வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வல்வை நகரசபையால் திறந்து வைக்கப்பட்டுள்ள 'வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா' வின் பெயர்ப்பலகையும், அங்கு நடப்பட்டிருந்த சில மரக்கன்றுகளும் இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது. க.பொ.த (உ/த) பரீட்சை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு இன்றாகும். கீழே இணைக்கப்பட்டுள்ளவை வல்வையில் வடிவமைக்கப்பட்டுவரும் அன்னபூரணி மாதிரியின் வரைபடங்கள் ஆகும்.
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு இன்றாகும். (பசுபிக் திகதி 01 ஆவணி 13).
வல்வெட்டித்துறை உடையா மணல் பகுதியில் அமைந்துள்ள யோக நாயகி கல்வி மையத்தில் கணித ஏணி (MATHS LADDER) என்னும் புதிய பாட முறையினை, அக்கல்வி நிலையத்தினை நிர்வகித்துவரும் பேராசிரியர் திரு.சபா இராஜேந்திரன் அவர்கள் ஆரம்பித்துள்ளார். இது சம்பந்தமாக திரு.சபா இராஜேந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள விபரம் பின்வருமாறு.
வல்வெட்டித்துறை கடல் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இழுவைப்படகு
(Trawler) தொழில் மீண்டும் இன்று ஆரம்பமாகியுள்ளது. ரேவடி மற்றும் கொத்தியால் வான்களிலிருந்து சில இழுவைப்படகுகள் இன்று அதிகாலை இத் தொழிலை ஆரம்பித்துள்ளன.
வல்வெட்டித்துறை உதய சூரியன் வல்வை உதய சூரியன் கழகத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவும், வருடாந்த விளையாட்டுப்போட்டியும் எதிர்வரும் 09,10,11 ஆகிய தினங்களில் வல்வெட்டித்துறை உதய சூரியன் உல்லாசக் கடற்கரை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எமது பிரதேசத்தைப் பற்றிய விடயங்களை எமது இணையதளத்தில் சிங்கள மொழியிலும் வெளியிட முடிவுசெய்துள்ளோம். தமிழில் பிரசுரிக்கப்பட்டுள்ள மிக முக்கிய விடயங்களை எதுவித கருத்து மாற்றமுமின்றி அவ்வாறே பிரசுரிக்கவுள்ளோம். இது எமது பிரதேசத்தை பற்றி அறியவிரும்பும் தென்னிலங்கை மக்களுக்கு ஒரு சிறு வாயிலாக......
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் (Management Faculty) தமது இறுதி ஆண்டின் நிகழ்வுகளாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றார்கள். சுற்றுலாவின் இறுதியாக மாணவர்கள் ரேவடி கடற்கரையில் படகோட்டத்தில் (Boating) ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட, வல்வெட்டித்துறை கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு இன்று காலை 09.00 மணியிலிருந்து மாலை 06.00 மணிவரை வல்வைச் சந்தியில் அமைந்துள்ள, வல்வெட்டித்துறை நகர சபை மண்டபத்தில் நடமாடும் சேவைகள் பிரதேச செயலாளர் திரு R.T ஜெயசீலன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் வல்வை நகரசபை சபையால் அமைக்க முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுப் பூங்கா முயற்சிக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுகாதார அமைச்சின் தாதி சேவையில் பதவிக்கான கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் பாடநெறிக்காக தேசிய பல்கலைக்கழகங்களில் தாதி பட்டத்தினைப் பெற்ற பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள தகுதியுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் வல்வை நகரசபை சபையால் அமைக்க முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுப் பூங்கா முயற்சிக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நாளை காலை 9.00 ......
வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள கப்பலுடையவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 28.07.2013 அன்று காலை 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில், வல்வெட்டித்துறை நகரசபையால் அமைக்க முன்னெடுத்துவரும் பொதுப் பூங்காவிற்கு காணிகளை நன்கொடையாக வழங்க பொதுமக்கள் இருவர் முன்வந்துள்ளனர். தற்பொழுது வல்வையில் வசித்து வரும் இரு நன்கொடையாளர்களிடமிருந்து அவர்களுக்கு சொந்தமான தலா 3 மற்றும் 1-1/2 பரப்புக்களை உதவ முன்வந்துள்ளதாக நகரசபை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. மேலும்..........
