பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட ஜந்து Over களை கொண்ட மென்பந்தாட்ட தொடர் இன்று காலை வல்வை நெற்கொழு மைதானத்தில் நடைபெற்றது . இந்த சுற்றுப் போட்டியில் பதினான்கு கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் இரத்ததான முகாம் மாவட்ட (ஊரணி) வைத்தியசாலையில் இன்று காலை 9 மணியிலிருந்து 12.30 மணிவரை இரத்ததான முகாம் நடைபெற்றது.
உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட Setup முறையிலான கரப்பந்தாட்ட போட்டியின் முதலாவது சுற்றுத் தொடர் நேற்று மின்னொளியில் சிவகுமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
வல்வை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிடத் திறப்பு விழா நேற்று வெள்ளிக்கிழமை பி.ப 12.31-13.10 மணியளவில் நகராட்சி மன்றத் தலைவர் திரு நடராஜா அனந்தராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஊறணி வைத்தியசாலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை 9 மணியளவில் இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. இவ் இரத்ததான முகாமிற்கான பிரதான அனுசரணையைவல்வெட்டி ஒற்றுமை விளையாட்டு கழகத்தினர் வழங்குகின்றனர்.
வல்வை நகராட்சி மன்ற புதிய பணிமனைக்கட்டிடத் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பி.ப 12.31-13.10 மணியளவில் நகராட்சி மன்றத் தலைவர் திரு நடராஜா அனந்தராஜ் அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றமானது ஒவ்வொரு ஆண்டும் கலைவிழா , இலக்கிய போட்டிகள் சஞ்சிகை வெளியிடுதல் மற்றும் குறும் படம் தயாரித்தல் போன்றவற்றை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள் . அத்துடன் மாணவர்களின் பல்வேறு திறன்களை அதிகரிப்பதற்காக 17.02.2013 அன்று இலவச சங்கீதம் மற்றும் சித்திரம் போன்ற வகுப்புக்களை யும் ஆரம்பித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா 28ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் திரு மயில்வாகனம் சிவசூரிய அவர்கள் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் 6 அமர்வுகளைக் கொண்டதாக நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட எல்லே போட்டியானது , இன்று அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்டது.
சிதம்பரா கல்லூரியில் காற்றோட்டமான, சுகாதாரமான கழிப்பறைகளின் தேவையை பூர்த்தி செய்யுமுகமாக கடந்த நாற்பது நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட காற்றோட்டமுள்ள இலகுவாக பராமரிக்ககூடிய பெண்கள் கழிப்பறை அமைக்கும் வேலைகள் பூர்த்தியடைந்துள்ளது.
பல்துறைசார் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்கும் இலங்கை ஊடகவியல் கல்லூரி ஊடகத்துறை டிப்ளோமா கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
க.பொ.த. உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்கள் இவ் டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
சிதம்பராக் கல்லூரி நலன் விரும்புவோர் வலையமைப்பு (Chithambara College Well-wishers Network) - CWN மாணவ, ஆசிரிய, பெற்றோர்களுக்கு உதவும் முகமாக தமது புதிய இணைய தளத்தினை உருவாக்கியுள்ளது.
கெருடாவில் இந்து தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று மதியம் பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு க .உதயரூபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் ஓன்று கடந்த திங்கட்கிழமையன்று இரவு வேளையில் இனம்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பாடசாலைகளை அண்டியுள்ள வீதிகளில் பாதசாரிகள் கடவைகளை / மஞ்சள் கோட்டுக்கடவைகளை புதுப்பிக்கும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வல்வை குழவிகள் கலா மன்றம் முப்பரிமாண கலைப்படைப்புக்களையும், வானில் பறக்கும் முப்பரிமாண உருவப்பட்டங்களையும் உருவாக்கி வருகின்றது. தமது ஆக்கங்களிற்கும் உழைப்பிற்கும் ஊக்கமும் உதவியும் அளித்த உறவுகளிற்கு வல்வை குழவிகள் கலா மன்றம் தமது நன்றியை தெரிவித்து உள்ளது. வல்வை குழவிகள் கலா மன்றம் பற்றிய விவரணம் ஏற்கனவே எமது இணையதளத்தில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் இன்று மதியம் நெடுயகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மிகச் சிறப்பாக பாடசாலை அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் இன்று மதியம் நெடுயகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலய வீதியில் மிகச் சிறப்பாக பாடசாலை அதிபர் திரு. பூ . சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக மனித வள முகாமைத்துவ பீட (Human Resource Management Faculty) 3ம் வருட மாணவர்கள் இன்று வல்வெட்டித்துறை பிரதேசத்திற்கு தமது குழுவினருடன் விஜயத்தை மேற்கொண்டு வல்வெட்டித்துறையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றனர்.
முன்னாள் வல்வை விளையாட்டுக் கழக(valvai Bulus ) வீரர்களினால் வல்வை விளையாட்டுக் கழகத்திற்கு கடினபந்து உபரணங்கள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வானது வல்வை பொது விளையாட்டரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது.
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இன்று பி.ப 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு இரா ஸ்ரீ . நடராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் (VAISWA) 2013 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கமானது (VAISWA) தற்போது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் சனிக்கிழமை இன்று பி.ப 1.30 மணிக்கு சிதம்பரா கல்லூரி மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு ஆ.சிவநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் வருட மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு பூமாலை அணிவித்து வாண்ட் வாத்தியத்துடன் அவர்களை வரவேற்றனர்.
தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் எதிர்வரும் 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு . இரா . ஸ்ரீ நடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
வல்வையர் பலர் கலைத்துறையில் சாதனைகளை படைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு வரும் ஞாயிற்றுக்கிழமை 17/02/2013 அன்று வேம்படி,உடையாமணல் வீதியில் அமைந்துள்ள, கலாநிதி திரு.சபா. ராஜேந்திரன் அவர்களது இலவச கல்விக்கூடத்தில் வல்வை கலை கலாச்சார இலக்கியமன்றத்தினரால் இந்த இசை மற்றும் ஓவிய பயிற்சி பயிற்சிப்பட்டறை நடாத்தப்படவுள்ளது.