மேலே கூறப்பட்டுள்ளவைதான், அன்னபூரணியம்மாள் எனும் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்ட, வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்திற்குச் சென்றிருந்த ஒரு கப்பலின் சிறு விபரம்.
நம்புவதற்குக் கடினம் தான். சுமார் 1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டுள்ள இக்கப்பல், William Albert Robinson எனும் அமெரிக்காவைச் சார்ந்த தனவந்தரால் வாங்கப்பட்டு, வல்வெட்டித்துறை சிப்பந்திகளால் (தண்டையல்களால்) அமெரிக்காவின் Gloucester துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.
அன்னபூரணியம்மாள் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தை அடைந்ததின் 75 ஆவது வருடம் வரும் 01st Aug 2013.அன்னபூரணியின் முழுமையான வரலாறு பற்றி பெரும்பாலான வல்வெட்டித்துறை வாசிகளுக்கே தெரியாதது என்பது தான் கவலையளிக்கும் உண்மை.
William Albert Robinson இந்த அன்னபூரணியை அன்று வாங்காது விட்டிருந்தால், வல்வெட்டித்துறையில் முன்பிருந்திருந்த, பிரமிக்க வைக்கும் இந்தக் கப்பல் கட்டுமானக் கலைகளும், இக்கப்பல்கள் அந்தக் காலத்தில் கடல் கடந்த (Foreign going) வாணிபத்திற்கு செலுத்தியிருந்த மாலுமிகளையும் (தண்டையல்கள் ) பெரிதும் அறியாமல் போக நேர்ந்திருக்கும்.
இப்பொன்னாளில் கப்பல்களைச் செய்திருந்த கலைஞர்களையும், தண்டையல்கள் மற்றும் William Albert Robinson ஆகியோரை ஒருகணம் நினைவு கூர்ந்து, அன்னபூரணி மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட விபரங்களை நாம் வெளிக்கொணரவேண்டும்.