வல்வெட்டித்துறை மதவடியில் அமைந்துள்ள கப்பலுடையவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று காலை 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. இரவுத்திருவிழா மாலை 07.00 மணியளவில் பூசைகள் நடைபெற்று பிள்ளையார் வீதி உலா வந்தார்.
வல்வை சிவகுரு வித்தியாசாலையின் தரம் 10 யினைச் சேர்ந்த மாணவன் செல்வராசா விதுஷன் அவர்கள் மாகாண மட்டத்தில் நடைபெற்ற சமுக விஞ்ஞானப்போட்டியில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டார். சிவகுரு வித்தியாசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் வி.கழகத்தின் 60வது ஆண்டு விழா இன்று மாலை 05:00 மணியளவில், நெடியகாடு விளையாட்டு கழக மைதானத்தில், நெடியகாடு இளைஞர் வி.கழகத்தின் தலைவர் திரு.K. N தேவதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மாவட்ட மட்ட தடைக்கள போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை ம.மயூரன் 400m ஓட்டத்தில் முதலாம் இடத்தையும், முப்பாய்ச்சலில் 2ம் இடத்தையும், 200m ஓட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்று வல்வை விளையாட்டுக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 வது ஆண்டை முன்னிட்டு, அவ்விளையாட்டுக் கழகத்தினரால் நடாத்தப்பட்டு வரும் விளையாட்டுக்களின் தொடர்வாக இன்று மாலை தம்பதியினருக்கான சைக்கிள் ஓட்டம் மற்றும் வினோத உடைப்போட்டி நிகழ்சிகள் நடைபெற்றன.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 ஆண்டு விழாவை முன்னிட்டு வெளிக்கழகங்களிற்கு இடையிலான மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. முதலில் இல்லங்களிற்கிடையில் பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி தொண்டைமானாறு சந்தியிலிருந்து நெடியகாடு திருச்சிற்றம்ப பிள்ளையார் கோவில் வீதியில் முடிவடைந்தது.
பதினாறு தினங்கள் நடைபெறவுள்ள வருடாந்த மகோற்சவத்தின், பூங்காவனம் 15.08.2013 அன்று, சப்பறத்திருவிழா 18.08.2013 அன்று, தேர் திருவிழா 19.08.2013 அன்றும் அதனைத் தொடர்ந்து தீர்த்தத்திருவிழா 20.08.2013 அன்றும் நடைபெறவுள்ளது. அத்துடன் சந்நிதி கோயிலில் மட்டுமே நிகழும் '' பூக்காரர்'' திருவிழா 21.08.2013 அன்றும் நடைபெறும்.
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 ஆண்டு விழாவை முன்னிட்டு வெளிக்கழகங்களிற்கு இடையிலான கடல் விளையாட்டுக்களான நீச்சல், படகோட்டம், கட்டுமரம் வலித்தல் ஆகிய போட்டிகள் இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 15 June 13 அன்று எம்மால், அ.சி.விஸ்ணுசுந்தரம் நினைவு மையத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த அன்னபூரணி மாதிரி கப்பலின் வடிவமைப்புக்குரிய வரைபடம் தற்பொழுது பூர்த்தியாகியுள்ளது.
வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 0900 மணியளவில், முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினால் கோலவுடை வழங்கப்பட்டது.
மனுதாரர்களான பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுவீகரிக்கப்பட்டு குமரப்பா, மற்றும் புலேந்திரன் ஆகியோரின் நினைவுத் தூபியாகப் பயன்படுத்தப்பட்ட காணியை வல்வெட்டித்துறை நகர சபை பொறுப்பேற்று பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றம் எனக் குறிப்பிடப்பட்டே வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு..
வடமராட்சி கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட பௌர்ணமி தின நிகழ்வில் க.பொ.த(சா/த) பரீட்சையில் விசேட(9A) சித்தி பெற்ற வடமராட்சிப் பாடசாலை மாணவர்களும், வலயமட்டத்தில் பாடரீதியாக அதியுயர் சித்திவீதத்தனைப் பெற்ற பாடசாலைகளின் பாட ஆசிரியர்களும், கௌரவிக்கும் நிகழ்ச்சி வட இந்துக் கல்லூரியில் கடந்த 22.07.2013 அன்று நடைபெற்றது.