நாம் எமது இணையதளத்தை ஆரம்பித்ததிலிருந்து எமது இணையதளத்தின் செய்திகளை பல இணையதளங்கள் அவ்வப்போதும், அடிக்கடியும் பிரசுரித்து வருகின்றன. இவற்றில் ஒரு சில இணைய தளங்கள் மாத்திரம், சர்வதேச இணையதள விதிமுறைப்படி செய்திகளையும் படங்களையும் அப்படியே பிரசுரிக்கின்றன.
இவற்றில் வல்வையின் பெயரால் செய்திகளை வெளியிட்டுவரும் இணையதளமொன்று எமது பல செய்திகளை வெளியிட்டு வருகின்றது. எம்மத்தியில் மிகுந்த மரியாதையைக் கொண்டிருந்த இவ் இணையதளம், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் செய்திகளின் சில முக்கிய பகுதிகளை நீக்கியும், எமது படங்களில் உள்ள logo களை அழித்தும் (சரிவர அழிபடவில்லை என்பதும். தற்பொழுது படங்கள் சாதூரியம்ற வகையில் மாற்றப்பட்டுள்ளதும் வேறு விடயம்) செய்திகளை தாமே வெளியிடுவது போல் வெளியிட்டு எம்மை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
உதாரணமாகக் குறிப்பிடின் வல்வை நாயகி, புட்டனிப் பிள்ளையார் கோபுர நிர்மாணம், அன்னபூரணி மாதிரிக் கப்பல் வடிவமைப்பு போன்ற செய்திகளில் உள்ள கருப்பொருளான யார் இதைச் செய்கின்றார்கள் என்பது முற்றாக அழித்து, படங்களில் உள்ள logo களை அழித்து செய்தி வெளியிட்டுள்ளார்கள். இன்று சில வாசகர்கள் அளித்த தகவல்களின் பிரகாரம் முன்னரும் இது போன்று செய்துள்ளார்கள். நாம் அறிந்திருக்கவில்லை.
மேலும் வல்வெட்டிதுறையுடன் சம்பந்தப்பட்ட 'சில செய்திகளை' நாம் வெளியிடும் போது தாம் வெளியிடமால் இருப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றது போலும் தெரிகின்றது. "பொதுவான வல்வெட்டித்துறை" என்று இயங்கும் நோக்கில் உள்ள எமக்கு இவை மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது.
நாம் எமது சக்தி, நேரம் மற்றும் எமது சொந்தப்பணம் என்பவற்றைச் செலவழிப்பது - எமது நோக்கம் திரிவுபடுத்தப்படுவதற்கல்ல.
சிறு பிள்ளைத்தனமாக logo களை அழித்து, செய்திகளை, விருப்பமான வரிகளை நீக்கி, வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?
ஏன் இப்படிச் செய்கின்றார்கள்? இதன் உள் நோக்கம் என்ன ?
இவர்கள் ஒரு சமூகத்தை வழி நடாத்துபவர்களாக இருப்பின் இது கட்டாயம் சுட்டிக் காட்டப்படவேண்டும் என்பதற்காகவே இதை நாம் எழுதுகின்றோம். இது ஒன்றும் போட்டி பொறாமையால் எழுதப்படவில்லை எல்லோரும் ஒன்றாகச் செயற்படவேண்டும் .........என்பன போன்ற ஒவ்வாமையான வார்த்தைகள், இத் தலையங்கத்தைப் பார்த்தவுடன் சில ஊர்ப் பெரியவர்களிடமிருந்து வரக்கூடும். விடையளிக்க நாம் தயார், மேலுள்ள கேள்விகளுக்குரிய விடைகளுடன் வந்தால்.
நாம் ஏற்கனவே தெளிவாகக் தெரிவித்துளோம் - எமது செய்திகளை யாரும் எதுவித மாற்றமும் செய்யாமல் வெளியிடலாம் என்று. அதைச் செய்வதில் என்ன தயக்கம்.
எமக்கு யார் மீதுமோ, எந்த அமைப்பு மூலமோ எதுவித தனிப்பட்ட விரோதமும் இல்லை. நாம் குறிப்பிடும் சம்பந்தப்பட்ட இணையதளத்தை யார் கையாளுகின்றார்கள் என்று கூட நாம் இதுவரை சரியாக அறிந்திருக்கவில்லை - தேவைப்படவில்லை.
எமது தாழ்மையான வேண்டுகோள்
சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு மின்னஞ்சல் மூலம் எமது அதிருப்தியைத் தெரரிவித்துள்ளோம். நாம் மின்னஞ்சலில் குறிப்பிடதுபோல், இதுவரை பதில் கிடைக்கப்பெறவில்லை. எமது செய்திகளை மீள் பிரசுரிப்பதாயின் விதிகளைப் பின்பற்றுங்கள், செய்திகளின் முக்கிய விடயங்களை இருட்டடிப்பு செய்யாதீர்கள். மாறாகத் தாங்கள் தொடர்வதை நாம் தாங்கிக் கொள்ளத் தயாரில்லை.
சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Dear Admin / XXXXX,
This is regrettably to inform you that we intend to go for 'Copy right issue' against you through the respective bodies who looking after e-Copy right. How ever, in order to avoid unpleasantness we are informing you first prior to this move.
It is obvious that You are copying news and Photos, but ignoring our usual copy right policy, which we have mentioned clearly.
With the help of IT experts we have proved that the You have copied at least last two of our news with Photos.
We had great impression (earlier) on you that you are doing a good job towards VVT, but now we could realize the reality. We quite surprise why are you doing so?
We welcome your reply for solving the issue concerned, but we know that which will not be the case.
However We will not wait for your reply.
Hope the issue would get to an end rather than get into conflict.