். சுமார் 1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டுள்ள இக்கப்பல், Willaim Albert Robinson எனும் அமெரிக்காவைச் சார்ந்த தனவந்தரால் வாங்கப்பட்டு, வல்வெட்டித்துறை சிப்பந்திகளால் (தண்டையல்களால்) அமெரிக்காவின் Gloucester துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ‘மகாசென்’ (Tropical Cyclone), வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நேற்று அதிகாலையில் வங்கதேசத்தை கடந்தது, அதன் பின்னர் படிப்படியாகப் பலமிழந்து தொடர்ந்து வடகிழக்குத் திசையில் சுமார் 25 கடல் மைல்கள் வேகத்தில் வேகத்தில் நகர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராப் பகுதியைக் கடந்து சென்றுள்ளது.
தொண்டமானாறு கொருடாவில் பகுதியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 11.05.2013 சனிக்கிழமை அன்று ஆரம்பமானது. இவ் வருடாந்த மகோற்சவத்தின் 6ம் நாள் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு வங்காள விரிகுடாவிலிருந்து, தற்போது மணித்தியாலத்திற்கு சுமார் 15 knots வேகத்தில் வடகிழக்காக நகர்ந்து கொண்டிருக்கும் தாழமுக்கம் ‘மகாசென்’ ( Tropical Cyclone) இன்னும் சில மணித்தியாலங்களில் பங்களாதேஷின் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள, பழைய ஊறணி ஊற்றினைப் புனரமைக்கும் பணியை தமது அடுத்த முயற்சியாக மேற்கொள்ளவுள்ளதாக "PM foundation" தெரிவித்துள்ளது.
நேற்று காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன,
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரை தேடும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நேற்றைய முன்தினம் முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் "மகாசென்" நிலைகொண்டிருந்த தாழமுக்கம் (Severe cyclonic storm), தற்போது மணித்தியாலத்திற்கு சுமார் 15 knots வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது பங்களாதேஷ் மற்றும் மியன்மாரை அண்டிய கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று காலை வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இடி மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போன, வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த செல்வன் தங்கவேலாயுதம் அருளானந்தம் என்பவரை தேடும் பணி தொடர்கின்றது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக ((Severe Cropical cyclonic storm - Mahasen) வல்வெட்டித்துறையிலும் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ தாழமுக்கம் (Severe cyclonic storm), தற்போது மணித்தியாலத்திற்கு 10-20 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இரவு அல்லது புதன்கிழமை காலை பங்களாதேஷையோ அல்லது மியன்மாரையோ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 2013 ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் வல்வை நெட்கொலு கழுகுகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 1932 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி, யாழ் மாவட்டத்தின் வடமராட்சியிலுள்ள கரவெட்டி பிரதேசத்தில் பிறந்தார்.முன்னணி தமிழ் அறிஞராக ...
வல்வை நகரசபை தனது புதிய கட்டடத்தில், கடந்த பங்குனி மாதம் 18ஆம் திகதியிலிருந்து இயங்கத் தொடங்கியுள்ளது. 1990 இல் நிறைவேற்றப்பட்ட வல்வை நகர நிர்மாணத் திட்டத்தின் ஒரு பகுதியான இப்புதிய வல்வை நகரசபைக்கான அடிக்கல்லானது 1999 மே மாதம், வல்வை அம்மன் கோவில் குளித்தித் திருவிழா அன்று, அப்போதைய நகரசபைத் தலைவர் திரு.M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் நாட்டப்பட்டது.
இலங்கை -ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை (இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு) இல் தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழு நேரப் பயிற்சி நெறிக்கான அனுமதி -2013 ஆம் ஆண்டு அனுமதிக்கான ஆண்/ பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்களினால் (ஐ.இ) ஆரம்பிக்கப்பட்ட சிதம்பராக்கல்லூரி வலை அமைப்பினரால் (CWN) நடத்தப்படும் கணிதப்போட்டிக்கு இதுவரை 700க்கும் அதிகமான மாணவரகள் விண்ணப்பித்து உள்ளார்கள்.
2014 ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பபத்திரங்களை 2013 ஆம் ஆண்டு மே 6 ஆம் திகதி தொடக்கம் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை அலுவலக வேலை நாட்களில் மு.ப 9.00 மணி தொடக்கம் ந.ப 12.00 மணி வரையும், பி.ப 1.30 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரையும் சட்டக்கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை சட்டக் கல்லூரி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை காய்கறிச் சந்தை இதுவரை நடைபெற்று வந்த இடத்தில், புதிய சந்தைக்கான கட்டிட வேலைகள் ஆரம்பித்துள்ள காரணத்தால் சந்தையானது, தற்காலிகமாக காங்கேசன்துறை பருத்தித்துறை வீதியில் அம்பாள் வெதுப்பகத்திற்கு அருகாமையில் இயங்கி வருகின்றது.