வல்வெட்டித்துறை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று நண்பகல் அளவில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
தீர்த்த மகோற்சவம் வல்வெட்டித்துறை ஊரணி தீர்த்தக் கடற்கரையில் நடைபெற் பின், சுவாமி தற்பொழுது வல்வை வைத்தீஸ்வரர் ஆலயத்தைச் சென்றடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்று நண்பகல் நடைபெற்றது. பத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகிருந்தது. தீர்த்தத்திருவிழா நாளை நடைபெறவுள்ளது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழாவில் இன்று பக்தர்கள் அலையென திரண்டிருந்தனர். இன்று முற்பகல் சுமார் 07:00 மணியளவில் பூஜைகளுடன் ஆரம்பித்திருந்த தேர் திருவிழா மதியம் வரை நீடித்திருந்தது. ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போலவே தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு...
நேற்று தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்றிருந்த இந்த சப்பற உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அமரர் வே .சோதிநாராயானசாமி (பரஞ்சோதியப்பா) மற்றும் சோ.சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று மாலை வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 14 ஆம் திருவிழாஇன்று காலை 09:30 மணியளவில் நிறைவுபெற்றது. இன்று காலை முற்று முழுதாக மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நாகபாம்பு வாகனத்தில் சுவாமி உலா வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று மாலை 09:00 மணியளவில் நிறைவுபெற்றது. நேற்றைய இரவுத் திருவிழாவின் போது பெண் கலைஞர்களின் (ஆண் கலைஞர்கள் உட்பட்ட) தவில் மற்றும் நாதஸ்வரம் கச்சேரிகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
வல்வெட்டித்துறைச் சேர்ந்த திரு.சீவரத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள 'ஆழ்கடல்கள் சென்றவர்கள்' எனும் நூல் வெளியீடு நேற்று வல்வை நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 04:00 மணியளவில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர்கள், ஆலயக் குருக்கள், அரச அதிகாரிகள் அதிபர்கள், கடலோடிகள், எழுதாளர்கள், சமூக ஆர்வலர்கள்..
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் நாள் பகல் திருவிழா இன்று காலை 09:30 மணியளவில் நிறைவுபெற்றன. நாளை சப்பறத் திருவிழா நடைபெறவுள்ளது. சப்பறத் திருவிழாவையொட்டி சப்பறப்பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நடந்து முடிந்த கணிதப்போட்டி (Mathematics Challenge 2013) மற்றும் நடைபெறவுள்ள கணிதப்போட்டி சம்பந்தமாக Children's Well-wishers Network (CWN) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், அதன் விபரம் பின்வருமாறு.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 12 ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று நிறைவெய்தியது. நாளை சப்பறத் திருவிழா நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து நாளை மறுதினம் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.
அமரர் வே .சோதிநாராயானசாமி (பரஞ்சோதியப்பா) மற்றும் சோ.சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப போட்டிகள் இன்று காலை வல்வை தீருவில் மைதானத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறைச் சேர்ந்த ஆறுமுகம் மதியழகன் என்னும் இளைஞர், மணற்காட்லிருந்து உந்துருளியில், வல்வெட்டித்துறை நோக்கி வருகையில் நேற்று முன்தினம், 15-08-13 அன்று மரணமடைந்துள்ளார். பிரேதபரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணைகளின் பிரகாரம் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுவரும் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, தொண்டைமானாறு விநாயகர் மின் அமைப்பினரால் முருகப்பெருமானின் மின் உருவம் ஒன்று உருவாக்கட்டுள்ளது. சுமார் 40 அடி உயரமான இவ் உருவம் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் நிறுவப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு வாயில் மற்றும் தங்க நீர்த்துறை ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. அண்மையில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த புதிய துறைமுகத்துக்கு (பகுதி), தற்பொழுது உலகத்தில் வாணிபத்தில் உள்ள பாரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான (CMA-CGM PEGASUS) வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் திருவிழா நேற்று நிறைவெய்தியது. வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
Florence க Robinson ex அன்னபூரணி எனும் வல்வையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்திருந்த பாய்மரக் கப்பலின் 75 ஆவது அகவை நினைவு கூறுமுகமாக பல்வேறு நிகழ்வுகள் பலரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் ஒரு நிகழ்வாக திரு.சீவரத்தினம் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள நூல் வெளியீடு நாளை (18-08-13) இடம்பெறவுள்ளது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 11 ஆம் நாள் பகல் திருவிழா நிறைவெய்தியது. பக்தர்களின் நேர்த்திகளான காவடி, தூக்குக் காவடி, பாற் சொம்பு, கற்பூரச் சட்டி, பஜனை போன்றவை பக்தர்களால் அனுஸ்டிக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
யாழ்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று நடைபெற்றிருந்தது. இரவு மகோற்சவம் மாலை 06:00 மணியளவில் ஆரம்பித்து இரவு 09:00 மணியளவில் நிறைவெய்தியது.
யாழ்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா இன்று நடைபெற்றிருந்தது. இன்று முற்பகல் சுமார் 09:00 மணியளவில் ஆரம்பமாகியிருந்த மகோற்சவம் சுமர்ர் 13:30 மணிவரை நீடித்திருந்தது.
செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மடை வாயிலுக்கு (Sluice gate) சமாந்தரமாக இவை இரண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வலிகாமத்திலிருந்து வரும் பக்தர்கள் சுமார் 2 1/2 Km தூரத்தினை மீதப்படுத்தக் கூடியதாகவுள்ளது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் திருவிழா நிறைவெய்தியது. மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நாளை நடைபெறவுள்ளது. பூஜைகள் முற்பகல் 09:00 மணியளவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்றுவரும் மகோற்சவத்தினை தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திகளான காவடி, தூக்குக் காவடி, பாற் சொம்பு, கற்பூரச் சட்டி, பஜனை போன்றவை பக்தர்களால் அனுஸ்டிக்கப் பட்டு வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. இனிவரும் அடுத்த நாட்களில் இவை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 9 ஆம் நாள் பகல் திருவிழா இன்று காலை நடைபெற்றது. படங்களில் இன்று காலை இடம்பெற்ற 9 ஆம் திருவிழா நிகழ்வுகளையும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் வழக்கத்தில் இருந்து வரும் பூக்காரர் மற்றும் அவர்களின் பணிகளையும் காணலாம்.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 8 ஆம் திருவிழா இன்று நடைபெற்றது. மகோற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் மிகவும் புகழ் பூத்த தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. படங்களில் இன்று மாலை இடம்பெற்ற 7 ஆம் திருவிழாவின் இரவு நிகழ்வுகளைக் காணலாம்.
விருந்தினர்கள் உரையினைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் கெளரவிக்கப்பட்டவர்கள் விபரம் பின்வருமாறு,
திரு. கனகசாபாவதிப்பிள்ளை (கவிஞர்)
திரு. மு . தங்கவேல் (முன்னாள் வல்வை வி.க தலைவர்)
திரு. க .தேவசிகாமணி (மூத்த விளையாட்டுவீரர், வல்வை உதயசூரியன் கழக மூத்த உறுப்பினர்)
இலங்கையில் மிகவும் புகழ் பூத்த முருகன் ஆலயமான செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 7 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. படங்களில் இன்று காலை இடம்பெற்ற 7 ஆம் திருவிழா நிகழ்வுகளையும் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் மட்டும் நிகழும் சிறுமிகள் விளக்கு எடுக்கும் நிகழ்வினையும் காணலாம்.