வல்வெட்டித்துறை நெடியகாடு பிள்ளையார் கோவில் வடகிழக்கு மூலையில் கணபதி படிப்பகம். படிப்பகத்தின் பின்புறம் மகளிர் பாடசாலையின் பிரதான வாசல். நிழல்தரும் பெரு மரங்கள். ஒரு சுமைதாங்கி. வீதிக்கு வடக்காக நெருக்கமாக குடிமனைகள். அருகே மதவு. மதவின் கிழக்காக வலதுபுறம் மின்மாற்றி. இடது புறம் பஸ் தரிப்பிடம். அருகே மகளிர் கல்லூரியின் விளையாட்டு மைதானம். இது இந்நாளைய மகளிர் சுற்றாடல் அaமைப்பு.
நெடியகாடு - சுமைதாங்கியடி
ஆனால் “சவுக்கடி” ப் பழங்கதையின் காலத்தில் பிள்ளையார் கோவில் பின் வீதி கடந்து விட்டால் வருவது அந்த சுமைதாங்கியும் – மதவும் மட்டுமே. அந்த நாளில் மேற்குறித்த எதுவுமே அங்கில்லாததுடன் அந்த இடங்கள் அனைத்தும் புல்லும் – புதரும் மண்டிய பகுதியாகவே இருந்தது. தெணிக் கிணற்றடியால் திரும்பி ஓடிவரும் மழை வெள்ளம் வெற்றுக் காணியுடாக (இதுவே மகளிர் கல்லூரி அமைந்துள்ள இடம்) ஓடிவந்து மதவினூடாகப் பாய்ந்து கடலை சென்றடைகின்றது.
மதவின் கிழக்காக அடுத்த முடக்கு வரையிலும் (இடைக்காலத்தில் விறகு காலை இருந்த இடம் ) வீதியின் இரு புறமும் பெரிய சவுக்கு மரங்கள் நின்றிருந்தன. வீதியின் வடக்கு பக்கத்தை விட, வீதியின் தென்புறம் மிக நெருக்கமாக நின்ற சவுக்கு மரங்கள் மிக உயர்ந்து வளர்ந்து அடி பருத்துத் திரண்டிருந்தன. சவுக்கம் மரத்திலிருந்து உதிர்ந்து விழும் காய்ந்த சருகுகளும் விதைகளும் விழுந்து வீதியை மறைந்தபடி எப்போதும் இருக்கும்.
சிறுவர் இடுகாடு
மதவிலிருந்து கிழக்காக வீதிக்கு தெற்காக இரண்டு இருகாடுகள். மேற்கு புறமாக இறந்த குழந்தைகளின் உடலைப் புதைக்கும் பகுதி. கிழக்கு புறமாக இருப்பது ஊரின் கத்தோலிக்கர்களுக்கான இடுகாடு. இந்த இடத்தில் புதைக்கப்பட்ட இடங்களில் கட்டப்படும் கல்லறைகள் ஆங்காங்கே நிலத்தின் மேலாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. இரண்டு இடுகாடுகளுமே அந்நாளில் பற்றியும் பரட்டையும் மண்டிக் கிடக்கும் இடமாகவே இருந்தன.
அந்நாளில் பருத்தித்துறை பட்டனசபையிலிருந்து வல்வை பட்டினசபைக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. மதவடியில் உள்ள மின்கம்பத்தில் ஒரு குண்டு பல்ப் மின் விளக்கு. அடுத்த முடக்கில் (இடைக்காலத்தில் மரக்காலை இருந்த இடம்) ஒரு குண்டு பல்ப் மின் விளக்கு. இரண்டுமே குப்பி விளக்கு எரிகிற மாதிரி மினுக்.....மினுக் .....கென எரிந்தும் எரியாமலும் இருக்கும்.
முன்னர் சவுக்கடி
அந்நாளில் வசதிகூடிய ஒரு சிலரிடமே கார்கள் இருந்தன. மோட்டார் சைக்கிள் இல்லவே இல்லை. சைக்கிள்கள் ஓரளவு இருந்தன. அந்தச் சைக்கிள்களில் பெண்களை ஏற்றிக்கொண்டு டபிள் போவது மிக அரிது. இந்நிலையில் இந்திராணி வைத்தியசாலைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் நடந்தே செல்வர்.
நெடியகாட்டிக்குக் கிழக்காக அந்நாளில் பகலிலேயே சன நடமாட்டம் மிகக் குறைவாக இருக்கும். மாலைப்பொழுதின் கருக்கல் வேளையாகிவிட்டால் சொல்லவே தேவையில்லை. பகலிலும், இரவிலும் சவுக்கம் தோப்பினூடாக ஊ.........ஊ.......எனக் கேட்கும் காற்றின் பேரிரைச்சல் பெரும்பயத்தினை ஏற்ப்படுத்தும். இடுகாடுகளைத் தாண்டி செல்லும் நடைப் பயணமும் – சவுக்கந் தோப்பின் இரைச்சல் சத்தமும் சேர்ந்து வயிற்றில் புளியைக் கரைக்கும்.
மகளிர் பாடசாலை மைதானம்
இருட்டிவிட்டால் பெண்கள் அந்தப்பக்கம் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். மிக தைரியமான ஆண்கள் கூட, இரண்டு மின் விளக்குகளுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் கடக்கும் போது அடிக்கடி பின்புறம் திரும்பிப் பார்த்தபடி நடையின் வேகத்தைக்கூட்டி ஊரணி வைத்தியசாலையைச் சென்றடைவர். ஒரு சிலர் தெரிந்த தேவராப் பதிகங்களை வாய்விட்டு முணுமுணுத்தபடி நடைப்பெயணம் செய்வர்.
வீதிக்கு வடக்காக இருந்த சாவுக்கு மரங்கள் நாளாக நாளாக ஒவ்வொன்றாய் பட்டுப்போக, தென்புறமாக இருந்த சவுக்கு மரங்கள் நீண்ட காலம் நிலைத்திருந்தன. வல்வை பட்டினசபையிடமிருந்து மின்சாரம் சம்பந்தமான அனைத்துப் பொறுப்புக்களையும் மின்சார சபை ஏற்றுக்கொண்டதும், உயர் மின் அழுத்த இணைப்புக்களுக்காக மிச்சம் மீதியாக இருந்த சவுக்கு மரங்களும் வெட்டப்பட அந்தப் பாதையின் பயணத்தில் இருந்த பாதிப்பயம் போய்விட்டது.
மதவும் மகளிர் பாடசாலையும்
மகளிர் பாடசாலையும் வந்து விட்டது. வடபுறமான காணிகள் சுவீகரிக்கப்பட்டும், தனியார் சிலரால் நன்கொடையாக வழங்கப்பட்டும் – பெறப்பட்ட இடங்கள் சுத்தமாக்கப்பட்டு மகளிர் மாணவிகளின் மைதானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சன நெருக்கம் காரணமாக வீதிப் போக்குவரத்தும் அதிகரித்துவிட்டது.
மின்விளக்குகள் பிரகாசமாக ஒளிர்கின்றன. இந்தக் காரணங்களால் அந்தப்பாதையின் பயணத்தில் இருந்த இடுகாடுகளின் பயமும் இல்லாது.